இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஜெயமோகன் எழுதிய தத்துவ நூல்.இது அவரின் முதல் தத்துவ நூல். இது ஞானமரபு என்பது இந்து மதம் என இன்று அறியப்படும் சிந்தனைப்போக்கின் ஒட்டுமொத்தமான வடிவம் என்று இந்நூலில் ஜெயமோகன் வரையறை செய்கிறார். கிழக்கு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. 200 பக்கங்கள் கொண்ட நூல். சோதிப் பிரகாசம் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்.நாராயண குருவும் , நடராஜ குருவும் , நித்ய சைதன்ய யதியும் வளர்த்தெடுத்த சிந்தனையோட்டத்தின் நீட்சிதான் இந்நூல் என இந்நூலின் நுன்முகத்தில் ஜெயமோகன் தெரிவிக்கிறார்.

நூல் கூறும் கருத்துகள்[தொகு]

இந்த சிந்தனை மரபானது ஆன்மீகம் மட்டும் அடங்கியதல்ல. அதற்கு நேர் எதிரால உலகியல் சிந்தனைகளும் நாத்திக சிந்தனைகளும் கொண்டது. அவ்விரு போக்குகளும் இணைந்தே இந்து ஞானம் செயல்பட்டது

காலப்போக்கில் ஆன்மீக சிந்தனைகள் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு எதிரான சிந்தனைகள் மறைய நேரிட்டது. இந்நூலில் ஜெயமோகன் அந்த சிந்தனைகளை சுருக்கமாக விளக்குகிறார். இந்திய சிந்தனை மரபின் பொது அமைப்பு என்பது வேதங்கள், மூன்று தத்துவங்கள் (உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம்), ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம்).

இவற்றில் ஆறுதரிசனங்களில் இரண்டைத்தவிர மீதி உள்ள நான்குமே உலகியல் சிந்தனைகள்தான். பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் இரண்டு மட்டுமே ஆன்மீக சிந்தனைகள். சாங்கியம், யோகா, வைசேடிகம், நியாயம் (இந்து தத்துவம்) ஆகியவை உலகியல் நோக்குள்ளவை. கடவுள் இல்லாத பிரபஞ்சத்தைப்பற்றி பேசுபவை.

வெளி இணைப்புகள்[தொகு]