உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலன் டிரசிலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலன் மைக்கேல் டிரசிலர் (Alan Michael Dressler) (பிறப்பு: 23 மார்ச் 1948) ஒரு அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வாசிங்ட.னில் உள்ள கார்னகி அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.[1]

இவர் ஓகியோவில் உள்ள சிஞ்சினாட்டியில் பிறந்தார். இவர் 1966 இல் வால்நட் கில்சு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1970 இல் இய்ற்பியல் இளவல் பட்டம் பெற்றார் இவர் சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1976 இல் முனைவர் பட்டத்தை வானியலில் பெற்றார். இவரது முதன்மையான் தொழில்முறை ஆர்வம் அண்டவியலிலும் பால்வெளிகளின் தோற்றம், படிமலர்ச்சியிலும் வானியல் கருவிகலிலும் புறப் பால்வெளி வானியலிலும் கவிந்திருந்தது.

1993 முதல் 1995 வரை டிரசிலர் வானியல் ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களின் கழகத்தின் "HST & Beyond: Expleration and the Search for Origins " குழுவுக்குத் தலைமை தாங்கினார். இது நாசாவுக்கு " புற ஊதா - ஒளியியல் - அகச்சிவப்பு விண்வெளி வானியலுக்கான ஒரு பார்வை " என்ற ஆவணத்தை வழங்கியது.[2] மெகல்லன் தொலைநோக்கிகள் மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி சுருளி விண்மீன் பால்வெளிகளின் படிமலர்ர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்த நூக்கர் குழுவிலும் மார்ஃப்ஸ் ஒத்துழைப்புக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.[3] டிரசிலர் 2000 முதல் 2003 வரை நாசாவுக்கான தோற்றம் சார்ந்த துணைக்குழுவின் தலைவராக இருந்தார் , ஆனால் புவியண்மை பொருள் ஆய்வுகள், இடர் குறைப்பு நுட்பங்கள் ஆய்வு / கண்டறிதல் குழுவின் மதிப்பாய்வில் உறுப்பினர் பதவியை மறுத்தார்.[4][5] டிரசிலர் தற்போது இனாமோரி மெகல்லன் வானொளிப்படக் கருவி, கதிர்நிரல் வரைவி (IMACS) விண்மீன் கொத்துருவாக்க அளக்கையில் பணியாற்றி வருகிறார். இது விண்மீன் கட்டமைப்புகள், ஆழ்வெளி விண்மீன் கொத்துக்களில் உள்ள விண்மீன்திரளின் படிமலர்ச்சியை ஆய்வு செய்கிறது. அதாவது நான்கு முதல் ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளில்ஆய்வு செய்கிறது. அவர் புவியொத்த கோள்கண்டறியும் சூரிய ஒளிமுகட்டு அறிவியல் தொழில்நுட்ப வரையறைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[6]

விருதுகள்[தொகு]

1983 ஆம் ஆண்டில் டிரசிலர் அமெரிக்க வானியல்[7] கழகத்திலிருந்து வானியல் துறையில் நியூட்டன் இலேசி பியர்சுப் பரிசைப் பெற்றார். 1996 ஆம் ஆண்டில் வானியல் துறையில் ஐக்கிய அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] 1999 ஆம் ஆண்டில் அவர் நாசாவிலிருந்து பொது சேவை பதக்கத்தைப் பெற்றார். 2017 ஆம் ஆண்டில் டிரசிலர் தலைமையிலான AURA " HST மற்றும் Beyond " குழுவிற்கு கார்ல் சாகன் நினைவு விருது வழங்கப்பட்டது.[9]

குறிப்புகள்[தொகு]

  1. Dressler, Alan Michael (1994) Voyage To The Great Attractor: Exploring Intergalactic Space Knopf, New York, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-58899-1
  2. Dressler, A. (December 1995). "Recommendations of the AURA "HST and Beyond" Committee". American Astronomical Society Meeting Abstracts 187: 93.02. Bibcode: 1995AAS...187.9302D. https://ui.adsabs.harvard.edu/abs/1995AAS...187.9302D/abstract. 
  3. "The Morphs" Durham University, United Kingdom
  4. "Letter to Origins Director Dr. Anne Kinney from Dr. Alan Dressler, Chair of OS" பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம் Origins Subcommittee (OS) Meeting, NASA Headquarters, July 11–13, 2001
  5. "Committee Membership Information" United States National Academy of Sciences
  6. "An Evening with Dr. Alan Dressler" பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம் Las Cumbres Observatory Lectures
  7. "Newton Lacy Pierce Prize in Astronomy" பரணிடப்பட்டது 2010-12-22 at the வந்தவழி இயந்திரம் American Astronomical Society
  8. "Alan Dressler". Member Directory, National Academy of Sciences.
  9. "Sagan Award Goes to Committee Chaired by Carnegie's Alan Dressler". Carnegie Science. March 9, 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_டிரசிலர்&oldid=3766330" இலிருந்து மீள்விக்கப்பட்டது