உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள் ஆங்கிலம்: Subdivisions of Indonesia; இந்தோனேசியம்: Pembagian Administratif Indonesia) என்பது இந்தோனேசியாவின் நிர்வாகப் பிரிவுகள்; நான்கு நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.[1]

முதலாம் நிலை

[தொகு]

பிரிவு

[தொகு]

இந்தோனேசியாவின் முதலாம் நிலை நிர்வாக அமைப்பு என்பது பிரிவு அல்லது புரோவின்ஸ் (ஆங்கிலம்: Province இந்தோனேசியம்: Provinsi) என்று அழைக்கப்படுகின்றது. ஒரு பிரிவு ஓர் ஆளுநரின் (Governor; Gubernur) தலைமையில் உள்ளது.

ஒவ்வொரு பிரிவும் பிராந்திய மக்கள் பிரதிநிதி மன்றம் (Regional People's Representative Council; Dewan Perwakilan Rakyat Daerah) என்று அழைக்கப்படும் அதன் சொந்த பிராந்திய நிர்வாக மன்றத்தைக் கொண்டுள்ளது.

ஆளுநர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்தோனேசியா 38 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 9 பிரிவுகளுக்கு சிறப்புத் தகுதி உள்ளது:

இந்தோனேசியப் பிரிவுகள்

இரண்டாம் நிலை

[தொகு]

இந்தோனேசியாவின் இரண்டாம் நிலை நிர்வாக அமைப்பு என்பது மாநிலம் அல்லது ரீசன்சி; மாநகரம்; (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota) என்று அழைக்கப்படுகின்றது. இந்த உட்பிரிவுகள் மாநில மட்டத்திற்கு கீழே உள்ள அரசாங்கத்தின் உள்ளூர் மட்டமாகும்.

இருப்பினும், பொதுப் பள்ளிகள் மற்றும் பொது நலன் வசதிகளை வழங்குதல் போன்ற செயல்பாடுகளில் அதிக உரிமையைப் பெற்றுள்ளன. இவை முன்பு மாவட்ட இரண்டாம் நிலை வட்டாரங்கள் (Daerah Tingkat II; Level II Region) என்று அழைக்கப்பட்டன.[3]

மாநில மாநகரத் தகுதிகள்

[தொகு]

மாநிலம் மற்றும் மாநகரம் இரண்டும் ஒரே தகுதியில் உள்ளன. அவற்றுக்குச் சொந்தமான உள்ளூர் அரசாங்கம் மற்றும் சட்டமன்ற அமைப்பு உள்ளது. பொதுவாக மாநிலப் பிரிவு நகரப் பிரிவை விட பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது; மேலும் மாநகரப் பிரிவிற்கு இல்லாத வேளாண்மை; பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

ஒரு மாநிலத்திற்கு ஒரு மாநிலத் தலைவர் உள்ளார். இவரைப் பூபதி (Bupati) என்று அழைக்கிறார்கள். ஒரு மாநகரத்திற்கு மாநகர மேயர் (முதல்வர்) உள்ளார். இவரை வாலி கோத்தா (Wali Kota) என்று அழைக்கிறார்கள். மாநிலத் தலைவர்; மாநகர மேயர் மற்றும் பிரதிநிதி மன்ற உறுப்பினர்கள்; ஐந்தாண்டு காலத்திற்கு மக்களின் தேர்தல் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மூன்றாம் நிலை

[தொகு]

இந்தோனேசியாவின் மூன்றாம் நிலை, மாவட்டம் (ஆங்கிலம்: District இந்தோனேசியம்: Kecamatan, Distrik, Kapanewon, Kemantren) என்று அழைக்கப்படுகிறது. மாநிலம் மற்றும் மாநகரம்; இவை இரண்டும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விதிமுறைகள் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

ஓர் அரசு ஊழியர், மாநிலம் அல்லது மாநகரத்திற்கு மாநிலத் தலைவர் அல்லது மாநகர மேயர் எனும் பொறுப்பு வகிக்கிறார்.[4]

மாவட்டத் தலைவர் (Kepala Distrik) ஒரு மாவட்டத்திர்கு தலைமைப் பொறுப்பு வகிக்கிறார். இந்த முறைமை மேற்கு நியூ கினி உள்ள மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.[5]

நான்காம் நிலை

[தொகு]

இந்தோனேசியாவின் நான்காம் நிலை, கிராமம் அல்லது துணை மாவட்டம் (ஆங்கிலம்: Village/Subdistrict இந்தோனேசியம்: Desa / Kelurahan) என்று அழைக்கப்படுகிறது.

மாவட்டங்கள் தனிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கிராமங்கள் (Desa) அல்லது நகர்ப்புற சமூகங்கள் (Kelurahan) என அழைக்கப் படுகின்றன.

புள்ளி விவரங்கள்

[தொகு]

பின்வரும் அட்டவணை இந்தோனேசியாவின் தற்போதைய பிரிவுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது.

நிலை வகை
(தமிழ்)
வகை
(இந்தோனேசியம்)
வகை
(ஆங்கிலம்)
அரசு தலைவர்
(இந்தோனேசியம்)
அரசு தலைவர்
(ஆங்கிலம்)
எண்ணிக்கை
I பிரிவு அல்லது புரோவின்ஸ் Provinsi Province Gubernur Governor 38[6]
II மாநிலம் அல்லது ரீசன்சி Kabupaten Regency Bupati Regent 416[7]
மாநகரம் Kota City Wali Kota Mayor 98[7]
III மாவட்டம் Kecamatan, distrik, kapanewon, kemantren District Camat, kepala distrik, panewu, mantri pamong praja Head of district 7,266[7]
IV கிராமம், துணை மாவட்டம் Desa, kelurahan Village/subdistrict Kepala desa, lurah Head of village/subdistrict 83,467[7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Undang-Undang Republik Indonesia Nomor 23 Tahun 2014 tentang Pemerintah Daerah". Law இல. 23 of 2014 (in இந்தோனேஷியன்). House of Representatives.
  2. "Undang-Undang Republik Indonesia Nomor 32 Tahun 2004 tentang Pemerintah Daerah". Law இல. 32 of 2004 (in இந்தோனேஷியன்). House of Representatives.
  3. "Indonesia Regencies". www.statoids.com. 2012-12-31. பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
  4. "Peraturan Pemerintah RI Nomor 17 tahun 2018 tentang Kecamatan". Government Regulation இல. 17 of 2018 (PDF) (in இந்தோனேஷியன்). Government of Indonesia. Archived (PDF) from the original on 4 April 2019.
  5. "Peraturan Pemerintah Pengganti Undang-Undang Nomor 1 Tahun 2008 tentang Perubahan Atas Undang-Undang Nomor 21 Tahun 2001 Tentang Otonomi Khusus Bagi Provinsi Papua". Government Regulation in Lieu of Law இல. 1 of 2008 (in இந்தோனேஷியன்). Government of Indonesia.
  6. Sutrisno, Eri (28 November 2022). "Sekarang Indonesia Punya 38 Provinsi" (in இந்தோனேஷியன்). Indonesia.go.id. பார்க்கப்பட்ட நாள் 24 January 2023.
  7. 7.0 7.1 7.2 7.3 "Kemendagri Mutakhirkan Kode, Data Wilayah Administrasi Pemerintahan dan Pulau di Seluruh Indonesia". Ministry of Home Affairs (Indonesia). 1 April 2022. பார்க்கப்பட்ட நாள் 24 January 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]