இசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கம்
யூஈஎஃப்ஏ (ஐரோப்பா) | |
---|---|
தோற்றம் | 13 மார்ச்சு 1873 |
ஃபிஃபா இணைவு | 1910 |
யூஈஎஃப்ஏ (ஐரோப்பா) இணைவு | 1954 |
ஐஎஃப்ஏபி இணைவு | 1886 |
தலைவர் | Campbell Ogilvie[1] |
இசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கம் (Scottish Football Association), இசுக்கொட்லாந்து நாட்டின் காற்பந்தாட்ட மேலாண்மை அமைப்பாகும். இது எஸ்எஃப்ஏ (SFA) அல்லது இசுக்கொட்லாந்து எஃப்ஏ (The Scottish FA) என்றும் அழைக்கப்படும். இசுக்கொட்லாந்தின் கால்பந்து நிர்வாகம் மற்றும் அதன் மேம்பாடு ஆகியவற்றை இச்சங்கம் நிர்வகிக்கிறது. இசுக்கொட்லாந்தின் கால்பந்துக் கழகங்கள், பிராந்திய கால்பந்துச் சங்கங்கள் இதன் உறுப்பினர்களாகும். இச்சங்கம் 1873-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது; இதன்மூலம், உலகிலேயே இரண்டாவது மிகப் பழமையான கால்பந்துச் சங்கம் என்ற பெருமைக்கு உரித்தாகிறது.
உலகளவில் கால்பந்து விதிமுறைகளை அமைக்கும் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியத்தின் உறுப்பினராக இசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கம் உள்ளது. யூஈஎஃப்ஏ-வின் தோற்றுவாய் உறுப்பினரான இச்சங்கம் ஃபிஃபா-வின் உறுப்பினராகவும் உள்ளது. இசுக்கொட்லாந்து கால்பந்து அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கிளாஸ்கோ நகரிலேதான், இக்கால்பந்துச் சங்கத்தின் தலைமையகம் உள்ளது.
இசுக்கொட்லாந்து தேசிய காற்பந்து அணியைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பது மற்றும் இசுக்கொட்லாந்துக் கோப்பையை நடத்துவது ஆகியவை இச்சங்கத்தின் முக்கிய பொறுப்புகளாகும்.
குறிப்புதவிகள்
[தொகு]- ↑ "Council to debate fixture calendar". scottishfa.co.uk. Scottish Football Association. 22 February 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளியிணைப்புகள்
[தொகு]- Scottish Football Association பரணிடப்பட்டது 2004-01-17 at the வந்தவழி இயந்திரம்
- Scottish Football Museum
- Scotland பரணிடப்பட்டது 2014-02-20 at the வந்தவழி இயந்திரம் at FIFA site
- Scotland at UEFA site