இந்தியக் காகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமஸ் யங், (தி. 1860). நியூயார்க்கின் என். குரியர் என்பவரால் இந்தியா காகிதத்தில் அச்சிடப்பட்டது.
1911 என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இந்தியக் காகித அச்சிடலைப் பெருமைப்படுத்தியது

இந்தியக் காகிதம் (India paper) ஒரு வகை காகிதம். 1875ல் இது வெளுக்கப்பட்ட சணலால் மற்றும் துணி இழைகளால் செய்யப்பட்ட மிக மெல்லிய, ஒளிபுகா வெள்ளைக் காகிதமாகும். இதன் அடிப்படை எடை 20 பவுண்டுகள், ஆனால் ஒரு அங்குல தடிமனில் 1,000 பக்கங்கள் வரை இருக்கும்.[1]

இக்காகிதத்தில் விவிலியம் அச்சிடப்பட்டதால் மிகவும் பிரபலமடைந்தது. தெளிவான அச்சானது சிறிய அளவில் இலகுவாகவும் செய்யப்பட்டது. 1911ஆம் ஆண்டு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, "மெல்லிய, வலுவான ஒளிபுகா இந்தியா காகிதத்தில் அச்சிடப்பட்டது. ஒவ்வொரு தொகுதியும் ஒரு அங்குல தடிமன் கொண்டது" என்ற பெருமையுடையது. இந்தியக் காகிதம் குறிப்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிகப்பத்தினரால் பயன்படுத்தப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறந்த ஆவணங்களை இந்த காகிதம் கொண்டு தயார் செய்யப்பட்டதால் இக்காகிதத்திற்கு இப்பெயர் எழுந்தது.[2][3]

தபால்தலைகளில் சாய ஆதார தபால் தலைகள் அச்சிடுவதற்கும் இந்தியா காகிதம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dictionary of Printing & Publishing. (1997). Middlesex, UK: Peter Collin Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-948549-99-8
  2. Berry, W. & Poole, H. (1966). Annals of Printing: A Chronological Encyclopaedia from the Earliest Times to 1950. London, UK: Blandford Press.
  3. Jennett, Seán (1973). The making of books (5th ). இலண்டன்: Faber and Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-571-04786-6. இணையக் கணினி நூலக மையம்:1296599. https://www.worldcat.org/oclc/1296599. 

மேலும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_காகிதம்&oldid=3735827" இலிருந்து மீள்விக்கப்பட்டது