இதயநிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதயநிலா
Ithayanila.JPG
உரலிwww.ithayanila.com/
மகுட வாசகம்.:. தமிழின் புதிய உதயம் :::..
தளத்தின் வகைகவிதைகள்
உரிமையாளர்இதயநிலா
உருவாக்கியவர்Edited by Rathees
வெளியீடு10.01.2007
தற்போதைய நிலைசெயற்படுகிறது


இதயநிலா வலைத்தளம் [1] சிறப்பாகக் கவிதைகளின் சங்கமமாக வடிவமைக்கப்பட்டது. எனினும் இதயநிலா இணையத்தில் பல்சுவை அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் தமது கருத்துக்களின் அடிப்படையில் பல ஆக்கங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

நாளும் ஆண்மீகம் அரசியல் உலகவியல் என்பனவற்றோடு சிறப்புக்கவிதைகள் மற்றும் பல சுவாரசியமான ஆக்கங்களைத் தாங்கி வெளிவருகிறது. "தமிழ்த் தாயக உறவுகளை நாடி தமிழ் பேசும் உள்ளங்களுடன் இணைந்து அண்டவெளி எங்கும் பெரும் அலையென விரிகின்றது இதயநிலா இணையம்."

தாயக வாழ்வியலை தமிழ்பேசும் உள்ளங்களுடன் ஒருமுறை பகிர்ந்துகொள்ள முயல்கின்றோம். நான்கு சுவர்களுக்குள் தாம்கொண்ட கனவுகளுடன் நலிந்துபோகும் நம் உறவுகளின் இறந்துபோகும் அவலங்களை அறியாதவர் பலர் அறிந்தவர் சிலர். தொடரும் போரிலும் வறுமையின் பிடியிலும் அடக்குமுறைகள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் அவலங்கள் தோய்ந்த அம்முகங்களில் எழும் சிரிப்பினை மட்டுமே கண்டு வெளியிடும் பல இணையங்கள் மத்தியில் அவர்தம் வாழ்வின் பின்னணிகளை அலசுகின்றது இதயநிலா.

நிச்சயமாக இனம் மதம், மொழி கடந்து இலங்கை மக்கள் என்ற நிலைப்பாட்டில் ஒரு நிரந்தர அமைதிப்புலத்தை பின்னணியாகக் கொள்கின்றது இதயநிலா. சொல்லாத நம் மக்களின் கதைகள் கோடி சுமந்து உங்கள் வாசல் தேடி நுழைகின்றது இதயநிலா.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயநிலா&oldid=554410" இருந்து மீள்விக்கப்பட்டது