ஆற்காடு ரங்கநாத முதலியார்
Arcot Ranganatha Mudaliar | |
---|---|
Minister of Public Health and Excise (Madras Presidency) | |
பதவியில் 4 December 1926 – 16 March 1928 | |
Premier | P. Subbarayan |
ஆளுநர் | George Goschen, 2nd Viscount Goschen |
முன்னவர் | A. P. Patro |
பின்வந்தவர் | S. Muthiah Mudaliar |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூன் 26, 1879 Bellary, Madras Presidency |
இறப்பு | 8 சூலை 1950 | (அகவை 71)
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | Independent Party, இந்திய தேசிய காங்கிரசு |
படித்த கல்வி நிறுவனங்கள் | Madras Christian College, Madras Law College |
பணி | legislator |
தொழில் | lawyer |
ஆற்காடு ரங்கநாத முதலியார் (29 ஜூன் 1879 – 8 ஜூலை 1950) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தத்துவவாதி ஆவார். 1926 முதல் 1928 வரை சென்னை மாகாணத்தில் பொது சுகாதாரம் மற்றும் கலால் அமைச்சராக பணியாற்றினார். ரங்கநாத முதலியார் பெல்லாரியைச் சேர்ந்தவர.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
ரங்கநாத முதலியார் 1879 ஆம் ஆண்டு ஜுன் 29 அன்று சென்னை மாகாணத்தில் ஒரு முதலியார் குடும்பத்தில் பிறந்தார். [1] இவர் சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் டாகர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிகளில் பட்டம் பெற்றார். இவர் 1901 ஆம் ஆண்டில் அரசுப் பணியில் சேர்ந்து பெல்லாரி துணை கலெக்டராக பணியாற்றினார். பின்னர், இவர் இறை ஞானத்தால் ஈர்க்கப்பட்டு அன்னி பெசண்டினை பின்பற்ற தொடங்கினார்.
பொது வாழ்க்கை[தொகு]
ரங்கநாத முதலியார் 1914 இல் இளம் ஆண்கள் இந்திய சங்கத்தை நிறுவி 1915 இல் கோகலே மண்டபத்தை கட்டினார். முதலியார் 1924 இல் தேசிய மாநாட்டின் தூதுக்குழுவின் ஒரு அங்கமாக பெசண்டுடன் லண்டனுக்குச் சென்றார்.
அரசியல்[தொகு]
நீதிக் கட்சியின் பனகல் ராஜாவின் நிகழ்வில் ரங்கநாத முதலியார் அரசியலில் சேர்ந்தார். ரங்கநாத முதலியார் பெல்லாரியில் இருந்து சென்னை மாகாணத்தின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலியார் சைமன் குழுவை எதிர்த்து தான் வகித்த பொது சுகாதாரம் மற்றும் கலால் அமைச்சர் பதவியை(1926 முதல் 1928 வரை) ராஜினாமா செய்தார். இவர் ராஜினாமா செய்தபோது, பி. சுப்பாராயண் ஆட்சியில் இருந்தார். ரங்கநாத முதலியருக்குப் பின் எஸ்.முதையா முதலியார் அந்த பதவிக்கு வந்தார்.
ரங்கநாத முதலியார் பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1935 முதல் 1939 வரை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் குழுவின் முதல் ஆணையாளராக பணியாற்றினார்.
குறிப்புகள்[தொகு]
- S. Muthiah (6 November 2006). "The Besant Influence". தி இந்து. Archived from the original on 11 செப்டம்பர் 2007. https://web.archive.org/web/20070911133556/http://www.hindu.com/mp/2006/11/06/stories/2006110600530500.htm.
- ↑ The Who's who in Madras: A pictorial who's who of distinguished personages, princes, zemindars and noblemen in the Madras Presidency. Pearl Press. 1940. பக். 206.