ஆர். லட்சுமிபதி
ஆர். லட்சுமிபதி | |
---|---|
வாழ்க்கைத் துணை | எஸ். சுப்பலட்சுமி |
உறவினர்கள் | இரா. கிருஷ்ணமூர்த்தி(சகோதரர்) |
ஆர். லட்சுமிபதி (ஆங்கில மொழி: R. Lakshimipathy) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த இதழியலாளர் மற்றும் கல்வியாளராவார். தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர்
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தினமலர் நாளிதழின் நிறுவனர் டி. வி. இராமசுப்பையர் மற்றும் கிருஷ்ணம்மாள் தம்பதியினருக்கு மகனான ஆர். லட்சுமிபதி பிறந்தார். திருவனந்தபுரப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் செய்தித்தாள் மேலாண்மையில் பட்டயப்படிப்பினை முடித்தார். இவரது மனைவி எஸ். சுப்பலட்சுமி, மூத்த மகன் எல்.ராமசுப்பு, இளைய மகன் எல். ஆதிமூலம் ஆவார்கள்[1]
ஊடகத்துறை
[தொகு]தனது தந்தைக்குப் பிறகு தினமலர் நாளிதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்திய செய்தித்தாள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.[2]
கல்வித்துறை
[தொகு]இவர் 1989 ஆம் ஆண்டு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளையை நிறுவி அதன் சார்பாக 1994 ஆம் ஆண்டு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, 1995 ஆம் ஆண்டு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, ஆர். எல். மேலாண்மைக் கல்வி நிறுவனம் மற்றும் ஆர். எல். கப்பல்துறை அறிவியல் நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தினமலர் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி மனைவி எஸ்.சுப்பலட்சுமியின் உடல் தகனம்.". தினமலர். https://www.dinamalar.com/live_update.asp?id=1924304. பார்த்த நாள்: 29 October 2023.
- ↑ "Rakesh Sharma elected President of Indian Newspaper Society for 2023-2024". medianews4u. https://www.medianews4u.com/rakesh-sharma-elected-president-of-indian-newspaper-society-for-2023-24/. பார்த்த நாள்: 29 October 2023.
- ↑ "Krishnamal Ramasubbaiyer School". bynearme.com. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.
- ↑ "R. LAKSHMIPATHY". rlins.edu.in. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.