ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
RSS
An RSS Feed icon.
கோப்பு நீட்சி.rss, .xml
அஞ்சல் நீட்சிapplication/rss+xml (Registration Being Prepared)[1]
இயல்புWeb syndication
வடிவ நீட்சிXML

ஆர்எஸ்எஸ் (இது பெரும்பாலும் "Real Simple Syndication" என்பதன் சுருக்கமாக கூறப்படுகிறது) என்பது வலைப்பதிவுகள், செய்திகள், இசை மற்றும் ஒளிப்படம் போன்ற அடிக்கடி புதுப்பிக்கப்படும் பணிகளை ஒரு தரப்படுத்தப்பட்ட வடிவத்தில் பிரசுரிக்கப் பயன்படுத்தப்படும் வலையோடை வடிவத்தின் ஒரே தொகுப்பாகும்.[2] ஒரு ஆர்எஸ்எஸ் (இது "தொடுப்பு" என்றோ, "வலையோடை"[3] என்றோ அல்லது "சேனல்" என்றோ அழைக்கப்படுகிறது) ஆவணமானது, முழுமையான அல்லது சுருக்கமான உரை தொகுப்பையும், பிரசுரிப்பு தேதிகள் மற்றும் காப்புரிமை போன்ற மீதரவையும் (metadata) உள்ளடக்கி இருக்கும். வலையோடைகள் தானாகவே உள்ளடக்கங்களைப் பெற்று எடுத்துக்காட்டுவதன் மூலம் பிரசுரிப்பாளர்களுக்குப் பலனளிக்கிறது. அதேபோல விருப்பமான வலைத்தளங்களின் இற்றைகளைச் சரியான நேரத்தில் பெற மற்றும் பதிவு செய்ய விரும்பும் வாசகர்களுக்கும், பல வலைதளங்களின் ஓடைகளை ஒரே இடத்தில் திரட்ட விரும்பும் வாசகர்களுக்கும் இது பயன்படுகிறது. "ஆர்எஸ்எஸ் வாசிப்பான்", "ஓடை வாசிப்பான்", அல்லது "திரட்டி" என்றழைக்கப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் தொடுப்புகளைப் படிக்க, இது இணையம் சார்ந்தோ, தனிக்கணினி சார்ந்தோ அல்லது கைபேசி இயங்குதளத்தை சார்ந்தோ அமைந்திருக்கும். ஒரு தரப்படுத்தப்பட்ட XML கோப்பு வடிவமானது, தகவல் ஒரேயொருமுறை பிரசுரிக்கப்பட்டு, பல வெவ்வேறு நிரல்கள் மூலமாக பார்வையிட அனுமதிக்கிறது. வாசிப்பானின் அந்த ஓடையின் வலைமுகவரிக்குள் நுழைவதன் மூலமாக ஒரு பயனர் ஒரு ஓடையைப் பதிவு செய்கிறார் அல்லது இணைய உலாவியில் இருக்கும் ஆர்எஸ்எஸ் சின்னத்தை சொடுக்குவதன் மூலமாக பதிவு செய்கிறார். அந்த ஆர்எஸ்எஸ் வாசிப்பானானது, பயனர் பதிவு செய்திருக்கும் ஓடைகளைத் தொடர்ந்து புதிய செய்திகள் உள்ளனவா என்று பரிசோதித்த, ஏதேனும் புதிய பதிவுகளைக் கண்டவுடன் அவற்றை பதிவிறக்கம் செய்து, ஓடைகளைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் வசதியாக ஒரு பயனர் இடைமுகப்பை அளிக்கிறது.

XML என்ற, ஒரு பொதுவான தரவு வடிவத்தை உருவாக்குவதற்கு பயன்படும் ஒரு குறிப்பு, ஆர்எஸ்எஸ் வடிவங்கள் குறிக்கப் பயன்படுகிறது. 1999- ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே ஆர்எஸ்எஸ் வடிவங்கள் பரிணமித்திருந்தாலும் கூட,[4] 2005 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் தான் ஆர்எஸ்எஸ் பரந்த பயன்பாட்டைப் பெற்று, அதன் ("") என்ற சின்னம் பல முன்னணி இணைய உலாவிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[5]

வரலாறு[தொகு]

இந்த ஆர்எஸ்எஸ் வடிவங்கள் வரும் முன்பு அவற்றின் முந்தைய வலை முயற்சிகள், வலை ஆலோசனைக்குழுமத்தின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் பரவலாக பிரபலமடையவில்லை. வலைதளங்களைப் பற்றிய தகவல்களை மறுசீராக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை யோசனை 1995-க்கு முன்னதாகவே, ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்ப குழுமத்தில் அப்போது இருந்த இராமனாதன் வி. குஹாவிற்கும், மற்றவர்களுக்கும் முதன்மை உள்ளடக்கத்தரவின் அடித்தளத்தை அபிவிருத்தி செய்யும்போது அவர்களுக்கு தோன்றியது.[6]

ஆர்எஸ்எஸ்-இன் முதல் பதிப்பான ஆர்டிஎஃப் வலைத்தள தொகுப்பு என்பது, மார்ச் 1999-ல் குஹாவினால் நெட்ஸ்கேப்பில், My.Netscape.Com என்ற வலைத்தளத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த பதிப்பு தான் ஆர்எஸ்எஸ் 0.9 என்று அழைக்கப்பட்டது.[4] 1999 ஜூலையில், நெட்ஸ்கேப்பின் டேன் லிப்பி (Dan Libby), ஆர்டிஎஃப் ஆக்கக்கூறுகளை நீக்கியதன் மூலமாகவும், டேவ் வைனரின் (Dave Winer) ஸ்க்ரிப்டிங்நியூஸ் ஆலோசனைக்குழும வடிவத்தில் இருந்து ஆக்கக்கூறுகளை உள்ளிணைத்து கொண்டதன் மூலமாகவும் அதன் வடிவத்தை எளிமைப்படுத்தி,[7] ஆர்எஸ்எஸ் 0.91 என்ற ஒரு புதிய பதிப்பை உருவாக்கினார்,[2] மேலும் ஆர்எஸ்எஸ்-க்கு "ரிச் சைட் சம்மரி" (Rich Site Summary) என்று புதிய பெயரையும் அளித்த லிப்பி, "எதிர்கால ஆவணம்" என்று அந்த வடிவத்தின் மேற்படி முன்னேற்றத்திற்கான குறிப்புகளையும் அளித்தார்.[8]

அதற்கடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ஆர்எஸ்எஸ் அபிவிருத்தியில், நெட்ஸ்கேப் அளித்த இறுதி பங்களிப்பாக இது இருந்தது. ஆர்எஸ்எஸ் இணைய பதிப்பார்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாலும், அவர்கள் தங்களின் தொடுப்புகள் My.Netscape.Com வலைத்தளத்திலும், மற்றும் பிற முந்தைய ஆர்எஸ்எஸ் தளங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பியதாலும், ஏப்ரல் 2001-ல் புதிய உரிமையாளரான ஏஓஎல் (AOL), நிறுவனத்தை மறுசீராக்கம் செய்த போது, My.Netscape.Com அதனிடமிருந்த ஆர்எஸ்எஸ் சேவையைக் கைவிட்டது மட்டுமின்றி, ஏஓஎல் அந்த வடிவத்திற்கு உதவிய கருவிகள் மற்றும் ஆவணங்களையும் நீக்கியது.[9]

நெட்ஸ்கேப்பின் உதவி மற்றும் அதன் இசைவு இல்லாமல், இரண்டு நிறுவனங்கள் இந்த இடைவெளியை நிரப்பத் தோன்றின. அவையாவன: ஆர்எஸ்எஸ்-டேவ் பணிக்குழுமம் மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ படிக்க மற்றும் எழுத கூடிய, நெட்ஸ்கேப்பைச் சாராத, சில பிரசுரிப்பு கருவிகளை முதன்முதலாக வெளியிட்ட, யூசர்லேண்ட் (UserLand) மென்பொருளை சொந்தமாகக்கொண்ட ஒயினர் என்ற அமைப்பு.

ஒரு மாற்றியமைக்கப்பட்ட பதிப்பான ஆர்எஸ்எஸ் 0.91 வரன்முறையை யூசர்லேண்ட் வலைத்தளத்தில் ஒயினர் வெளியிட்டு, தங்களின் நிறுவன தயாரிப்புகளில் எவ்வாறு இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் உள்ளடக்கி, இந்த ஆவணத்திற்கான காப்புரிமையையும் அந்நிறுவனம் கோரியது.[10] ஒரு சில மாதங்களுக்கு பின்னர், ஆர்எஸ்எஸ்-க்கான ஓர் அமெரிக்க வணிகக்குறிக்கு யூசர்லேண்ட் பதிவு செய்தது, பின்னர் USPTO வணிகக்குறி பரிசோதகர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கத் தவறியதால், 2001 டிசம்பரில் அதன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.[11]

குஹா மற்றும் ஓ'ரிஎல்லி மீடியாவின் பிரதிநிதிகள், மற்றும் ஏனையவர்களையும் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்-டேவ் பணிக்குழுமம், என்ற ஒரு திட்டம், மேற்கொண்டு டிசம்பர் 2000-த்தில் ஆர்எஸ்எஸ் 1.0 என்ற பதிப்பை உருவாக்கியது.[12] இந்த புதிய பதிப்பு, ஆர்எஸ்எஸ் 0.9-ல் முன்னர் இருந்ததைப் போன்றே மீண்டும் ஆர்டிஎஃப் சைட் சம்மரி என்ற பெயரை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வந்து, ஆர்டிஎஃப்-க்கான உதவிச்சேவையை மறுஅறிமுகம் செய்ததுடன், XML பெயரிடங்களின் உதவிச்சேவையையும் சேர்த்து கொண்டு, டுப்ளின் கோர் (Duplin Core) போன்ற தரப்படுத்தப்பட்ட மீதரவு சொற்களில் இருந்து ஆக்கக்கூறுகளை எடுத்து கையாண்டிருந்தது.

டிசம்பர் 2000-த்தில், வைனர் ஆர்எஸ்எஸ் 0.92 என்ற பதிப்பை [13] புதிதாக சில ஆக்கக்கூறுகளின் அறிமுகத்தோடும், சிறியளவிலான மாற்றங்களை இதில் செய்தும், இவை ஆர்எஸ்எஸ்-ல் ஒலிக் கோப்புகளைக் கையாள அனுமதித்து வெளியிட்டபோது, பாட்கேஸ்டிங்கிற்கு (podcasting) வழிவகுத்தது. ஆர்எஸ்எஸ் 0.93 மற்றும் ஆர்எஸ்எஸ் 0.94 ஆகியவற்றிற்கான வரைவுகளையும் அவர் வெளியிட்டு, அவை அதன்பிறகு திரும்பப் பெறப்பட்டன.[14]

ஆர்எஸ்எஸ் வடிவத்தின் ஒரு முக்கிய புதிய பதிப்பான ஆர்எஸ்எஸ் 2.0 என்பதை ஒயினர் நிறுவனம் செப்டம்பர் 2002-ல், அதன் மூல விரிவுச்சொல்லடையான "Real Simple Syndication"-உடன் வெளியிட்டது. ஆர்எஸ்எஸ் 0.94 வரைவில் சேர்க்கப்பட்டிருந்த எழுதும் வசதியை நீக்கிவிட்டு, பெயரிடங்களுங்கான (namespaces) உதவிச்சேவையைச் சேர்த்துவிட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் 2.0 ஓடைக்குள் சேர்க்கப்பட்ட பிற உள்ளடக்கங்ளுக்கு மட்டுமே பொருந்துவதாக மட்டுமேயன்றி,[15] ஆர்எஸ்எஸ் 0.92 உடன் ஒவ்வுமை காக்கும் வகையில், இந்த பெயரிட உதவிச்சேவை அமைக்கப்பட்டிருந்தது. (ஆட்டம் (Atom) போன்ற பிற தரமுறைகள் இந்த வரையறையைத் திருத்த முயற்சித்த போதும் கூட, ஆர்எஸ்எஸ்-ல் இருந்து முழு பெயரிட உதவிச்சேவையைக் கொண்ட பிற வடிவமைப்புகளுக்குப் பிரபலத்தன்மையை மாற்றுவதற்கு போதியளவிலான பிற தரவுகளோடு ஆர்எஸ்எஸ் ஓடைகள் திரட்டப்படவில்லை.)

ஒயினர் அல்லது ஆர்எஸ்எஸ்-டேவ் பணிக்குழுமம் ஆகிய இரண்டுமே நெட்ஸ்கேப்புடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதால், அவை இரண்டுமே ஆர்எஸ்எஸ் பெயர் அல்லது முத்திரை ஆகியவற்றின் மீது ஓர் அதிகாரப்பூர்வ உரிமை கோரிக்கையை விடுக்க முடியவில்லை. ஆகவே, ஆர்எஸ்எஸ்-ற்கு எந்த நிறுவனம் உரிமைபெற்ற பிரசுரிப்பாளர் என்பதன் மீது, ஆலோசனை முன்னேற்றக் குழுவில் (syndication development community) தொடர்ந்து சர்ச்சை இருந்து வர இது ஊக்கம் அளித்தது.

இந்த தொடர்ச்சியான விவாதத்தின் விளைவுகளில் ஒன்றாக, Atom என்ற மாற்று ஆலோசனை வடிவம் ஒன்று ஜூன் 2003-ல் தொடங்கி உருவாக்கப்பட்டது.[16] ஆர்எஸ்எஸ்-ஐ சுற்றி இருந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு ஒரு தெளிவான தொடக்கத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தோடு ஊக்குவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக உருவாகிய இந்த Atom ஆலோசனை வடிவம், IETF-ஆல் பரிந்துரைக்கப்பட்ட தரமுறையான RFC 4287-ஆல் ஏற்று கொள்ளப்பட்டது.

2003 ஜூலையில், ஓயினர் மற்றும் யூசர்லேண்ட் மென்பொருள் ஆர்எஸ்எஸ் 2.0 வரன்முறையின் காப்புரிமையை ஹார்வர்டின் பெர்க்மென் இணைய & சமூக மையத்திற்கு (Harvard's Berkman Center for Internet & Society) ஒதுக்கி அளித்து, இங்கே ஒயினர் வெறும் ஒரு பார்வையாளராக தன்னுடைய பங்களிப்பைத் தொடங்கினார்.[17] அதே சமயத்தில், வரன்முறைகளை கட்டியெழுப்புவது, பிரசுரிப்பது, வடிவங்கள் குறித்த கேள்வி-பதிலை அளிப்பது என்பதை நோக்கமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் குழுவை, பெரென்ட் சிமென்ஸ் மற்றும் ஜோன் உதெல் ஆகியோருடன் ஒயினர் தொடங்கினார்.[18]

டிசம்பர் 2005-ல், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குழுவும்[19], அவுட்லுக் குழுவும்[20] அவற்றின் வலைப்பதிவுகளில், மோஜில்லா பயர்பாக்ஸ் உலாவியில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட தொடுப்பு சின்னத்தைத் (feed icon) தாங்களும் பயன்படுத்தப் போவதாக அறிவித்தன. ஓபெரா மென்பொருள் நிறுவனம் பெப்ரவரி மாதம் 2008 ஆம் ஆண்டு இதையே பின்தொடர்ந்தது.[சான்று தேவை] இதற்கு முன்னர் ஆலோசனைத் தரவைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டு வந்த பல்வேறு வகையான பெரிய அளவிலான சின்னங்களையும், எழுத்துக்களையும் மாற்றி, ஆரஞ்சு கட்டத்தில் வெள்ளை ரேடியோ அலைகள் கொண்ட ஆர்எஸ்எஸ் மற்றும் "ஆட்டம்" (Atom) ஓடைகளுக்கான சின்னத்தைத் தரப்படுத்தியது.

ஜனவரி 2006-ல், தனது விருப்பத்திற்கிணங்க ஆர்எஸ்எஸ் வடிவத்தின் அபிவிருத்தியைத் தொடரவும், அதிலுள்ள சில தெளிவின்மையைத் தீர்க்கவும் டேவ் ஒயினரின் பங்களிப்பு இல்லாமலேயே ரோஜர்ஸ் கேடென்ஹெட் ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் குழுவை மறுதுவக்கம் செய்தார். ஜூன் 2007-ல், மைக்ரோசாஃப்ட் அதன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7-ல் செய்திருப்பது போல, பெயரிட பண்புகளுடன் பெயரிடங்கள் மூல ஆக்கக்கூறுகளை விரிவாக்க கூடும் என்பதை உறுதிப்படுத்த அந்த குழு வரன்முறையில் அவர்களின் பதிப்பை மாற்றி அமைத்தது. அவர்களின் கருத்துப்படி, வேறுபட்டவகையில் எடுத்துக்கொள்ளக்கூடிய தெளிவில்லா விளக்கமுடன் இது இருப்பதால், இதற்கு அனுமதி உள்ளதா அல்லது இல்லையா என்பதில் பதிப்பாளர்கள் தெளிவில்லாமல் இருக்கிறார்கள்.

மாற்று வடிவங்கள்[தொகு]

ஆர்எஸ்எஸ்-இல் பல்வேறு பதிப்புகள் உள்ளன, அவை இரண்டு முக்கிய பிரிவுகளின் (ஆர்டிஎஃப் மற்றும் 2.*) கீழ் வருகின்றன.

ஆர்டிஎஃப் (அல்லது ஆர்எஸ்எஸ் 1.*) பிரிவு பின்வரும் பதிப்புகளை உள்ளடக்கியது:

 • ஆர்எஸ்எஸ் 0.90 என்பது மூல நெட்ஸ்கேப் ஆர்எஸ்எஸ் பதிப்பாகும். ஆர்எஸ்எஸ் என்பது ஆர்டிஎஃப் சைட் சம்மரி என்று ஆர்டிஎஃப் தரப்படுத்தலின் தொடக்ககால பணி வரைவுகளின் அடிப்படையில் அவ்வாறு அழைக்கப்பட்ட இது, இறுதி ஆர்டிஎஃப் பரிந்துரைகளுக்கு ஒவ்வுமையுடையதல்ல.
 • ஆர்எஸ்எஸ் 1.0 என்பது, ஆர்டிஎஃப் சைட் சம்மரி என்று குறிக்கக்கூடிய, ஆர்எஸ்எஸ்-டேவ் பணிக்குழுமத்தால் வெளியிடப்பட்ட கட்டற்ற வடிவமாகும். ஆர்எஸ்எஸ் 1.0 என்பதும் ஆர்எஸ்எஸ் 0.90 போலவே ஒரு ஆர்டிஎஃப் வடிவமானாலும், இது அதனோடு முழுமையாக ஒவ்வுமைகொள்ளுவதில்லை, ஏனென்றால் 1.0 பதிப்பு இறுதி ஆர்டிஎஃப் 1.0 பரிந்துரையின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பதால் ஆகும்
 • ஆர்எஸ்எஸ் 1.1-ம், ஆர்எஸ்எஸ் 1.0-த்தை இற்றைப்படுத்த மற்றும் மாற்றி அமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு கட்டற்ற வடிவமாகும். இதன் வரன்முறை, ஆர்எஸ்எஸ்-டேவ் பணிக்குழுமத்தாலோ அல்லது வேறு பிற நிறுவனங்களாலோ எந்த வகையிலும் பரிந்துரைக்கப்படுவதும் இல்லாதா மற்றும் ஆதரிக்கப்படவும் இல்லாத, எந்த கட்டுப்பாடும் இல்லாத வரைவாக இருந்தது.

ஆர்எஸ்எஸ் 2.* (தொடக்கத்தில் யூசர்லேண்ட், தற்போது ஹார்வர்டு) பிரிவானது பின்வரும் பதிப்புகளைக் உள்ளடக்கியது:

 • ஆர்எஸ்எஸ் 0.91 என்பது எளிமைப்படுத்தப்பட்ட, நெட்ஸ்கேப்பால் வெளியிடப்பட்ட ஆர்எஸ்எஸ் பதிப்பாகும். இந்த எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பின் பதிப்பெண் உண்மையில் யூசர்லேண்ட் மென்பொருளிடம் இருந்து டேவ் வைனரினால் எடுத்துக்கொள்ளப்பட்டது. நெட்ஸ்கேப்பின் பதிப்பு அப்போது ரிச் சைட் சம்மரி என்றழைக்கப்பட்டு; இது ஒரு ஆர்டிஎஃப் வடிவம் இல்லையென்றாலும், பயன்படுத்துவதற்கு எளிமையாக இருந்தது.
 • ஆர்எஸ்எஸ் 0.92 முதல் 0.94 வரையில் அனைத்தும் ஆர்எஸ்எஸ் 0.91 வடிவத்தின் விரிவாக்கமாகும். இவை மிக பெரும்பாலும் ஒன்றுக்கு ஒன்று ஒவ்வுமையுடன் இருந்தன. மேலும் ஒயினரின் ஆர்எஸ்எஸ் 0.91 பதிப்போடும் ஒவ்வுமையுடன் இருந்தது. ஆனால் ஆர்எஸ்எஸ் 0.90 பதிப்பிற்கு ஒவ்வுமையுடையதல்ல.
 • ஆர்எஸ்எஸ் 2.0.1 என்பது உள்பதிப்பு எண் 2.0 என்பதைக் கொண்டிருந்தது. ஆர்எஸ்எஸ் 2.0.1 என்பது "நிறுத்தம்" செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் பதிப்பு எண்ணில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வெளியிடப்பட்ட சில காலத்திலேயே மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் என்பது தற்போது Real Simple Syndication என்பதன் சுருக்கமாக கூறப்படுகிறது. இந்த பதிப்பில் இருக்கும் முக்கிய மாற்றம் என்னவென்றால், இதிலிருக்கும் XML பெயரிடங்களைப் பயன்படுத்திய ஒரு விளக்கமான விரிவாக்க பொறியமைவாக இருக்கிறது.[21]

பெரும்பாலும், ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் பிந்தைய பதிப்புகள் முந்தை பதிப்புகளோடு ஒவ்வுமையுடையதாகவே இருக்கின்றன (0.90-த்தில் இருக்கும் தரப்படுத்தப்படாத ஆர்டிஎஃப் தொடரமைப்பு இல்லாமல்), மேலும் இரண்டு பதிப்புகளுமே, நேரடியாகவோ (2.* பிரிவில்) அல்லது RDF (1.* பிரிவில்) மூலமாகவோ ஏதோவொரு வகையில், XML பெயரிடங்களைப் பயன்படுத்திய முறையாக ஆவணப்படுத்தப்பட்ட விரிவாக்க பொறியமைவுகளை உள்ளடக்கி உள்ளன. பெரும்பாலான ஆலோசனை மென்பொருள் இரண்டு பிரிவுகளுக்கும் பொருந்தி வரும். ஆர்எஸ்எஸ் விமர்சகரும், Atom ஆலோசகருமான மார்க் பில்க்ரிமால் 2004-ல் எழுதப்பட்ட "ஆர்எஸ்எஸ் பொருத்தப்பாடு குறித்த கட்டுக்கதை" பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம் என்ற கட்டுரை, ஆர்எஸ்எஸ் பதிப்பில் இருக்கும் ஒவ்வுமை சிக்கல்களை மிக விளக்கமாக விவாதிக்கிறது.

இந்த விரிவாக்க பொறியமைவுகள் ஒவ்வொரு பிரிவும் பிறவற்றில் இருக்கும் புதியவைகளைக் கண்காணிக்கும் வசதியை அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆர்எஸ்எஸ் 2.* பிரிவு தான் உள்ளடங்கி இருந்தனவற்றிற்கு முதன்முதலில் ஆதரவு அளித்தது. இதனால் பாட்கேஸ்டிங்கிற்கான தற்போதைய முன்னணி தேர்வாகவும் இது மாறியுள்ளது. அடுத்து as of 2005 என்ற வடிவம் ஐட்யூன்ஸினாலும் மற்றும் பிற பாட்கேஸ்டிங் மென்பொருளினாலும் பயன்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், ஆர்எஸ்எஸ் 1.* பிரிவிற்கும், mod_enclosure ஆகியவற்றிற்கும் தற்போது ஓர் உள்ளடங்கிய விரிவாக்கம் இருக்கிறது. இதை போலவே, ஆர்எஸ்எஸ் 2.*-இன் முக்கிய வரன்முறை சைனோப்சிஸிற்கு கூடுதலாக முழு-தகவலுக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் 1.* மார்க்அப்பை (பெரும்பாலும்) ஒரு விரிவாக்கமாக பயன்படுத்த முடியும். இதுதவிர, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7-ல் பயன்படுத்துவதற்கான மைக்ரோசாஃப்டின் ஒரு புதிய திட்டம் உட்பட, பல்வேறு பொதுவான வெளிப்புற விரிவாக்க தொகுப்புகளும் இருக்கின்றன.

HTML மார்க்அப்புடன் தான் மிக சிக்கலான ஒவ்வுமைச் சிக்கல் உள்ளது. யூசர்லேண்டின் ஆர்எஸ்எஸ் வாசிப்பான்—பொதுவாக இது ஆதார நிறுவுதலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது—தொடுப்புகளில் இருந்து HTML மார்க்அப்களை உண்மையில் நீக்குவதில்லை. இதன் விளைவாக, பிரசுரிப்பாளர்கள் அவர்களின் ஓடைகளில் தலைப்புகளுக்குள்ளும், விஷயங்களின் விளக்கங்களுக்குள்ளும் HTML மார்க்அப்களைத் திணிக்க தொடங்கினார்கள். இந்த நடவடிக்கை வாசகர்களிடமும் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இது முறையற்ற தரப்படுத்தலாக மாறுவதற்கான வாய்ப்பும் இருந்தது. இன்றும் கூட மென்பொருள்கள் இந்த மார்க்அப்களை, குறிப்பாக தலைப்புகளில் எவ்வாறு கையாள்வது என்பதில் சில பொருந்தாதன்மை நிலவுகிறது. நிறுவன-குறிமுறையிலான HTML-லின் உதாரணங்களை உள்ளடக்க இந்த ஆர்எஸ்எஸ் 2.0 வரன்முறை பின்னர் புதுப்பிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், முந்தைய எல்லா உரைகளும் பயன்படுத்த கூடியவையாகவே இருக்கும்.

As of சனவரி 2007, www.syndic8.com வலைத்தளத்தின் தரவுகளில் இருந்து கிடைப்பது என்னவென்றால், 0.91, 1.0 மற்றும் 2.0 ஆகிய ஆர்எஸ்எஸ்-இன் மூன்று முக்கிய பதிப்புகள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில், ஆர்எஸ்எஸ் 0.91 உலகளவிலான ஆர்எஸ்எஸ் பயன்பாட்டில் 13 சதவீத இடத்தைப் பிடிக்கிறது. ஆர்எஸ்எஸ் 2.0 67 சதவீதமும், ஆர்எஸ்எஸ் 1.0 பதிப்பு 17 சதவீத பங்களிப்பையும் பெறுகிறது.[22] எவ்வாறிருப்பினும், இந்த புள்ளிவிபரங்கள் மற்றொரு போட்டி இணைய ஓடை வடிவமைப்பான Atom பயன்பாட்டை உள்ளடக்கவில்லை. As of ஆகத்து 2008, www.syndic8.com வலைத்தளம் 546,069 மொத்த ஓடைகளையும் பட்டியலிடுகிறது. இதில் 86,496 Atom-ன் சில வகைகளாகும். மேலும் 438,102 ஆர்எஸ்எஸ்-இன் சில வகைகளாகும்.[23]

கூறுபாடுகள்[தொகு]

அனைத்து ஆர்எஸ்எஸ் கூறுபாடுகளின் முதன்மை நோக்கமும், தரவுகளின் மிக விரைவான ஆலோசனைக்காக உருவாக்கப்பட்ட அடிப்படை XML திட்டத்தை விரிவாக்குவதே ஆகும். இன்னும் தரபடுத்தப்படாததால், இது இயல்பாகவே மூல ஆர்எஸ்எஸ் வரன்முறையை மாற்றாமல், அதிக மாற்று பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.

இந்த விரிவாக்கத்தை உள்ளடக்க, கோட்பாடுகளுக்கும் மற்றும் அந்த கோட்பாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் பெயர்களை அளிக்க XML பெயரிடத்தின் மூலமாக மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சொற்களஞ்சியம் (ஆர்எஸ்எஸ் உலகில், "கூறுபாடு"; XML உலகில் இது, "திட்டம்") அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உருவாக்கப்பட்ட பெயரிடங்களுடன் கூடிய சில ஆர்எஸ்எஸ் 2.0 கூறுபாடுகளாவன:

பிட்டொரண்ட் மற்றும் ஆர்எஸ்எஸ்[தொகு]

pear-to-peer பயன்பாடுகள் அடிப்படையிலான பல பிட்டொரண்ட்களும் ஆர்எஸ்எஸ்-ற்கு ஆதரவளிக்கின்றன. இதுபோன்ற ஓடைகள் (இது டொரண்ட்/ஆர்எஸ்எஸ்-கள் அல்லது டொரண்ட்கேஸ்ட்கள் (Torrentcasts) என்றும் அழைக்கப்படுகிறது) ஆர்எஸ்எஸ் வாசிப்பான் கோப்புகளைக் கண்டறிந்த உடனேயே தானாகவே அவற்றை பதிவிறக்குவதற்கான வாடிக்கையாளர் பயன்பாடுகளையும் அனுமதிக்கிறது (இது பிராட்கேட்சிங் (Broadcatching) என்றும் வழங்கப்படுகிறது).

குறிப்புதவிகள்[தொகு]

 1. "The application/rss+xml Media Type". Network Working Group. May 22, 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-08-16.
 2. 2.0 2.1 Libby, Dan (1999-07-10). "RSS 0.91 Spec, revision 3". Netscape Communications. Archived from the original on 2000-12-04. பார்க்கப்பட்ட நாள் 2007-02-14.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 3. "வலை தொடுப்புகள் | ஆர்எஸ்எஸ் | தி கார்டியன் | guardian.co.uk", தி கார்டியன் , இலண்டன், 2008, வலைத்தளம்: கார்டியன்யூகே-வலைத்தொடுப்புகள்.
 4. 4.0 4.1 "My Netscape Network: Quick Start". Netscape Communications. Archived from the original on 2000-12-08. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
 5. "Icons: It's still orange". Microsoft RSS Blog. December 14, 2005. பார்க்கப்பட்ட நாள் 2008-11-09.
 6. Lash, Alex (1997-10-03). "W3C takes first step toward RDF spec". Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2007-02-16.
 7. RSS Advisory Board (June 7, 2007). "RSS History". பார்க்கப்பட்ட நாள் 2007-09-04.
 8. "MNN Future Directions". Netscape Communications. Archived from the original on 2000-12-04. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
 9. Andrew King (2003-04-13). "The Evolution of RSS". Archived from the original on 2011-01-06. பார்க்கப்பட்ட நாள் 2007-01-17.
 10. Winer, Dave (2000-06-04). "RSS 0.91: Copyright and Disclaimer". UserLand Software. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
 11. U.S. Patent & Trademark Office. "'RSS' Trademark Latest Status Info".
 12. RSS-DEV Working Group (2000-12-09). "RDF Site Summary (RSS) 1.0". Archived from the original on 2013-01-12. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
 13. Winer, Dave (2000-12-25). "RSS 0.92 Specification". UserLand Software. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
 14. Winer, Dave (2001-04-20). "RSS 0.93 Specification". UserLand Software. Archived from the original on 2006-11-02. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
 15. Harvard Law (2007-04-14). "Top-level namespaces". பார்க்கப்பட்ட நாள் 2009-08-03.
 16. Festa, Paul (2003-08-04). "Dispute exposes bitter power struggle behind Web logs". news.cnet.com. பார்க்கப்பட்ட நாள் 2008-08-06. The conflict centers on something called Really Simple Syndication (RSS), a technology widely used to syndicate blogs and other Web content. The dispute pits Harvard Law School fellow Dave Winer, the blogging pioneer who is the key gatekeeper of RSS, against advocates of a different format.
 17. "Advisory Board Notes". RSS Advisory Board. 2003-07-18. பார்க்கப்பட்ட நாள் 2007-09-04.
 18. "RSS 2.0 News". Dave Winer. பார்க்கப்பட்ட நாள் 2007-09-04.
 19. சின்னங்கள்: இது இன்னும் ஆரஞ்சாகவே உள்ளது, மைக்ரோசாஃப்ட் வலைப்பதிவு, டிசம்பர் 14, 2005
 20. ஆர்எஸ்எஸ் சின்னத்தின் அருமை, மைக்ரோசாஃப்டின் (அவுட்லுக் திட்டத்தின் மேலாளர்) மைக்கேல் ஏ. அப்ரொன்டியால் வலைப்பதிவில் பிரசுரிக்கப்பட்டது, டிசம்பர் 15, 2005
 21. "Namespaces in XML 1.0" (2nd ed.). W3C. August 16, 2006.
 22. பீச்பிட் (Peachpit) கட்டுரை
 23. "Syndic8 புள்ளிவிபர அட்டவணை". Archived from the original on 2002-08-03. பார்க்கப்பட்ட நாள் 2010-03-23.

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Web syndication வார்ப்புரு:Aggregators