சிறப்புத் திருமணச் சட்டம், 1954

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறப்புத் திருமணச் சட்டம், 1954
சில சந்தர்ப்பங்களில் சில திருமணங்களை பதிவு செய்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும் ஒரு சிறப்பு திருமண வடிவத்தை வழங்குவதற்கான சட்டம்.
சான்றுAct No.43 of 1954
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்
சம்மதிக்கப்பட்ட தேதி9 அக்டோபர் 1954

சிறப்புத் திருமணச் சட்ட, 1954 ( Special Marriage Act, 1954) சடங்கு முறை திருமணம் அல்லது பதிவுத் திருமணம் மற்றும் திருமண முறிவு தொடர்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடிமக்களுக்காக இந்திய நாடாளுமன்றத்தில் 1954ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சிறப்புச் சட்டமாகும்.[1] இச்சட்டம் எந்த வகையிலும் கிறித்தவ, இசுலாமிய மற்றும் இந்து சமய தனிச் சட்டங்களை பாதிக்காது.[2]

பொருந்தும் தன்மை[தொகு]

  1. எந்த நபரும், மதத்தைப் பொருட்படுத்தாமல் இச்சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவுத் துறையில் பதிவு செய்து கொள்ளலாம்.[3]
  2. இந்துக்கள், முஸ்லீம்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் அல்லது யூதர்களும் சிறப்புத் திருமணச் சட்டம், 1954-ன் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.[3]
  3. மதங்களுக்கு இடையேயான திருமணங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றது.[3]
  4. இந்தச் சட்டம் இந்தியாவின் முழுப் பகுதிக்கும் பொருந்தும் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்களாக இருக்கும் கணவன்-மனைவிகளுக்குப் பொருந்தும்.[3]

தேவைகள்[தொகு]

  1. சிறப்பு திருமணச் சட்டம், 1954-ன் கீழ் செய்யப்படும் திருமணம் ஒரு குடிமை ஒப்பந்தமாகும். அதன்படி சடங்குகள் அல்லது சம்பிரதாயத் தேவைகள் எதுவும் தேவையில்லை.[4]
  2. இரு தரப்பினர் (மண மக்கள்) குறிப்பிட்ட படிவத்தில் திருமணத்திற்கான அறிவிப்பை மாவட்டத் திருமணப் பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.[5]
  3. உத்தேசித்துள்ள திருமணத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்கள் முடிவடைந்த பிறகு, யாரேனும் ஆட்சேபிக்காத பட்சத்தில், திருமணத்தை பதிவாளர் பதிவு செய்வார்.
  4. குறிப்பிட்ட பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் நடத்தலாம்.[5]
  5. திருமண பதிவாளர் மற்றும் மூன்று சாட்சிகள் முன்னிலையில், ஒவ்வொரு தரப்பினரும் "நான், (ஏ), உன்னை (பி), என் சட்டப்பூர்வமான மனைவியாக (அல்லது கணவன்) ஆகக் கொள்ள வேண்டும்" என்று கூறாத வரை, திருமணமானது இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தாது.

திருமணத்திற்கான நிபந்தனைகள்[தொகு]

  1. சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் வேறு எந்தவிதமான செல்லுபடியாகும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நடந்த திருமணம் இரு தரப்பினருக்கும் ஒரே திருமணமாக இருக்க வேண்டும்.[5]
  2. மணமகனுக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும்; மணமகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.[5]
  3. இரு தரப்பினர் திருமணத்திற்கு சரியான ஒப்புதல் அளிக்கும் நல்ல மன நலன் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.[5]

நீதிமன்றத் திருமணம் என்பது இரு ஆன்மாக்களின் சங்கமம் ஆகும். அங்கு சிறப்புத் திருமணச் சட்டம்-1954-ன் படி மூன்று சாட்சிகள் முன்னிலையில் திருமணப் பதிவாளர் முன் சத்தியப் பிரமாணம் செய்து, அதன்பின் நீதிமன்றத் திருமணச் சான்றிதழ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட திருமணப் பதிவாளரால் நேரடியாக வழங்கப்படுகிறது.

சொத்துக்கான வாரிசு[தொகு]

இந்தச் சட்டத்தின் கீழ் திருமணமான நபரின் சொத்துக்கான வாரிசு அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கமான திருமணம் மற்றும் அவர்களது குழந்தைகளின் சொத்துக்கள் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும் இந்து, பௌத்த, சீக்கிய அல்லது ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் எனில், அவர்களது சொத்துக்கான வாரிசுரிமை இந்து வாரிசுச் சட்டம், 1956 மூலம் நிர்வகிக்கப்படும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Special Marriage Act - Special Marriage Act 1954, Special Marriage Laws In India". I Love India. பார்க்கப்பட்ட நாள் March 14, 2022.
  2. "'Marriages under Special Marriage Act not governed by personal laws'". The Hindu. 29 March 2018. https://www.thehindu.com/news/cities/Delhi/marriages-under-special-marriage-act-not-governed-by-personal-laws/article23376912.ece. 
  3. 3.0 3.1 3.2 3.3 "சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணம், 1954". Tax4India. Archived from the original on 2010-01-03. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2010. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. "இடம் மற்றும் திருமண முறை, பதிவு செய்யப்பட்ட திருமணம்". Archived from the original on 3 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 24 September 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |status= ignored (help); Unknown parameter |பணி= ignored (help)CS1 maint: unfit URL (link)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "The Special Marriage Act, 1954". DelhiAdvocate. Archived from the original on 2010-10-31. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2010. {{cite web}}: Check date values in: |access-date= (help)