ஆய்வாளர் நற்குறிப்பு - தாவரவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆய்வாளர் நற்குறிப்பு (author citation in botany) என்பது, ஒரு தாவரவியல் பெயரை செல்லுபடியாகும் வகையில், அத்தாவரத்தினை ஆராயந்து, அது குறித்து வெளியிட்ட நபர் அல்லது நபர்களை மேற்கோள்களாக, அவரது நற்குறிப்புகளைக் காட்டுவதைக் குறிக்கிறது. அதாவது ஆல்கா, பூஞ்சை மற்றும் தாவரங்களுக்கான பன்னாட்டு பெயரிடல் குறியீட்டால் (ICN) குறிப்பிடப்பட்டுள்ளபடி, அம்முறையானத் தேவைகளைச் செய்யும் போது, அத்தாவரத்தை முதலில் வெளியிட்டவர் பெயரைக் குறிப்பிடும் மரபு ஆகும் .[1] ஒரு சிற்றின ஆய்வாளரின் பெயரை, சிற்றினத்தின் பெயரை அடுத்து இடுவது வழமையாகும். ஆனால், அது மரபியில் அடிப்படையில் சிற்றினத்தின் வகைப்பாட்டியல் இடம் மாறுபட்டால், முந்தைய ஆய்வாளரின் பெயரையும், அடைப்புக்குறிக்குள் இடுவர். தாவரவியலில், ஆய்வாளரின் பெயரை, நிலையான சுருக்கச் சொற்களால் சுருக்கமாகக் கூறுவது, கட்டாயமில்லை என்றாலும், வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஆய்வாளர் பெயரை குறிப்பிடுவது, தாவரவியலும், விலங்கியலிலும். நடைமுறையில் வேறுபாடுகளுடன் பின்பற்றப்படுகின்றன. விலங்கியலில், பெரும்பாலும், ஆய்வாளர் கண்டறிந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடுவர். பொதுவாக, ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கப்படுவார். ஆனால், இரு துறையினரும், தனித்தனி குறியீடுகளின் பரிந்துரைகளையும் பின்பற்ற, சிறப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தாவரவியல் பெயர்களாது, பன்னாட்டு தாவரப் பெயர்களுக்கானக் குறிப்பகம் (International Plant Names Index)[2] என்ற சீர்தர அமைப்பால் கவனிக்கப்பட்டு, பிணக்கு இல்லாமல், அனைத்துத் தாவரவியல் அறிஞர்களாலும் பின்பற்றப்படுகின்றன.

பெயரிடல் முறைமை[தொகு]

எடுத்துக்காட்டாக, Rubus L. இதில், L. என்பது, Rubus இனத்தை விவரித்தத் தாவரவியலாளர் கார்ல் லின்னேயசைக் குறிக்கிறது. ஏனெனில், முதன் முதலில், இந்த தாவரத்தினைக் குறித்து, 1753 இல் அவர் வெளியிட்ட நூலின் (Species Plantarum) 492 ஆம் பக்கத்தில் கூறியுள்ளார்.

Rubus ursinus Cham. & Schldl. என்பதனை இரு அறிஞர்கள் ஆராய்ந்து வெளியிட்டமையால் இருவரின் பெயரும் குறிப்பிடுவர்

Andropogon aromaticus Sieber ex Schult. என்பதில் இரு ஆய்வாளரின் பெயர்களும் பன்னாட்டு விதிப்படி தரப்பட்டுள்ளது[3]Article 46.4 இதில் Franz Sieber என்பவர் முதலில் விவரித்தார். அதனை க் கொண்டு , அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், Josef Schultes விவரித்தார். எனவே, ex என்று குறிப்பிடப்படுகிறது.

பின்வரும் வடிவங்கள் அனைத்தும் சரியானவை:

 • Rubus ursinus Cham. & Schldl.
 • Rubus ursinus Cham. et Schldl.
 • Rubus ursinus von Chamisso & von Schlechtendal
 • Rubus ursinus von Chamisso et von Schlechtendal

ஒன்றிற்கும் மேற்பட்ட ஆய்வாளரின் பெயர்கள்:

 • Helianthemum sect. Atlanthemum (Raynaud) G.López, Ortega Oliv. & Romero García
 • Helianthemum apenninum Mill. subsp. rothmaleri (Villar ex Rothm.) M.Mayor & Fern.Benito
 • Helianthemum conquense (Borja & Rivas Goday ex G.López) Mateo & V.J.Arán Resó

வெளியிடப்பட்ட படைப்பின் படைப்புரிமை பெயரிலிருந்து வேறுபட்டது என்பதைக் குறிக்க "in" என்ற துணைச் சொல் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, Verrucaria aethiobola Wahlenb. in Acharius, Methodus, Suppl.: 17. 1803

 • Rosa gallica L. var. gallica, என்றே குறிப்பிடப்பட வேண்டும். "Rosa gallica var. gallica L." என்று குறிப்பிடக் கூடாது.

ஆய்வாளர் பெயர்களைத் திருத்துதல்[தொகு]

தாவரவியல் குறியீட்டின் 47 வது பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி, சில சமயங்களில் கண்டறியும் உண்மைகள் மாறுபடலாம். இந்த நிகழ்வுகளில் அசல் ஆசிரியர் பண்புக்கூறு மாற்றப்படவில்லை, ஆனால் "திருத்துதல்" என்ற சுருக்கத்தைப் பயன்படுத்தி அசல் படைப்பாற்றலுடன் சேர்க்கலாம்.

 • Phyllanthus L. emend. Müll. Arg
 • Globularia cordifolia L. excl. var. (emend. Lam.).

இரண்டாவது எடுத்துக்காட்டில், "excl. var.", abbr. என்பது வகைகளை உள்ளடக்குதலைத் தவிர்ப்பதைக் குறிக்கிறது.

(pro sp.) என்பது தனித் தாவரமாகவும், (pro hybr.) கலப்பினத்தையும் குறிக்கிறது.

 • Carex bebbii Olney, nomen nudum (alternatively: nom. nud.)

வெளியிடப்பட்ட பெயரைக் கொண்டுள்ளது. ஆனால், ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் அல்லது நோயறிதல் இல்லாதவற்றைக் குறிக்கிறது.

மேலும் காண்க[தொகு]

தாவரவியல் பெயர் - பயிரிடப்பட்ட தாவரங்களுக்கான சர்வதேச குறியீட்டு குறியீடு, எழுத்தாளர் சுருக்கத்தால் தாவரவியலாளர்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

 1. McNeill, J.; Barrie, F.R.; Buck, W.R.; Demoulin, V.; Greuter, W.; Hawksworth, D.L.; Herendeen, P.S.; Knapp, S. et al. (2012). International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011. Regnum Vegetabile 154. A.R.G. Gantner Verlag KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-87429-425-6. Archived from the original on 2013-11-04. https://web.archive.org/web/20131104060236/http://www.iapt-taxon.org/nomen/main.php?page=title. பார்த்த நாள்: 2019-12-29. 
 2. "Author Query Page". International Plant Names Index. February 7, 2006 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
 3. McNeill, J.; Barrie, F.R.; Buck, W.R.; Demoulin, V.; Greuter, W.; Hawksworth, D.L.; Herendeen, P.S.; Knapp, S. et al. (2012). International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011. Regnum Vegetabile 154. A.R.G. Gantner Verlag KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-87429-425-6. Archived from the original on 2013-11-04. https://web.archive.org/web/20131104060236/http://www.iapt-taxon.org/nomen/main.php?page=title. பார்த்த நாள்: 2019-12-29. 

வெளி இணைப்புகள்[தொகு]