பேச்சு:ஆழ்கடல் இருட்பகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"Aphotic zone" என்பது கடல் தொடர்பில் மட்டுமல்லாது ஏரிகள், ஆறுகள் போன்றவை தொடர்பிலும் பயன்படும் ஒரு சொல். ஆகவே, "Aphotic zone" என்பதை "ஆழ்கடல் இருட்பகுதி" எனாமல், "நீரடி இருட்பகுதி" என்றோ வெறுமனே "இருட்பகுதி" என்றோ குறிப்பிடலாம். அதேவேளை, "Photic zone" என்பதற்கு இணையான தமிழ்க் கட்டுரை "சூரிய ஒளி மண்டலம்" என்னும் தலைப்புடன் காணப்படுகிறது. "Photic zone" - "Aphotic zone" என்பவற்றுக்கு இணையாக பின்வருவனவற்றுள் ஒரு இணையைப் பயன்படுத்தினால் நல்லது.

"ஒளிப்பகுதி" - "இருட்பகுதி"
"ஒளி மண்டலம்" - "இருள் மண்டலம்"
"நீரடி ஒளிப்பகுதி" - "நீரடி இருட்பகுதி"
"நீரடி ஒளி மண்டலம்" - "நீரடி இருள் மண்டலம்"

---மயூரநாதன் (பேச்சு) 09:15, 18 செப்டம்பர் 2016 (UTC)

ஏரியின் அதிகபட்ச ஆழமே 1600 மீட்டர் என்பதால், கடல் என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன். உங்களது கருத்தும் ஏற்புடையதாக இருப்பதால் வல்லுநர்களின் முடிவுக்கு ஏற்ப மாற்றுவதில் தடையேதுமில்லை. அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 10:11, 18 செப்டம்பர் 2016 (UTC)