இணையப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்சியைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்பறையின் ஒரு கட்ட உதாரணம். ஆசிரியர் அவர்களின் திரையைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஓர் இணையப் பள்ளி (Online school மெய்நிகர் பள்ளி, மின்-பள்ளி அல்லது இணைம-பள்ளி ) என்பது மாணவர்களுக்கு முழுவதுமாக அல்லது முதன்மையாக எழிவரி அல்லது இணையம் மூலம் பாடம் கற்பிக்கப்படுவதனை குறிக்கிறது. இது "பயிற்றுவிப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் மாணவர்களுக்கிடையில் வழக்கமான மற்றும் கணிசமான தொடர்புகளை ஆதரிப்பதற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் கல்வி என வரையறுக்கப்பட்டுள்ளது.[1] இணைய கல்வி உலகம் முழுவதும் உள்ளது மற்றும் அனைத்து கல்வி நிலைகளிலும்(K-12 உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளி, கல்லூரி அல்லது பட்டதாரி பள்ளி) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையான கற்றல் இணையத்தில் கல்வியின் அடுத்த நிலைக்கு முன்னேறவும் உதவுகிறது.

தொலைதூரப் படிப்புகளை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை (2012-2015) [1]

மெய்நிகர் கல்வி பொதுவாக உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயன்படுத்தப்படுகிறது. 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி இணைய வழியில் கல்வி கற்க முனைகின்றனர். மக்கள்தொகையில் 41% மக்கள் இணைய வழியில் கல்வி கற்கின்றனர், அதே நேரத்தில் 24-29 வயதுடைய மாணவர்களில் 35.5% மற்றும் 15-23 வயதுடைய மாணவர்களில் 24.5% மெய்நிகர் கல்வியில் பங்கேற்கின்றனர்.

தொலைதூரப் படிப்புகளை எடுக்கும் மாணவர்களின் சதவீதம் (2012-2015) [1]

உலகளவில் மெய்நிகர் கல்வி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 4,700க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கு எழில்வரிப் படிப்புகளை வழங்குகின்றன. [2] 2015 ஆம் ஆண்டில், 6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டனர், இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 3.9% அதிகரித்துள்ளது. அனைத்து உயர்கல்வி மாணவர்களில் 29.7% பேர் குறைந்தபட்சம் ஒரு தொலைதூரப் படிப்பையாவது படிக்கின்றனர். 2012 மற்றும் 2015 க்கு இடையில் கல்லூரிக்குச் சென்று பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 931,317 நபர்களாக குறைந்துள்ளது [1] கல்லூரி அளவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொலைதூரக் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். [3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Allen, Elaine (May 2017). "Distance Education Enrollment Report 2017". Digital Learning Compass. https://onlinelearningsurvey.com/reports/digtiallearningcompassenrollment2017.pdf. 
  2. Friedman, Jordan (January 11, 2018). "Studey: More Students are Enrolling in Online Courses".
  3. "25 Surprising Or Little Known Facts About Online Education". Online Schools Center. 2017-10-21. https://www.onlineschoolscenter.com/25-surprising-facts-online-education/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையப்_பள்ளி&oldid=3824278" இலிருந்து மீள்விக்கப்பட்டது