ஆளுநர் இல்லம், புரி
ஆளுநர் இல்லம், புரி | |
---|---|
ରାଜଭବନ | |
பொதுவான தகவல்கள் | |
ஆள்கூற்று | 19°47′50″N 85°49′45″E / 19.7973°N 85.8293°E |
நிறைவுற்றது | 1914 |
மேற்கோள்கள் | |
Website |
ஆளுநர் இல்லம், புரி அல்லது ராஜ் பவன் என்பது (Raj Bhavan, Puri) இந்திய மாநிலமான ஒடிசாவின் புரியில் உள்ள ஒடிசா ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது முதலில் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் கீழ் பீகார் மற்றும் ஒடிசா மாகாணத்தின் முன்னாள் துணைநிலை-ஆளுநருக்கான கோடைக்கால இல்லமாகக் கட்டப்பட்டது.[1]
அமைவிடம்
[தொகு]இந்தக் கட்டிடம் வங்காள விரிகுடாவை ஒட்டி புரியில் முன்னாள் ஒடிசா தலைநகரான கட்டக்கிலிருந்து சுமார் 60 மைல்கள் (97 km) தொலைவில் அமைந்துள்ளது.[1] மேலும் இன்றைய தலைநகரான புவவேசுவரத்திலிருந்து 53 கிலோமீட்டர்கள் (33 mi) ) தொலைவில் உள்ளது.
வரலாறு
[தொகு]இந்த இல்லம் 30.226 ஏக்கர்கள் (12.232 ha) பரப்பளவில் உள்ள இடத்தில், 1913-14 இல் கட்டப்பட்டது.[1] பீகார் மற்றும் ஒடிசாவின் தலைநகராக இருந்த பட்னாவில் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கப் பிரித்தானிய ஆளுநர்களால் இந்த குடியிருப்பு பயன்படுத்தப்பட்டது.[2] 1936-ல் ஒடிசா தனி மாகாணமாக மாறிய பிறகு, இந்தக் கட்டிடம் ஒடிசா மாநில ஆளுநரின் இல்லமாக மாறியது. இருப்பினும் இது தலைநகரிலிருந்து [1] தொலைவிலிருந்ததால் 1942இல் இக்குடியிருப்பு கட்டக்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.[1] பின்னர் புரியில் உள்ள ஆளுநர் இல்லம் மறுவடிவமைப்பிற்காக ரூ. 158,000 செலவிடப்பட்டது. 1973ஆம் ஆண்டு வரை இந்த கட்டிடம் ஆளுநர்களுக்கான கோடைக்கால இல்லமாகப் பயன்பாட்டிலிருந்தது.[3][2] பின்னர் 1983ஆம் ஆண்டில் மாநில சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஒரு உணவகம் கட்டுவதற்காக மைதானத்தின் ஒரு பகுதி விற்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Raj Bhavan, Puri". Raj Bhavan, Odisha. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
- ↑ 2.0 2.1 Manti, J. C. (2014). The Saga of Jagannatha and Badadeula at Puri: Story of Lord Jagannatha and his Temple). Vij Books India Pvt Ltd. p. XXXIV. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82652-45-8.
- ↑ Kalia, Ravi (1994). Bhubaneswar: From a Temple Town to a Capital City. SIU Press. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8093-1876-6.