ஆஸ்திரால் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துகாவா பாய்
Tuha'a Pae
உள்ளூர் பெயர்: Îles Australes
ஆஸ்திரால் தீவுகளின் கொடி
புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
தீவுக்கூட்டம்பொலினீசியா
மொத்தத் தீவுகள்7
முக்கிய தீவுகள்துபுவாய், ரூருட்டு, ராய்வாவே, ராப்பா இத்தி
பரப்பளவு148 km2 (57 sq mi)
நிர்வாகம்
பிரான்சு
Overseas collectivityபிரெஞ்சு பொலினீசியா
பெரிய குடியிருப்புரூருட்டு (மக். 2,322)
மக்கள்
மக்கள்தொகை6,820[1] (2012)
அடர்த்தி43 /km2 (111 /sq mi)
ஆஸ்திரால் தீவுகளின் வரைபடம்

துகாவா பாயி (Tuha'a Pae, அல்லது ஆஸ்திரால் தீவுகள் (Austral Islands, பிரெஞ்சு மொழி: Îles Australes அல்லது Archipel des Australes), என்பது தென்பசிபிக்கில் உள்ள பிரெஞ்சு பொலினீசியாவின் தென்பகுதியில் உள்ள தீவுகள் ஆகும். புவியியல் படி, இத்தீவுகள் இரண்டு வெவ்வேறு தீவுக் கூட்டங்கள் உள்ளன, அவையாவன வடமேற்கே துபுவாய் தீவுகள் (பிரெஞ்சு மொழி: Îles Tubuaï), மற்றும் தென்கிழக்கே பாஸ் தீவுகள் (பிரெஞ்சு மொழி: Îles basses) ஆகியனவாகும். இத்தீவுகளின் மக்கள் பந்தான் நார் நெசவிற்குப் பேர் போனவர்கள் ஆவர்.[2] மரியா, மரோத்திரி ஆகிய தீவுகள் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு ஏற்றவையல்ல. இவற்றில் பல தீக்குழிகள் உள்ளன. ஆஸ்திரால் தீவுகளின் மக்கள்தொகை 6,300 ஆகும், இவர்கள் 150 சதுரகிமீ நிலப்பரப்பில் வாழ்கின்றனர். ஆஸ்திரால் தீவுகளின் தலைநகர் துபுவாய் ஆகும்.

இத்தீவுகளில் உள்ள ஒரேயொரு செயல்நிலை எரிமலை மெக்டொனால்ட் கடல்நிலம் ஆகும் (40மீ ஆழம்).[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Institut Statistique de Polynésie Française (ISPF). "Recensement de la population 2012" (in பிரெஞ்சு). Archived from the original (PDF) on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
  2. "Australs Resorts". Tahiti Travel Planners. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2014.
  3. Gillespie, Rosemary G.; David A. Clague (2009). Encyclopedia of Islands. Berkeley, CA: University of California Press. பக். 342. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520256491. https://books.google.com/books?id=g9ZogGs_fz8C&pg=PA342. பார்த்த நாள்: 7 May 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்திரால்_தீவுகள்&oldid=3682035" இலிருந்து மீள்விக்கப்பட்டது