ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ்
Alice C. Evans, National Photo Company portrait, circa 1915.jpg
பிறப்புஜனவரி 29, 1881
நீத், பென்சில்வேனியா
இறப்புசெப்டம்பர் 5, 1975(1975-09-05) (அகவை 94)
அலெக்சாண்டிரியா, வர்ஜீனியா
தேசியம்அமெரிக்கர்
பணியிடங்கள்ஐக்கிய அமெரிக்க வேளாண்மைத் துறை
ஐக்கிய அமெரிக்க பொதுநல மருத்துவச்சேவை
கல்வி கற்ற இடங்கள்சூசகஹன்னா காலேஜியேட் நிறுவனம்
கோர்னெல் பல்கலைக்கழகம்
விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
அறியப்படுவதுகருச்சிதைவு நோய் விளக்கம் - புரூசெல்லோசிஸ்

ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ் (Alice Catherine Evans, ஜனவரி 29, 1881 - செப்டம்பர் 5, 1975) ஒரு முன்னோடி அமெரிக்க நுண்ணுயிரியலாளர் ஆவார்.[1] ஐக்கிய அமெரிக்க வேளாண்மைத் துறையில் ஒரு ஆய்வளராகவும் இருந்தவர். அங்கு பால் மற்றும் பாலடைக்கட்டியில் உள்ள நுண்ணுயிரிகளை ஆய்வு செய்தார்.. புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோயானது (கால்நடையியல் காய்ச்சல் அல்லது மால்டா காய்ச்சல்) ஆகிய இரண்டும் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கும் ஏற்படும் என்று நிரூபித்தார்.

இளமையும் கல்வியும்[தொகு]

ஆலிஸ் சி. எவன்ஸ், பட்டப்படிப்பு ஆடை

எவான்ஸ், பென்சில்வேனியாவில் பிராட்போர்ட் கவுண்டி என்ற இடத்தில் ஒரு பண்ணையில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் ஹோவெல் ஒரு விவசாயியாகவும் நில அளவையாளராகவும் இருந்தார். இவரது தாயார் ஆனி பி எவான்ஸ் ஒரு ஆசிரியர் ஆவார்.[2] எவான்ஸ் ஐந்து , ஆறு வயது இருந்தபோது, அவரது பெற்றோர்களால் வீட்டில் கற்பிக்கப்பட்டு, பின்னர் நேதாமில் இருந்த ஓரறைப் பள்ளி ஒன்றில் கல்வி கற்றார். அங்கு கல்வியில் மிகச்சிறப்பான நிலை பெற்றார்.[3]

1886 இல், ஈவான்ஸ் தனது சகோதரர் மோர்கன் போலவே, ஸ்கார்லெட் காய்ச்சலில் இருந்து தப்பிப்பிழைத்தவர் ஆவார்.

அவர் துவாண்டாவிலுள்ள சூசகஹன்னா காலேஜியேட் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பெண்கள் கூடைப்பந்து அணியில் விளையாடினார். பின்னாளில் ஒரு ஆசிரியராகவும் ஆனார். அவரது நினைவாற்றல்களில், அவர் ஒரு ஆசிரியரானார் என்று எழுதுகிறார். ஏனெனில் அது பெண்களுக்காக திறந்திருந்த ஒரே தொழிலாக இருந்தது, ஆனால் அப்பணி அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தியது.[4] நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கிராமப்புற ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பைப் பெற்றார்.[5] 1909 ஆம் ஆண்டு கார்னெல் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்று பாக்டீரியாவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக் கழகத்திலிருந்து உதவித் தொகை பெற்று முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். மேலும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக் கழகத்திலிருந்து உதவித் தொகை பெற்ற முதல் பெண்மணி எவான்ஸ் ஆவார்.[1]

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 Colwell, R. R.. Alice C. Evans: breaking barriers.. 
  2. Evans, Alice Catherine (1881-1975), microbiologist | American National Biography. 
  3. Zach, Kim (2002). Hidden from History: The Lives of Eight American Women Scientists. Avisson Pr Inc. https://archive.org/details/hiddenfromhistor0000zach. 
  4. "Memoirs" (PDF). National Institutes of Health Office of History. 2017-12-15 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 டிசம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "ஆலிஸ் ஈவான்ஸ்" கல்வி & வளங்கள். தேசிய பெண்கள் வரலாற்று அருங்காட்சியகம், 15 டிசம்பர் 2005. வலை.