இஞ்சியணிச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஞ்சியணிச்சல் கடை
இஞ்சியணிச்சல்
இஞ்சியணிச்சல்
இஞ்சியணிச்சல்
இஞ்சியணிச்சல்

இஞ்சியணிச்சல் (Gingerbread தேனணிச்சல், மசாலா அணிச்சல், மிளகு அணிச்சல்) என்பது பல வாசனைச் சரக்குகள் போட்டுச் செய்யப்படும், பல காலத்துக்குப் பழுதடையாமல் இருக்கும் ஒரு இனிப்புப் பலகாரம் ஆகும். இது வாசனைக்காக இஞ்சியும், இனிப்புக்காக தேன் அல்லது கருப்பஞ்சாறும் சேர்த்து பல வடிவங்களிலும் செய்யப்படுகிறது.[1] இது ஒரு பாரம்பரிய தின்பண்டமாக மேற்குலக நாடுகளில் நடைபெறும் பல கொண்டாட்டங்களில் இடம் பெறுகிறது. கிறித்துமசு கொண்டாட்டத்தில் சிறப்பான இடத்தைப் பிடிக்கிறது.

சேர்க்கப்படும் வாசனைப் பொருட்கள்[தொகு]

 1. சோம்பு,
 2. பெருஞ்சீரகம்,
 3. இஞ்சி, ஏலக்காய்,
 4. கொத்தமல்லி,
 5. சாதிக்காய்,
 6. சாதிக்காய்,
 7. கிராம்பு,
 8. இலவங்கப்பட்டை.

வரலாறு[தொகு]

தேனணிச்சல் பற்றிய எழுத்து மூலமான முதல் குறிப்பின் படி தேனணிச்சல் கி.மு 350 இல் உருவாகியுள்ளது. ஆனால் பண்டையகிரேக்கத்தில் ஏற்கெனவே தேனணிச்சல் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக கல்லறைப்பொருட்கள் உள்ளன.[2] இப்போது போல் கிறித்துமசு காலங்களில் மட்டுமல்லாது ஈஸ்டர் காலங்களிலும், மற்றைய கொண்டாட்டங்களிலும் முன்னர் இது பிரத்தியேக இடத்தைப் பெற்றிருந்தது. இது ஒரு விரதகால உணவாகவும், செரிமானத்துக்கு உகந்த உணவாகவும், வலி நிவாரணியாகவும், நோய்களைத் தீர்க்கும் உணவாகவும் கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Old-Fashioned Gingerbread". Grandma’s Molasses. 2015-12-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-01 அன்று பார்க்கப்பட்டது.
 2. Aus der Historie des Gebäckes
 3. Honig und Gewürze als Zutaten

வெளி இணைப்புகள்[தொகு]

 • Gingerbread at the Open Directory Project
 • [1] Facebook Fan Page
 • [2] Amazon Kitchen Shorts: Mini Gingerbread Houses
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஞ்சியணிச்சல்&oldid=3543401" இருந்து மீள்விக்கப்பட்டது