உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்கடல் இருட்பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆழ்கடல் இருட்பகுதி (Aphotic zone) என்பது ஓர் ஏரி அல்லது கடலின் எப்பகுதியில் மிகச் சிறிய அளவு சூரியவொளியோ அல்லது முற்றிலும் சூரியவொளி இல்லாமலோ இருக்கிறதோ அப்பகுதியைக் குறிக்கும். 1 சதவீதத்திற்கும் குறைவான அளவு சூரிய ஒளி ஊடுருவும் பகுதிக்கு கீழேயுள்ள ஆழப்பகுதியே ஆழ்கடல் இருட்பகுதியாகும் என்று பொதுவாக வரையறுக்கப்படுகிறது. இதன் விளைவாக, உயிரி ஒளிர்வு மட்டுமே இப்பகுதியில் காணக்கிடைக்கும் ஒளியாகும். இப்பகுதியில் காணப்படும் பெரும்பாலான உணவு முழுவதும், ஏரி அல்லது கடலின் கீழே மூழ்கி இறந்துபோன உயிரினங்களிடம் இருந்தே வருகிறது.

கலங்கு திறன் மற்றும் ஓர் ஆண்டின் பருவ காலங்கள் போன்ற காரணிகள், ஒளியற்ற இப்பகுதியின் ஆழத்தை பெரிதும் பாதிக்க இயலும். சூரிய ஒளியால் நேரடியாகப் பாதிக்கப்படும் ஏரி அல்லது கடலின் சூரிய ஒளி மண்டலத்திற்குக் கீழாக ஆழ்கடல் இருட்பகுதி மண்டலம் காணப்படுகிறது.

பெருங்கடல்

[தொகு]

வரையறைகளின்படி ஆழ்கடல் இருட்பகுதியானது, பெருங்கடலில் 200 மீ (660 அடி) முதல் 1000 மீட்டர் (3300 அடி) வரையிலும், மேலும் பெருங்கடலின் தரைப்பகுதி வரையிலும் விரிவடைந்துள்ளது [1][2][3]. அக்டினோட்டெரிகீயை வகை மீன்கள், ராட்சத கணவாய் உயிரினங்கள், எலும்பு மீன்கள் மற்றும் தலைக்காலி போன்ற தனித்துவமிக்க ஆழ்கடல் உயிரினங்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன.

ஆழ்கடல் இருட்பகுதி மண்டலமானது மேலும் கூடுதலாக பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை, ஆழ்கடல் , ஆழ்கடல் மண்டலம் மற்றும் ஆழ்கடல் பாதாள மண்டலம் என்பனவாகும் [4]. 200 மீட்டர்(656 அடி) முதல் 2000 மீட்டர் (6562 அடி) வரையுள்ள பெருங்கடல் பகுதி ஆழ்கடல் என்று கருதப்படுகிறது [4][5]. 2000 மீட்டர் (6562 அடி) முதல் 6000 மீட்டர் (19685 அடி) வரையுள்ள பகுதி ஆழ்கடல் மண்டலம் என்றும் [4] 6000 மீட்டர் (20000 அடி) முதல் கடலின் தரைப்பகுதி வரையுள்ள பகுதி ஆழ்கடல் பாதாள மண்டலம் [4] என்றும் கருதப்படுகிறது. இப்பகுதியில் வாழும் உயிரினங்கள் முழுமையாக இருளில் வாழக்கூடிய உயிரினங்களாகக் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Earle, Sylvia A.; Thorne-Miller, Boyce (1999). The living ocean: understanding and protecting marine biodiversity. Washington, D.C.: Island Press. pp. 56–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55963-678-5.
  2. Kunich, John C. (2006). Killing our oceans: dealing with the mass extinction of marine life. Westport, CT: Praeger Publishers. pp. 8–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-98878-4.
  3. Williams, Linda Meyer (2004). Earth science demystified. London: McGraw-Hill. pp. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-143499-2.
  4. 4.0 4.1 4.2 4.3 Pinet, Paul R. Invitation to Oceanography. Jones & Bartlett Publishers. p. 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7637-5993-7.
  5. Freiwald, Andre (2005). Cold-Water Corals and Ecosystems (Erlangen Earth Conference Series) (Erlangen Earth Conference Series). Springer. pp. 980. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-24136-2.

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்கடல்_இருட்பகுதி&oldid=3937380" இலிருந்து மீள்விக்கப்பட்டது