இந்திய செய்தித்தாள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியச் செய்தித்தாள் சங்கம்
சுருக்கம்INS
உருவாக்கம்27 பெப்ரவரி 1939; 85 ஆண்டுகள் முன்னர் (1939-02-27)[1]
வகைநலச்சங்கம்
சட்ட நிலைலாப நோக்கமற்றது[2]
நோக்கம்இந்திய செய்திதாட்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது
தலைமையகம்ரபி மார்க், புது தில்லி
சேவை பகுதி
இந்தியா
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தலைவர்
ராகேஷ் சர்மா (2023-2024)
மைய அமைப்பு
நிர்வாகக் குழு
சார்புகள்உலகச் செய்திதாட்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களின் சங்மம் [3]
வலைத்தளம்https://www.indiannewspapersociety.in/

இந்திய செய்தித்தாட்களின் சங்கம் (The Indian Newspaper Society)[2] இந்தியாவில் உள்ள அச்சு ஊடகங்களான நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் மத்திய அமைப்பாக செயல்படுகிறது. இலாப நோக்கமற்ற அமைப்பான இது இந்திய செய்திதாட்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதே இதன் முதன்மைப் பணியாகும். இதன் உறுப்பினர்கள் அச்சு ஊடகங்களின் உரிமையாளர்கள் ஆவார்.

இச்சங்கம் 1939ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. இவ்வமைப்பிற்கு 2023-2024 காலத்திற்கான தலைவராக ஆஜ் சமாஜ் செய்தித்தாள் உரிமையாளரான ராகேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4]

சங்கத்தின் நோக்கங்கள்[தொகு]

  • செய்தித்தாட்கள் மற்றும் பருவ இதழ்களின் வணிக நலன்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
  • உறுப்பினர்களுக்கு அனைத்து தலைப்புகள் பற்றிய தகவலைச் சேகரித்து தெரிவித்தல்
  • உறுப்பினர்களின் பொதுவான வணிக நலன்களைப் பாதிக்கும் அனைத்து விஷயங்களிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of Indian Newspaper Society (INS)". indiannewspapersociety.org. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.
  2. 2.0 2.1 "THE INDIAN NEWSPAPER SOCIETY". OpenCorporates. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.
  3. "List of members". wan-ifra.org (in ஆங்கிலம்). 23 February 2015. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.
  4. ஐ.என்.எஸ்., தலைவராக ராகேஷ் சர்மா தேர்வு

வெளி இணைப்புகள்[தொகு]