இடுப்பு குதிமுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண், அல்பினோ பர்மிசு மலைப்பாம்பு குதத் தூண்டுதலின் வெளிப்புறக் காட்சி
குதிமுள் உள்ளே இருக்கும் எலும்புகளைக் காட்டும் போலியன் மலைப்பாம்பின் எலும்புக்கூடு

இடுப்பு குதிமுள் (Pelvic spur) என்பது போவாசு மற்றும் மலைப்பாம்புகள் போன்ற பழமையான பாம்புகளில் எச்சத் துவாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படும் கால்களின் எச்சவுறுப்புகள் ஆகும். இந்த எச்சங்கள் வெளிப்புறமாகத் தெரியும் வகையில் அமைந்துள்ளது.[1] இடுப்பு வளையம் மற்றும் தொடையெலும்பு எச்சங்களான இவை, முதுகெலும்புடன் எந்த தொடர்பும் இல்லாமல், வெறுமனே தசைப் பகுதியில் பிடிப்பற்று காணப்படும்.[1] பாம்பின் உடலிலிருந்து தொடை எலும்பு நீண்டு, கொம்பு அமைப்பால் மூடப்பட்டிருக்கும். இது குதிமுள் அல்லது நகத்தை ஒத்திருக்கிறது.[1] ஆண் பாம்புகளில் குதிமுள் பொதுவாகப் பெண் பாம்புகளை விட நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும். மேலும் இவை பெண் பாம்பினைப் பற்றவும் இனச்சேர்க்கையின் போது பிடிப்பதற்கும் கூச்சப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.[2] மேலும் மற்ற ஆண்களுடன் சண்டையிடவும் பயன்படுத்தப்படுகின்றன.[3]

இந்த குதிமுள் பாலின வேறுபாட்டினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் சில சிற்றினங்களில், பாம்பின் பாலினத்தை அடையாளம் காண இந்த குதிமுள்ளினை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்தப்படலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Pough, F. Harvey; Andrews, Robin M. (2001). Herpetology: Third Edition. https://archive.org/details/herpetology00poug. 
  2. Gillingham, James C.; Chambers, Jeffrey A. (1982-02-23). "Courtship and Pelvic Spur Use in the Burmese Python, Python molurus bivittatus". Copeia 1982 (1): 193–196. doi:10.2307/1444292. 
  3. Carpenter, Charles C.; Murphy, James B.; Mitchell, Lyndon A. (June 1978). "Combat Bouts with Spur Use in the Madagascan Boa (Sanzinia madagascariensis)". Herpetologica 34 (2): 207–212. https://archive.org/details/sim_herpetologica_1978-06_34_2/page/207. 
  4. Hoefer, Sebastian; Robinson, Nathan J.; Pinou, Theodora. "Size matters: Sexual dimorphism in the pelvic spurs of the Bahamian Boa (Chilabothrus strigilatus strigilatus)". Herpetology Notes 14: 201-203. https://www.biotaxa.org/hn/article/viewFile/64162/65092. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுப்பு_குதிமுள்&oldid=3848812" இலிருந்து மீள்விக்கப்பட்டது