இணைய விரிவுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைய விரிவுரை (online lecture) என்பது இணையத்தில் வெளியிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கல்வி விரிவுரை ஆகும். இவை பரவலாக நிகழ்படம், ஒலி அல்லது இரண்டிலும் பதிவுசெய்யப்பட்டு, பின்னர் பதிவேற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்ட வலைத்தளத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும். மாணவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் விரிவுரையைப் பார்க்க குறிப்பிட்ட தளத்திற்குச் செல்லலாம். விரிவுரை பதிவு செய்யப்படும் நேரத்தில் இணையத்தில் நேரலையாகப் பார்க்கலாம்.

பாரம்பரியமாக, ஆசிரியரும் மாணவரும் ஒரே அறையில் இருக்கும்போது மட்டுமே குரல் வழிக் கற்பித்தல் சாத்தியமாகும், அங்கு ஆசிரியர் மாணவர்களுக்குத் தகவல்களைப் பரிமாறுகிறார். ஆனால் இவகையான கற்றலுக்கு ஆசிரியரும் மாணவர்களும் அருகில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

மாணவர்கள் இணைய இணைப்பு இருக்கும் வரை, அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும், உலகில் எங்கிருந்தும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் இணைய விரிவுரைகளை அணுக இயலும். குறிப்பெடுப்பதற்காக அவற்றை மீண்டும் காண்பதற்கு வசதி உள்ளது. இணையத்தில் காப்பகப்படுத்தப்பட்ட விரிவுரைகளுடன் கூடிய படிப்புகளில் மாணவர்கள் கணிசமாக ஈடுபடுவதாகவும் அவர்களின் கற்றல் மேம்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. [1] மாணவர்களுக்கான கல்வியை சமமாக்குவதற்கான தீர்வுகளில் இவ்வகையான விரிவுரையும் ஒன்றாக இருக்கலாம். நேருக்கு நேர் தொடர்பு இல்லாமை, தகவல்தொடர்பு இணைப்பு உருவாக்கப்படும் வரை மாணவர்கள் தங்கள் பயிற்றுவிப்பாளர்களை எளிதில் தொடர்பு கொள்ள இயலாமை, பதிவு செய்யப்படும் விரிவுரைகள் காரணமாக வருகை குறைவதற்கான வாய்ப்பு ஆகிய எதிர்மறை விடயங்களும் இதில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cascaval, Radu C.; Fogler, Kethera A.; Abrams, Gene D.; Durham, Robert L. (December 2008). "Evaluating the Benefits of Providing Archived Online Lectures to In-Class Math Students" (in en). Journal of Asynchronous Learning Networks 12: 61–70. பன்னாட்டுத் தர தொடர் எண்:1939-5256. http://eric.ed.gov/?id=EJ837515. பார்த்த நாள்: September 24, 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_விரிவுரை&oldid=3905519" இலிருந்து மீள்விக்கப்பட்டது