உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்க்கன்காய் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்க்கன்காய் மாகாணம்
Arkhangai Province

ᠠᠷᠤᠬᠠᠩᠭ᠋ᠠᠢᠠᠶᠢᠮᠠᠭ Архангай аймаг
தாரியட் இயற்கைக்காட்சி
தாரியட் இயற்கைக்காட்சி
ஆர்க்கன்காய் மாகாணம் Arkhangai Province-இன் கொடி
கொடி
ஆர்க்கன்காய் மாகாணம் Arkhangai Province-இன் சின்னம்
சின்னம்
நாடுமங்கோலியா
நிறுவப்பட்டது1931
தலைநகரம்திசெட்செர்லெக்
பரப்பளவு
 • மொத்தம்55,313.82 km2 (21,356.79 sq mi)
ஏற்றம்
(at highest point)
3,529 m (11,578 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்84,584
 • அடர்த்தி1.5/km2 (4.0/sq mi)
நேர வலயம்UTC+8
இடக் குறியீடு+976 133
ஐஎசுஓ 3166 குறியீடுMN-073
வாகனப் பதிவுАР_
இணையதளம்arkhangai.gov.mn
டெர்க்கீன் திசகான் நூர் அகல் காட்சி

ஆர்க்கன்காய் (Arkhangai) (மங்கோலியன்: Архангай) மங்கோலியாவின் 21 மாகாணங்களில் ஒரு மாகாணமாகும். வடக்கு கன்காய் என்ற பெயராலும் அழைக்கப்படும் இம்மாகாணம் கன்காய் மலைத்தொடரின் வடக்கு சரிவுகளில், நாட்டின் மையத்திற்கு சற்று மேற்கில் அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

மங்கோலியாவின் உட்புறத்தில் அமைந்திருக்கும் ஆர்க்கன்காய் மாநிலம், வடகிழக்கில் பல்கன், தென்கிழக்கில் ஒவோர்கன்காய், தெற்கில் பயன்கோன்கோர், மேற்கில் சாவ்கான் மற்றும் வடமேற்கில் கோவ்சுகோய் மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1,290 மீட்டர் அல்லது 4,232 அடி உயரத்தில் கார்லக்டை உச்சி நாட்டின் மிக உயரமான பகுதியாக உள்ளது. ஓர்கோன் மற்றும் தமிர் ஆறுகள் சங்கமிக்கும் மீது பகுதியில் மிகக்குறைவான உயரப்புள்ளி இருக்கிறது. கோர்கோ-டெர்க்கீன் திசகான் நூர் தேசியப் பூங்காவின் ஒரு பகுதியாக மிகவும் நன்கு அறியப்பட்ட எரிமலை கோர்கோ அழிந்து போனது.

நீர் நிலைகள்

[தொகு]

சுலூட், கானுய் மற்றும் தமிர் ஆறுகள் கன்காய் மலைகளின் பள்ளத்தாக்குகளில் தோன்றிப் பாய்கின்றன. சில சிறிய கிளை நதிகளுடன் அவை ஒன்றாகச் சேர்ந்து மங்கோலியாவின் பிரதானமான ஆறான செலிங்கா ஆற்றில் கலக்கின்றன. ஓர்கோன் ஆறு ஒரு குறுகிய நீட்சியாக மாகாணத்தின் கிழக்கு இறுதியில் பாய்கிறது.

மேற்கில் டெர்க்கீன் திசகான் நூர் ஏரி அமைந்துள்ளது. ஒரு மாபெரும் பெரிய பாறையை எடுத்து வெளியே எறிந்த போது இந்த ஏரி உருவானதாக புராணக் கதையில் கூறப்படுகிறது. பாறையை தூக்கி எறிந்தவன் அப்பாறை இருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தபோது அங்கிருந்த வென்பரப்பைக் கண்டு ஆச்சரியத்தில், "வெள்ளை ஏரி பார்!" என்று உரக்கக் கூறினான். இந்த ஆச்சரியமே ஏரியின் பெயராக அமைந்தது என்று கருதப்படுகிறது.

கிழக்கு திசையின் சற்று தூரத்தில் உள்ள இப்பாறையின் முடிவிடம் தைக்கார் சுலூ என அழைக்கப்படுகிறது. நிர்வாக மாவட்டத்தின் ஒரு பிரிவான இம்மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஏரி ஔகிநூர் அதே பெயரில் அழைக்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

மக்கள் புரட்சி 1921 இல் வெற்றி பெற்ற பிறகு, நிர்வாக அலகு மங்கோலியா முழுவதும் நிர்வாக அலகில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. செயின் நோயன் கான் துணைமாவட்டத்தின் அடித்தளத்தில் திசெட்செர்லெக் மண்டல் ஊல் துணைமாவட்டம் நிறுவப்பட்டது. 1931 ஆம் ஆண்டு திசெட்செர்லெக் மண்டல் ஊல் துணைமாவட்டத்தின் பகுதிகளில் இருந்து ஆர்கன்காய் துணைமாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆர்க்கன்காய் உருவாக்கப்பட்ட அந்த நேரத்தில், 35 நிர்வாகப் பிரிவுகள், 22.285 குடும்பங்களைச் சேர்ந்த 65.333 குடிமக்கள், மற்றும் 1.800.000 கால்நடைகள் முதலியன இருந்தன. 1586 இல் தோற்ருவிக்கப்பட்ட சயா குரீ மடாலயத்தில் துணைமாவட்ட மையம் திசெட்செர்லெக் நிறுவப்பட்டது.

மக்கள் தொகை

[தொகு]

ஆர்க்கன்காய் மாகாணம் 55313.82 கிலோமீட்டர்2 அல்லது 21357 சதுரமைல் பரப்பளவைக் கொண்டுள்ளது.2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 இல் இம்மாகாணத்தின் மக்கள் தொகை 89,282 நபர்கள் ஆகும். 2009 டிசம்பர் 31 இல் இத்தொகை 89,331 ஆனது [1]. இவர்கள் அணைவரும் 19 நிர்வாகப் பிரிவுகளிலும், 99 துணை மாவட்டங்களிலும் வாழ்ந்தனர்.

போக்குவரத்து

[தொகு]

தற்சமயம் திசெட்செர்லெக் விமான நிலையத்திற்கு எந்தவிதமான விமான சேவையும் இல்லை. அஞ்சல் பேருந்து எனப்படும் பொதுப் பேருந்து தினசரி திசெட்செர்லெக்கிற்கு காலை 8:00 மணிக்கு உளான்பாத்தரில் உள்ள டிராகன் மையத்தில் இருந்து கார்கோரின் வழியாக பயணிக்கிறது. ஒருவருக்கான கட்டணம் சுமார் 20,000 மங்கோலிய தோக்ரோக் (எம்.என்.டி) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறியவகை சிற்றுந்துகளும் தினசரி திசெட்செர்லெக்கிற்கு வந்து போகின்றன. ஆனால் மிகவும் குறைந்த நம்பகத்தன்மை கொண்டுள்ளன.

வானிலை

[தொகு]

குளிர்காலத்தில் சராசரியாக −30 °செல்சியசு முதல் −38 °செல்சியசு வரையிலான வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலத்தில் இவ்வெப்பநிலை 25 °செல்சியசு முதல் 36 °செல்சியசு வரையான அளவுகளைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

விவசாயமே இந்த துணைமாவட்டத்தின் முக்கியமான வருவாய் தரும் தொழிலாகும். அதிலும் குறிப்பாக கால்நடை வளர்ப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. 2004 ஆண்டு தரவுகளின் படி இம்மாகாணத்தில் 1,948,000 வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஆடுகள், செம்மறி, மாடுகள் (காட்டெருமைகள் மற்றும் கைனாக்சு வகை கலப்பின மாடுகள் உட்பட), குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் முதலியன மேற்கண்ட வீட்டு விலங்குகளில் அடங்கும். குறிப்பாக ஒட்டகங்கள் தென்கிழக்கு நிர்வாகப் பிரிவுகளில் வளர்க்கப்பட்டன. [2]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dec. 31 2009 estimation. Arkhangai Aimag Statistical Service". Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
  2. National statistical office, Lifestock count 2004, Khavsralt 44

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arkhangai Aimag
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்கன்காய்_மாகாணம்&oldid=3542869" இலிருந்து மீள்விக்கப்பட்டது