ஆர். லதா தேவி
ஆர். லதா தேவி | |
---|---|
![]() | |
சட்டமன்ற உறுப்பினர் இந்திய பொதுவுடைமைக் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் | |
பதவியில் 1996–2001 | |
தொகுதி | சடயமங்கலம் (மாநில சட்டமன்றத் தொகுதி) |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூலை 30, 1963 இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஜி. ஆர். அனில் |
இருப்பிடம் | கடக்கல் |
தொழில் | அரசியல்வாதி |
ஆர். லதா தேவி (R. Latha Devi) என்பவர் கேரளாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், கேரளாவின் சடையமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தேவி தனது முதுகலை படிப்பில் பல்கலைக்கழக முதல் தரத்தினைப் பெற்றுள்ளார். இவர் கேரள அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், அதன் ஒருங்கிணைப்பாளராகவும், கேரள ஆய்வக மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும், கேரள மாநில மகளிர் சங்கத்தின் உறுப்பினராகவும், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Biju, M. R. (June 28, 1997). Politics of Democracy and Decentralisation in India: A Case Study of Kerala. Atlantic Publishers & Dist. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171567058. https://books.google.com/books?id=rBPhlynHQ4EC&q=r+latha+devi+Mla&pg=PA28.
- ↑ "Kerala Law Academy Law College: Kerala University syndicate rejects demand to cancel affiliation | Thiruvananthapuram News - Times of India". The Times of India.
- ↑ https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/43209/13/13_chapter%206.pdf