இந்திய சட்டமன்றத் தேர்தல்கள், 2016
இந்தியாவின் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதி இவைகளுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் 2016ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றன. இந்த மாநிலங்களிலும் ஒன்றியப் பகுதியிலும் அனைத்து தேர்தல் செய்முறைகளும் மார்ச்சு 11இல் துவங்கி மே 21, 2016க்குள் முடிவுற்றன. இந்த தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட மார்ச் 4, 2016 முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் இத்தொகுதிகளில் நடைமுறைக்கு வந்தன.
தமிழ்நாடு
[தொகு]234 தொகுதிகளுக்கு ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
| தேதி | நிகழ்வு |
|---|---|
| 22 ஏப்ரல் | மனுத்தாக்கல் ஆரம்பம் |
| 29 ஏப்ரல் | மனுத்தாக்கல் முடிவு |
| 30 ஏப்ரல் | வேட்புமனு ஆய்வு நாள் |
| 2 மே | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
| 16 மே | ஒரேகட்ட வாக்குப்பதிவு |
| 19 மே | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
மேற்கு வங்கம்
[தொகு]மேற்கு வங்க சட்டப்பேரவையின் 294 தொகுதிகளுக்கான தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெற்றது.
| தேதி | நிகழ்வு |
|---|---|
| 11, 14 மார்ச், 22 மார்ச், 28 மார்ச், 1 ஏப்ரல், 4 ஏப்ரல், 11 ஏப்ரல் | மனுத்தாக்கல் ஆரம்பம் |
| 18, 21 மார்ச், 29 மார்ச், 4 ஏப்ரல், 8 ஏப்ரல், 11 ஏப்ரல், 18 ஏப்ரல் | மனுத்தாக்கல் முடிவு |
| 19, 22 மார்ச், 30 மார்ச், 5 ஏப்ரல், 9 ஏப்ரல், 12 ஏப்ரல், 19 ஏப்ரல் | வேட்புமனு ஆய்வு நாள் |
| 21, 26 மார்ச், 1 ஏப்ரல், 7 ஏப்ரல், 11 ஏப்ரல், 16 ஏப்ரல், 21 ஏப்ரல் | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
| 4 ஏப்ரல் & 11 ஏப்ரல் 2016 | முதற் கட்ட வாக்குப்பதிவு (இருவேறு நாட்களில் நடந்தாலும், ஒரே கட்டமாக கணக்கிடப்படும்.) |
| 17 ஏப்ரல் 2016 | இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு |
| 21 ஏப்ரல் | மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு |
| 25 ஏப்ரல் | நான்காம் கட்ட வாக்குப்பதிவு |
| 30 ஏப்ரல் | ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு |
| 5 மே | ஆறாம் கட்ட வாக்குப்பதிவு |
| 19 மே | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
கேரளா
[தொகு]140 தொகுதிகளுக்கு ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
| தேதி | நிகழ்வு |
|---|---|
| 22 ஏப்ரல் | மனுத்தாக்கல் ஆரம்பம் |
| 29 ஏப்ரல் | மனுத்தாக்கல் முடிவு |
| 30 ஏப்ரல் | வேட்புமனு ஆய்வு நாள் |
| 2 மே | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
| 16 மே | ஒரேகட்ட வாக்குப்பதிவு |
| 19 மே | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
அசாம்
[தொகு]அசாம் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[1]
| தேதி | நிகழ்வு |
|---|---|
| 11 & 14 மார்ச் | மனுத்தாக்கல் ஆரம்பம் |
| 18 & 21 மார்ச் | மனுத்தாக்கல் முடிவு |
| 19 & 22 மார்ச் | வேட்புமனு ஆய்வு நாள் |
| 21 & 26 மார்ச் | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
| 4 ஏப்ரல் | முதல் கட்ட வாக்குப்பதிவு |
| 11 ஏப்ரல் | இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு |
| 19 மே | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
சில்சார், திசுப்பூர், கௌகாத்தி கிழக்கு, கௌகாத்தி மேற்கு உட்பட 10 தொகுதிகளில் வாக்கை தாளில் சரிபார்க்கும் வசதி செய்யப்பட்டது. பாசக போடோலாந்து மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்தது.[2] முதல் கட்டமாக ஏப்பிரல் 4 அன்று 65 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக ஏப்பிரல் 11 அன்று 61 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றன. பாசகவும் அசாம் கன பரிசத்தும் கூட்டணி சேர்ந்துள்ளதாக அறிவித்தன.[3] முதல் கட்டத்தில் தனக்கு ஒதுக்கப்படாத பிசுவந்து, காளிகோன் தொகுதிகளில் அசாம் கன பரிசித்து வேட்பாளர்களை அறிவித்தது. அங்கு பாசகவுடன் நட்பு ரீதியான போட்டியிருக்கும் என்று கூறியது.[4] 126 உறுப்பினர் சட்டப்பேரவைக்கு பாசக 88 வேட்பாளர்களை அறிவித்தது.[5]
வாக்குப் பதிவு
[தொகு]| கட்டம் | வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை | வாக்குப்பதிவு சதவீதம் |
|---|---|---|
| முதற் கட்டம் | 65 | 78% |
| இரண்டாம் கட்டம் | 61 | 78.09[6] |
புதுச்சேரி
[தொகு]30 தொகுதிகளுக்கு ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
| தேதி | நிகழ்வு |
|---|---|
| 22 ஏப்ரல் | மனுத்தாக்கல் ஆரம்பம் |
| 29 ஏப்ரல் | மனுத்தாக்கல் முடிவு |
| 30 ஏப்ரல் | வேட்புமனு ஆய்வு நாள் |
| 2 மே | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
| 16 மே | ஒரேகட்ட வாக்குப்பதிவு |
| 19 மே | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "EC announces poll schedule in five states; May 19 is Decision Day". indianexpress. Retrieved 4 மார்ச் 2016.
- ↑ "BJP forms alliance with Bodoland Peoples' Front for Assam elections". timesofindia. Retrieved 13 மார்ச் 2016.
- ↑ "BJP, AGP to jointly fight Assam Assembly polls". த இந்து. Retrieved 13 மார்ச் 2016.
- ↑ "Assam polls: AGP first list out, 'friendly fight' with BJP in some seats". indianexpress. Retrieved 13 மார்ச் 2016.
- ↑ "BJP Announces Names Of 88 Candidates For Assam Assembly Elections". ndtv. Retrieved 13 மார்ச் 2016.
- ↑ "2016 Assam Assembly Elections: Phase 2: As it happened". thehindu. Retrieved 21 ஏப்ரல் 2016.
உசாத்துணை
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பத்திரிகைக் குறிப்பு பிடிஎஃப்
- இந்தியத் தேர்தல் ஆணைய தமிழ்நாட்டுப் பிரிவின் இணையதளம்
- இந்தியத் தேர்தல் ஆணைய மேற்கு வங்கப் பிரிவின் இணையதளம்
- இந்தியத் தேர்தல் ஆணைய கேரளப் பிரிவின் இணையதளம்
- இந்தியத் தேர்தல் ஆணைய அசாம் பிரிவின் இணையதளம்
- இந்தியத் தேர்தல் ஆணைய பாண்டிசேரிப் பிரிவின் இணையதளம்