டி. வி. இராமசுப்பையர்
Appearance
டி.வி.இராமசுப்பையர் (அக்டோபர் 2, 1908 – ஜூலை 21, 1984) தினமலர் நாளிதழின் நிறுவனர். பொதுவாக டி.வி.ஆர் என அறியப்படும் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.
வாழ்க்கை குறிப்பு
[தொகு]தேதி | நிகழ்வு |
---|---|
02.10.1908 | பிறப்பு. பெற்றோர் - இராமலிங்க ஐயர், பகவதி |
1915 | வேங்கடபதி ஐயர், ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு தத்து கொடுக்க பட்டார் |
1919 | திருமணம். மனைவி - கிருஷ்ணம்மாள் |
06.09.1951 | தினமலர் நாளிதழ் திருவனந்தபுரத்தில் தொடக்கம் |
20.10.1954 | தினமலர் குமரி மாவட்ட போராட்டத்திற்கு தமிழர்களின் குரலாக ஒலித்தது என்ற குற்றச்சாட்டின் மேல் திருவனந்தபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி சங்கரன் முன்னிலையில் டி.வி.ஆர் ஒரு நாள் முழுவதும் விசாரிக்கப்பட்டார் |
3.11.1956 | குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த வெற்றி விழா டி.வி.ஆர் தலைமையில் நடந்தது |
16.04.1957 | திருவனந்தபுரத்திலிருந்து நெல்லைக்கு மாறியது தினமலர் பதிப்பு |
21.07.1984 | டி.வி.ஆர் மறைவு |
தகவல் மூலம்
[தொகு]- ↑ கடல் தாமரை (புத்தகம்) - தி.முத்துகிருஷ்ணன். முதல் வெளியீடு - 1996. வெளியீடு - தினமலர், சென்னை