உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரிப் வாலா தெஹ்சில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரிப்வாலா (ஆங்கிலம்: Arifwala உருது : عارِف والا ) என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாக்பட்டன் மாவட்டத்தின் ஒரு தெஹ்ஸில் ஆகும். [1]இது பக்கப்பட்டன் மாவட்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆரிஃப்வாலா சக் எண் 61 / ஈபி என பெயரிடப்பட்ட ஒரு கிராமமாக மட்டுமே இருந்தது. பின்னர் அந்த கிராமத்தில் தங்கியிருந்த "ஆரிஃப் பாபா" என்ற சூஃபியின் பெயரால் இந்த கிராமம் ஆரிஃப்வாலா என்று அழைக்கப்பட்டது. அவரின் கல்லறை ஆரிப்வாலாவின் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 1908 ஆம் ஆண்டில், துணை ஆளுநர் ஹர்பர்ட் என்பவர் புதிய நகரமான அரிஃப்வாலாவை நிறுவினார். இப்பகுதியில் வசிக்கும் மிக முக்கியமான இனக்குழுக்கள் ராஜ்பூத் மோஹ்லா, குஜ்ஜார், அரேன், ராஜா, கரல், ராய், ராணா, சுகேரா மற்றும் டோக்ரா என்பவர்கள் ஆவார்கள். 1987 ஆம் ஆண்டில் ஆரிஃப்வாலா துணைப்பிரிவு என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் இப்பகுதி பாக்பட்டன் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆரிப்வாலாவிற்கு அருகிலுள்ள பிரபலமான இடம் கபாலா ஆகும். அரேன் இனத்தவர் இங்கு வசிக்கும் முக்கிய இனக்குழுவினர் ஆவார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள்.

சக் 159 இ.பி. கிராமம் ஆரிப்வாலாவில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. சையத் ஆபிட் உசேன் சைதி என்பவர் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க முயற்சிகளின் அடிப்படையில் நிறைய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர் சக் 159 ஈபி கிராமத்தில் மின்சாரம் வழங்க போராடியவர் ஆவார். 1960 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் சக் 159 ஈபியை மாதிரி கிராமமாக அங்கீகரிக்க முடிந்தது. ஆரிஃப்வாலா தெஹ்ஸில் நிர்வாக ரீதியாக 30 நகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[2]

மக்கட்தொகை

[தொகு]

இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் ஆவார்கள். சுமார் 75% வீதமான மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். 25% வீதமான மக்கள் மட்டுமே நகர்ப்புறத்தில் வாழ்கின்றனர். ஆனால் ஆரிஃப்வாலா வளாகத்தில் தொழில்மயமாக்கலினால் மக்கள் நகர்ப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர். ஆரிஃப்வாலா தெஹ்ஸில் 295,146 ஏக்கர் (5 கி.மீ 2 ) பரப்பளவில் 720,000 மக்கட் தொகையைக் கொண்டது. நகர்ப்புற பகுதி 457 ஏக்கர் (1.82 கிமீ 2 ) ஆகும். மேலும் விவசாய பகுதி 1274 ஏக்கர் (3.18 கிமீ²) பரப்பளவைக் கொண்டுள்ளது. பஞ்சாபி முதன்மை மொழியாக பேசப்படுகின்றது. ஆனால் உருது மொழியும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

பொருளாதாரம்

[தொகு]

உள்ளூர் பொருளாதாரத்திற்கு விவசாயம் முக்கிய பங்காற்றுகின்றது. குறிப்பாக பருத்தி, தானியங்கள், உருளைக்கிழங்கு, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் அரிசி என்பன பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரிஃப்வாலாவின் தானிய சந்தை பாகிஸ்தானின் மிகப்பெரிய தானிய சந்தைகளில் ஒன்றாகும். இங்குள்ள விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிடுகின்றனர். அவை பாகிஸ்தான் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தொழில்

[தொகு]

ஆரிப்வாலா நகரத்தின் தொழில்கள் பிரதானமாக வேளாண் சார்ந்தவையாகும். முக்கிய தொழில்களில் பானம் மற்றும் உணவு பதப்படுத்தல், அரிசி ஆலைகள், பருத்தி விதை நீக்கும் ஆலைகள், மாவு ஆலைகள், உர நிறுவனங்கள், காய்கறி நெய் மற்றும் சமையல் எண்ணெய் ஆலைகள், கோழி தீவனம், விதைகள் பதப்படுத்துதல் மற்றும் தோல் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

காலநிலை

[தொகு]

ஆரிப்வாலாவில் கோடைக்கால வெப்பநிலை 45 ° C ஆகவும், குளிர்கால வெப்பநிலை 05 ° C ஆகவும் இருக்கும். புறநகர்ப் பகுதிகளின் மண் மிகவும் வளமானதாகும்.

சான்றுகள்

[தொகு]
  1. "NRB: Local Government Elections". web.archive.org. 2012-02-09. Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "archive". archive.is. Archived from the original on 2012-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரிப்_வாலா_தெஹ்சில்&oldid=3586112" இலிருந்து மீள்விக்கப்பட்டது