ஆல்கார்-பிளின்-ஒயாமதா வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆல்கார்-பிளின்-ஒயாமதா வினை ( Algar–Flynn–Oyamada reaction ) என்பது ஒரு சால்கோன் ஒடுக்க ஏற்ற வேதிவினைகளில் ஈடுபட்டு பிளாவனோல் உருவாகும் ஒரு வளையமாக்கல் வேதி வினையாகும்.[1][2]

ஆல்கார்-பிளின்-ஒயாமதா வினை

வினை வழிமுறை[தொகு]

இந்த வினையை விளக்க சாத்தியமான பல வினை வழிமுறைகள் உள்ளன. எனினும், இந்த வினை வழிமுறைகளால் வினையை சரியாக தெளிவுபடுத்த இயலவில்லை. இரண்டு கட்டமாக வினைகள் நிகழ்கின்றன என்பதைத்தான் இவற்றின் மூலம் அறியமுடிகிறது. முதல் கட்ட வினையில் இருவைதரோ பிளாவனோல் உருவாகி பின்னர் தொடர்ந்து இது ஆக்சிசனேற்றமடைந்து பிளாவனோல் தோன்றுகிறது. வினை வழிமுறைகளில் இடைநிலையாக இருக்க வேண்டிய ஈபாக்சைடு விலக்கப்படவேண்டும் என்பதே நாம் கவனிக்க வேண்டிய ஒரு பகுதியாகும். இரட்டைப் பிணைப்பு கரிமச் சேர்மம் ஐதரசன் பெராக்சைடுடன் சேர்ந்து ஈபாக்சைடு உருவாகின்ற வினையாக அது இருக்கவேண்டும்.[3] இவ்வினை ஈபாக்சைடு இடைநிலை வழியாக நிகழவில்லையென்று கோர்ம்லெ எட் ஆல் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனால் சாத்தியாமான வழிமுறைகளில் இரண்டு வாய்ப்புகள் தெரிகின்றன.

  • ஐதரசன் பெராக்சைடின் நேரடி தாக்குதலின் கீழ் இரட்டைப் பிணைப்புகளில் பீனோலேட்டுகள் மின்னனு மிகுபொருளைத் தாக்குகின்றன.
  • மின்னனு மிகுபொருள்கள் பீனோலேட்டைத் தாக்கி ஈனோலேட்டை உருவாக்கி பின்னர் அது ஐதரசன் பெராக்சைடைத் தாக்குகிறது.
மௌக்லிச்செ வழிமுறை

மேற்கோள்கள்[தொகு]

  1. Algar, J.; Flynn, J. P. (1934). "none". Proc. Roy. Irish Acad. 42B: 1. 
  2. Oyamada, B. (1935). "A New General Method for the Synthesis of the Derivatives of Flavonol". Bulletin of the Chemical Society of Japan 10 (5): 182. doi:10.1246/bcsj.10.182. 
  3. Gormley, T. R. and O'Sullivan, W. I. (1973). "Flavanoid epoxides—XIII : Acid and base catalysed reactions of 2′-tosyloxychalcone epoxides. Mechanism of the algar-flynn-oyamada reaction". Tetrahedron 29 (2): 369–373. doi:10.1016/S0040-4020(01)93304-6. 

இவற்றையும் காண்க[தொகு]