ஆரா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரா
பணிநடிகை, விளம்பரப்பெண்
செயற்பாட்டுக்
காலம்
2014 ம் ஆண்டு முதல்

ஆரா (Aara) தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இளம் இந்திய நடிகை ஆவார். பைசா (2016) மற்றும் ஒரு வழி (2022) போன்ற தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

திரைத்துறை[தொகு]

தமிழ் திரைப்பட பத்திரிகை தொடர்பு அதிகாரி துரைப் பாண்டியின் என்பவரின் மகளே, இளம் நடிகையான ஆரா. [1]இவர் ஜீவா (2014) மற்றும் பூஜை (2014) ஆகிய படங்களில் துணை வேடங்களில்நடிக்க ஆரம்பித்து, பைசா (2016) என்ற திரைப்படத்தில் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் பெண் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தனது நடிப்புக்கலையை தொடங்கியுள்ளார். [2] [3] அதைத் தொடர்ந்து அவர் குரு உச்சத்துல இருக்காரு (2017) என்ற படத்திலும் நடித்துள்ளார்.[4] [5]

2022 ம் ஆண்டில் அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. 2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படமான குழலியில் முதன்முதலில் மலையாள நடிகையான எஸ்தர் அனில் நடிப்பதாக திட்டமிடப்பட்டது. தனிப்பட்ட காரணங்களால் இவர் இப்படத்தில் நடிக்காமல் விலகியதால் நடிகை ஆரா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். மற்றொன்று நடிகை கோவை சரளாவுடன் இணைந்து நடித்த ஒரு வழி என்ற திரைப்படம். . [6]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரப்பெயர் குறிப்புகள்
2014 ஜீவா
பூஜை வாசுவின் தங்கை
2016 பைசா வேணி
2017 குரு உச்சத்துல இருக்காரு தமிழ்செல்வி
2022 குழலி குழலி
ஒரு வழி செல்வி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Actress Aara - "Paisa" is mandatory in everyone's life. But it shouldn't overtake" | New Movie Posters".
  2. Subhakeerthana, S. (5 May 2016). "Following her heart: Aara". Deccan Chronicle.
  3. "Aara will be seen as a slum-dweller - Times of India". The Times of India.
  4. "Actress Aara open talk about Guru Uchaththula Irukkaru". WoodsDeck.
  5. "Hopes of a debutant: Look out for Director B Dhandapani's political comedy 'Guru Uchaththula Irukkaru'". The New Indian Express.
  6. "Actress Aara in One Way and Kuzhali.Movies". 13 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரா_(நடிகை)&oldid=3937136" இலிருந்து மீள்விக்கப்பட்டது