இணையச் செய்தி அணுகு நெறிமுறை
Jump to navigation
Jump to search
இணையச் செய்தி அணுகு நெறிமுறை என்பது மின்னஞ்சல் வழங்கியில் இருந்து மின்னஞ்சலை எடுத்துத் தருவதற்காக பயனர் செயலிகளில் பயன்படும் இரு முக்கிய நெறிமுறைகளில் ஒன்று. மற்றையது அஞ்சலக நெறிமுறை (POP). பொதுவாக எல்லா மின்னஞ்சல் வழங்கிகளும், செயலிகளும் இரு நெறிமுறைகளுக்கும் ஆதரவு தருகின்றன.
இந்த நெறிமுறைப் படி மின்னஞ்சல்கள் வழங்கியிலேயே இருக்கும். பயனர் அழிக்கும் வரை அவை அங்கேயே இருக்கும். மாற்றாக பொப் முறைப்படி, மின்னஞ்சல்கள் பயனர் செயலிகளுக்கு தரவிறக்கப்பட்ட பிறகு, வழங்கியில் இருந்து அழிக்கப்பட்டுவிடும்.
வழங்கில் இருப்பதால் மின்னஞ்சல்களை பலர் பெறக்கூடியாக உள்ளது. ஆனால் வழங்கி வளங்கள் கூடிய அளவு தேவைப்படுகிறது.