ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை
ஒத்தசொற்கள்ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை
ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை கொண்ட வலது காலில் வீக்கமடைதல், சிவந்து இருத்தல்
சிறப்புகுருதி நோயியல்
அறிகுறிகள்வலி, வீக்கமடைதல், சிவந்து இருத்தல், சூடாக இருத்தல்
சிக்கல்கள்நுரையீரற் தக்குமை [1][2]
சூழிடர் காரணிகள்சமீபத்தைய அறுவைச்சிகிச்சை, புற்றுநோய், காயம், குறைவாக நடப்பது, உடற் பருமன், புகைப்பிடித்தல், கருத்தரிப்பு சில மரபணு நோய்கள் [1][2]
நோயறிதல்மருத்துவ மீயொலி[1]
தடுப்புநித்தமும் நடத்தல், கெண்டைக்கால் உடற்பயிற்சி, ஆஸ்பிரின்[3]
சிகிச்சைகுருதியுறை எதிர்ப்பிகள், அழுத்தும் பாதவுறைகள்[1]
மருந்துகுறைந்த மூலக்கூற்று நிறை எப்பாரின், வார்பரின்[2][3]

ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை (Deep vein thrombosis - DVT) என்பது உடலில் ஆழ்ந்து காணப்படும் சிரைகளுக்குள் உருவாகும் குருதி உறைமையாகும்.[1] பாதிக்கப்பட்ட பகுதியில் வலி, வீக்கமடைதல், சிவந்து இருத்தல், சூடாக இருத்தல் என்பன இந்நிலையின் அறியப்பட்ட அறிகுறிகள் ஆகும். பலருக்கு இது அறிகுறிகள் இன்றி இருக்கலாம். தொடைச் சிரை, புயச்சிரை, முழங்கால் குழிச்சிரை ஆகியன ஆழ் சிரைகளுள் சிலவாகும்.

சில மருத்துவ நிலைகளில் குருதி உறைவதற்கு காரணமாக இருக்கும் காரணிகள் பாதிக்கப்படுவதால் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை ஏற்படலாம். அறுவைச்சிகிச்சையின் போது அல்லது விமானத்தில் பயணம் செய்தல் போன்ற சந்தர்ப்பங்களில் கால்கள் பலமணி நேரம் அசையாது இருப்பதாலும் இது ஏற்படலாம். சிரையுள் உறைந்த குருதிக்கட்டி அவ்விடத்தை விட்டு நீங்கி நுரையீரலை அடையும் போது அடைப்பு ஏற்பட்டு நுரையீரற் தக்குமை (pulmonary embolism) உண்டாகின்றது. இது ஒரு பேரிடர் உருவாக்கக்கூடிய நிலையாகும்.

நோய் அறிகுறிகள்[தொகு]

ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமையை விவரிக்கும் ஒரு கணினிப்படிமம்

பொதுவான அறிகுறிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் தொடுவலி, வலி, வீக்கம், சூடாக இருத்தல், சிவப்பாக அல்லது நிறம் மாறிக் காணப்படுதல்.[4] இத்துடன் மேற்பரப்புச் சிரைகள் நெளிந்து இயல்புக்கு மாறான வடிவத்தைக் கொண்டதாகக் காணப்படலாம். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து இந்த நோயை அறுதியிட முடியாது. இவ்வறிகுறிகளும் சமீபத்தைய அறுவைச்சிகிச்சை, புற்றுநோய், காயம், குறைவாக நடப்பது போன்ற இடர்க்காரணிகளும் இணைந்து வரும்போது ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமைக்குரிய சாத்தியக்கூறுகள் இருப்பதை உறுதி செய்யமுடியும்.[5] பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை என முதலில் கருதப்பட்டு, ஆனால் அறுதியிட்ட பிற்பாடு வேறொரு நோயாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆழ் சிரைக் குருதியுறைமையை ஒத்த நோய்களாவன: செலுளைடிசு, பேக்கரின் நீர்மக்கட்டி, எலும்புத் தசைக் காயங்கள்.[6][7]

நோய்க் காரணிகள்[தொகு]

குழலியக்குருதியுறைமை உருவாவதற்கு மூன்று முதன்மைக் காரணிகள் உள்ளன: குருதி ஓட்டம் தடைப்பட்டுத் தேக்கம் அடைதல், குருதியுறைமை மிகைப்பு, குருதிக்குழாய் அகவணிகள் சேதமடைதல். இவை மூன்றும் ஒருமித்து விர்கோவின் மும்மை என அழைக்கப்படுகின்றது.[8] மேலும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் கூறுகள் தூண்டப்படுதல், குருதிச்சிறுதட்டுகள் செயலூக்கம் அடைதல் என்பனவும் காரணிகளுக்குள் அடங்கும்.[9] காயங்கள், அறுவைச்சிகிச்சை, சில மருந்துகள், நீண்ட நேரம் அசையாது இருத்தல் (எ.கா: விமானப் பயணம்) போன்ற குருதியுறைதலைத் தூண்டக்கூடிய எந்தவொரு காரணியும் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமையை உண்டாக்கலாம்.

இடர்க்காரணிகள்[தொகு]

அறுதியிடல்[தொகு]

டி-டைமர் சோதனை, மீயொலி நோட்டம், குருதியுறை காரணிகள் ஆய்வு

தடுத்தல்[தொகு]

இயல்பான நிலையில் குருதிச் சுற்றோட்டம் நிகழ்வதற்கு இதயம் காரணமாகின்றது. நாடிகள் மூலம் குருதி செலுத்தப்பட இதயத்தின் சுருங்குதல் உதவுகின்றது. அதேவேளை, கால் போன்ற கீழ்ப்பகுதிகளில் இருந்து குருதி மீண்டும் இதயத்துக்குச் செலுத்தப்பட உடலின் தசைகளும் அவற்றின் அசைவுகளும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது இருக்கையில் தசைகள் இயக்கமற்று இருப்பதால் குருதி மீண்டும் இதயத்துக்குப் போகாமல் தேங்கத் தொடங்குகின்றது. குருதி ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓட்டம் அற்று தேங்குவதால் குருதியுறை காரணிகள் தூண்டப்பட்டு குருதி உறைந்து கட்டியாகின்றது. நடைப்பயிற்சி, கெண்டைக்கால் தசைகளுக்குப் பயிற்சி என்பன குருதி காற்சிரைகளில் தேங்கிக் கிடப்பதைத் தடுக்கின்றது. அசைய முடியா நிலையில் இருக்கும் நபருக்கு அழுத்தும் பாதவுறைகள் உதவுகின்றன. விமானப் பயணம் மேற்கொள்வோர் அடிக்கடி தமது கால்களை அசைத்துக் கொள்வதன மூலம் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமையைத் தடுக்கமுடியும்.

சிகிச்சை[தொகு]

குருதியுறை எதிர்ப்பிகள், அழுத்தும் பாதவுறைகள், உறைகுருதிச் சிதைவு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Deep Vein Thrombosis" (in en). Archived from the original on 14 December 2017. https://web.archive.org/web/20171214010723/https://www.nhlbi.nih.gov/health-topics/deep-vein-thrombosis. பார்த்த நாள்: 14 December 2017. 
  2. 2.0 2.1 2.2 "Deep Venous Thrombosis (DVT)". July 2016. Archived from the original on 5 November 2017. https://web.archive.org/web/20171105095146/https://www.merckmanuals.com/professional/cardiovascular-disorders/peripheral-venous-disorders/deep-venous-thrombosis-dvt. பார்த்த நாள்: 15 December 2017. 
  3. 3.0 3.1 "Deep Venous Thrombosis Prevention – Cardiovascular Disorders – Merck Manuals Professional Edition". July 2016. Archived from the original on 18 September 2017. https://web.archive.org/web/20170918153014/http://www.merckmanuals.com/professional/cardiovascular-disorders/peripheral-venous-disorders/deep-venous-thrombosis-prevention. பார்த்த நாள்: 15 December 2017. 
  4. "What are the signs and symptoms of deep vein thrombosis?". National Heart, Lung, and Blood Institute. 28 October 2011. Archived from the original on 18 April 2012. https://web.archive.org/web/20120418045322/http://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/dvt/signs.html. பார்த்த நாள்: 15 April 2012. 
  5. "Diagnosis and treatment of deep-vein thrombosis". CMAJ 175 (9): 1087–92. 2006. doi:10.1503/cmaj.060366. பப்மெட்:17060659. 
  6. "Diagnosis of DVT: Antithrombotic therapy and prevention of thrombosis, 9th ed: American College of Chest Physicians evidence-based clinical practice guidelines". Chest 141 (suppl 2): e351S–e418S. 2012. doi:10.1378/chest.11-2299. பப்மெட்:22315267. 
  7. Hargett CW, Tapson VF; Tapson (2008). "Clinical probability and D-dimer testing: How should we use them in clinical practice?". Semin Respir Crit Care Med 29 (1): 15–24. doi:10.1055/s-2008-1047559. பப்மெட்:18302083. 
  8. Varga EA, Kujovich JL; Kujovich (2012). "Management of inherited thrombophilia: Guide for genetics professionals". Clin Genet 81 (1): 7–17. doi:10.1111/j.1399-0004.2011.01746.x. பப்மெட்:21707594. 
  9. "Mechanistic view of risk factors for venous thromboembolism". Arterioscler Thromb Vasc Biol 32 (3): 563–8. 2012. doi:10.1161/ATVBAHA.111.242818. பப்மெட்:22345594.