உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலிசு டி போயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலிசு டி போயர் (Alice de Boer) இலங்கையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். 1872-1955 காலத்தில் இவர் வாழ்ந்தார். மருத்துவராக தகுதி பெற்ற நாட்டின் முதல் பெண்களில் இவரும் ஒருவராவார்.[1][2] மருத்துவ உதவித்தொகையில் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட முதல் உள்ளூர் பெண்ணும் ஆலிசு டி போயரேயாவார்.

ஆலிசு டி போயரின் குடும்பம் இலங்கையின் இனக்குழுவான இடச்சு பறங்கியர் பின்னணியில் இருந்த குடும்பமாகும். இசுக்காட்லாந்து நாட்டின் தலைநகரமான எடின்பர்க்கு நகரத்தில் மருத்துவம் படித்த பிறகு, இலண்டனிலுள்ள பெண்களுக்கான லேடி ஏவ்லாக் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக இருந்த மேரி நோனா பிசூக்கு ஆலிசு டி போயர் உதவியாளராக இருந்தார்.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Pioneering women doctors of South Asia". NewsIn.Asia (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-06-05.
  2. "Alice de Boer". பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Sunday Times August 29". www.worldgenweb.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிசு_டி_போயர்&oldid=3931110" இலிருந்து மீள்விக்கப்பட்டது