உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ்தர் அனில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்தர் அனில்
2018இல் எஸ்தர் அனில்
பிறப்புஎஸ்தர் அனில்
27 ஆகத்து 2001 (2001-08-27) (அகவை 22)[1]
வயநாடு, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
 • திரைப்பட நடிகை
 • தொலைக்காட்சித் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2010 - தற்போது வரை
பெற்றோர்
 • அனில் ஆபிரகாம்
 • மஞ்சு ஆபிரகாம்
விருதுகள்கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருது

எஸ்தர் அனில் (Esther Anil ) மலையாளம் , தெலுங்கு மொழி படங்களில் முதன்மையாக பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.[2] 2010 இல் வெளியான "நல்லவன்" படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

2013ஆம் ஆண்டு வெளியான பரபரப்பூட்டும் திரைப்படமான திரிஷ்யம், அதன் தொடர்ச்சியான திரிஷ்யம் 2 ஆகிய படங்களில் அனுமோல் ஜார்ஜ் (அனு) என்ற வேடத்திற்காகவும், 2020இல் வெளியான கனவுருப்புனைவுத் திரைப்படமான "ஊலூ"வில் ஊலூ என்ற வேடத்திற்காகவும் இவர் மிகவும் பிரபலமானவர்.[3] [4] [5] 2016ஆம் ஆண்டில் சிறந்த குழந்தைக் கலைஞருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகளை எஸ்தர் வென்றுள்ளார். தமிழ் மொழியில் வெளியான திரிஷ்யம் 92013) படத்தின் மறு ஆக்கமான, பாபநாசம்(2015) படத்தில் இவர் திரிஷ்யம் படத்தில் நடித்த தனது பாத்திரத்தையே மீண்டும் நடித்திருந்தார்.[6] [7] தமிழில் வெளிவராத குறளி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[8] தெலுங்கில் ஜோஹார் படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.[9])

பாபநாசம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகை நிவேதா தாமஸுடன் எஸ்தர்

சான்றுகள்

[தொகு]
 1. "Esther Anil with Family & Friends". Entertainment Corner. 29 April 2015.
 2. "Esther Anil is a busy bee - Times of India". The Times of India.
 3. "Child no more: 'Drishyam' actor Esther Anil turns leading lady with 'Johar'". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
 4. "Esther Anil in Maya's world". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
 5. "Esther turns heroine for Shane Nigam movie - Times of India". The Times of India.
 6. "Esther Anil in Drishyam remake! - Times of India". The Times of India.
 7. "Esther Anil reprises her role as Anu". gulfnews.com.
 8. "Mohanlal's daughter in 'Drishyam,' Esther Anil, all set to debut as heroine in Tamil - Times of India". The Times of India.
 9. Chowdhary, Y. Sunita (12 February 2020). "Child no more: 'Drishyam' actor Esther Anil turns leading lady with 'Johar'". The Hindu.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்தர்_அனில்&oldid=3452077" இலிருந்து மீள்விக்கப்பட்டது