இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955
Jump to navigation
Jump to search
இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955 | |
---|---|
இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955 | |
சான்று | Act No. 25 of 1955 |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
இந்து திருமணங்கள் சட்டம் 1955 என்பது இந்து சமயத்தினை சார்ந்தவர்கள் மேற்கொள்ளும் திருமணத்திற்காக இயற்றப்பட்டதாகும். இச்சட்டம் இந்து திருமண சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சட்டத்தின் மூலமாகவே இந்து சமய திருமணங்களும், திருமண முறிவுகளும் நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படுகின்றன.
இந்த சட்டம் இந்தியாவில் வாழுகின்ற இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி ஆகியவர்களைத் தவிற பிற அனைத்து மதம் மற்றும் சாதிப்பிரிவுக்களுக்கானதாகும். இச்சட்டமே திருமணத்திற்கும், திருமண முறிவிற்குமானதாக உள்ளது.[1]
திருமணத்திற்கு வழிமுறை[தொகு]
திருமணத்திற்கு இச்சட்டம் சில வழிமுறைகளைக் காட்டுகிறது.
- திருமணம் செய்யப்போகும் மணமகன் மற்றும் மணமகளுக்கு வாழ்க்கைத் துணை (கணவனோ, மனைவியோ) இருக்ககூடாது.
- மணமகனும், மணமகளும் மனரீதியாக தெளிவாக இருக்க வேண்டும். அதாவது மனபிறழ்வு, மனநோய் போன்றவை இருக்க கூடாது.
- காதல் திருமணமோ, பெற்றோர் உற்றோர் நடத்தும் திருமணமோ மணமக்களின் சம்மதத்துடனே நடக்க வேண்டும்.
- மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் முழுமையாக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
- மணமக்கள் பொருந்தாத உறவினர்களாக இருக்ககூடாது.