ஆற்றுப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஆறானது கற்காரைக் கரைகள் அமைக்கப்பட்டு பரந்து விரிந்துள்ளது.

ஆற்றுப் பொறியியல் (River engineering) என்பது குடிசர் பொறியியலில் ஒரு துறையாகும். இது சில நன்மைகளுக்காக ஆற்றின் போக்கை மாற்றவும், நீரோட்டத்தின் இயல்புகளை ஆராயவும், அம்முறைகளுக்கு அடிப்படையான தத்துவங்களை ஆராயவும் ஏற்பட்டுள்ள பொறியியற் பிரிவாகும். பதிவுசெய்யப்பட்ட வரலாற்றிற்கு முன்னரே ஆறுகளின் இயல்பிலும், இயற்கையான போக்கிலும், நீராதாரங்களை நிர்வகித்தல், வெள்ளத்திலிருந்து பாதுகாத்தல் அல்லது ஆறுகள் வழியாகவோ அல்லது அதன் குறுக்கே செல்வதை எளிதாக்குதல் போன்றவற்றில் மக்கள் தலையிட்டுள்ளனர். யுவான் வம்சம் மற்றும் பண்டைய உரோமானியர் காலங்களிலிருந்து, ஆறுகள் நீர் ஆற்றலின் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, ஆற்றுப் பொறியியலானது மனிதனுக்கான உடனடி நன்மையை விட பரந்த அளவிலான சுற்றுச்சூழல் குறித்த கவலைகளுக்கு தீர்வு காணும் துறையாக அமைந்துள்ளது. சில ஆற்றுப் பொறியியல் திட்டங்கள் இயற்கை பண்புகள் மற்றும் வாழிடங்களின் மறுசீரமைப்பு அல்லது பாதுகாப்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

நீர்மாற்றமைவு என்பது ஆறு மற்றும் ஆறல்லாத நீர்நிலைகளான கடலோர நீர்நிலைகள் ( கழிமுகங்கள் மற்றும் விரிகுடாக்கள் ), ஏரிகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கான முறையான தீர்வுகளை உள்ளடக்கியதாகும். அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் நீர்மாற்றமைவு என்பது "கடலோரம் மற்றும் கடலோரமல்லாத நீரின் நீரியல் சிறப்பியல்பு பண்புகளை மாற்றுவதானது, நீர் ஆதாரங்களை சீரழிவை ஏற்படுத்துவதாகும்"[1] என வரையறுத்துள்ளது. மீன்கள், வனவிலங்குகள் போன்றவற்றின் வாழ்விடப் பரப்பைக் குறைத்தல், நீர் வெப்பநிலை மற்றும் படிவு கடத்துமை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுதல் போன்ற திட்டமிடப்படாத எதிர்விளைவுகளை ஆற்றுப் பொறியியல் பெரும்பாலும் விளைவித்துள்ளது.[2]

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, ஆற்றுப் பொறியியல் துறையானது நீர்மாற்றமைவினால் ஏற்படும் சிதைவுகளை சரிசெய்வதில் அதிக கவனம் செலுத்தியது. மேலும் ஆற்றுத்தொர்பான புவிப்புறவியலைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட மாற்றங்களுக்கான சாத்தியமான முறையான தீர்வைத் தேடுகிறது. ஆற்றுத்தொடர்பான புவியியல் என்பது ஆறுகள் காலப்போக்கில் அவற்றின் வடிவத்தை எவ்வாறு மாற்றுகின்றன என்பதைப் பற்றிய ஆய்வு ஆகும். ஆற்றுத்தொடர்பான நில உருவாக்கவியல் என்பது திறந்த வாய்கால் நீர்ம இயக்கவியல், படிவக் கடத்துமை, நீரியல், இயற்பியல் புவியியல் மற்றும் கரையோர சூழலியல் உள்ளிட்ட பல அறிவியல் துறைகளின் தொகுப்பாகும். ஆற்றுப் பொறியியல் தொழில் புரிபவர் ஆற்றுத்தொடர்பான நில உருவாக்கவியல், அதில் மாற்றங்களை செயல்படுத்துதல், பொதுமக்கள் பாதுகாப்பைப் பராமரிக்கவும் முயற்சி செய்கின்றனர்.[3]:3–13ff

குறிப்புகள்[தொகு]

  1. Guidance Specifying Management Measures for Sources of Nonpoint Pollution in Coastal Waters (Report). Washington, D.C.: U.S. Environmental Protection Agency (EPA). 1993. pp. 6–90. EPA-840-B-92-002B.
  2. "Nonpoint Source: Hydromodification and Habitat Alteration". EPA. 2016-10-24.
  3. National Management Measures to Control Nonpoint Source Pollution from Hydromodification (Report). EPA. 2007. EPA 841-B-07-002.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றுப்_பொறியியல்&oldid=3732673" இருந்து மீள்விக்கப்பட்டது