இந்திய கடற்படை- குர்சுரா
கடலில் மிதக்கும் குர்சுரா
| |
கப்பல் (இந்தியா) | |
---|---|
பெயர்: | ஐஎன்எஸ் குர்சுரா |
கட்டியோர்: | லெனின்கிராட், சோவியத் ஒன்றியம் |
வெளியீடு: | 25 பிப்ரவரி 1969 |
பணியமர்த்தம்: | 18 டிசம்பர் 1969 |
பணி நிறுத்தம்: | 27 பிப்ரவரி 2001 |
அடையாளம்: | S20 |
விதி: | விசாகப்பட்டினம் ஆர். கே. கடற்கரையில் அருங்காட்சியகக் கப்பலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. |
குர்சுரா (INS Kursura (S20)) என்பது இந்தியக் கடற்படையின் 1969 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட பிரமாண்டமான நீர்மூழ்கிக் கப்பலாகும். இந்தியாவின் நான்காவது நீர்மூழ்கிக் கப்பலான இது 18 டிசம்பர் 1969 இல் கப்பற் படையில் சேர்க்கப்பட்டது. இக்கப்பலானது 1971இல் இந்தியா-பாக்கித்தான் போரில் சிறப்பாகப் பணியாற்றியது. இந்த நீர்மூழ்கிக் கப்பலானது உருசியாவால் கட்டப்பட்டது.
இது 91.3 மீட்டர் நீளமுடையது. 8 மீட்டர் அகலம் உடையது. இதன் மொத்த எடை 1945 டன் ஆகும். நீருக்கு அடியில் இதன் எடை 2469 டன் ஆகும். தன்னுடைய 32 ஆண்டுப் பணிகளுக்குப் பிறகு 27 பிப்ரவரி 2001 அன்று இதற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது விசாகப்பட்டினத்தின் ஆர். கே. கடற்கரையில் ஒரு அருங்காட்சியகமாக வைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு அவர்களால் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1][2]
புகைப்படங்கள்
[தொகு]-
நீர்மூழ்கிக் கப்பலின் பார்வை
-
ஒரு கப்பல் அதிகாரியின் அறை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Submarine Museum | Indian Navy". www.indiannavy.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
- ↑ "Visakhapatnam Metropolitan Region Development Authority-VMRDA". vmrda.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.