ஆயிஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயிஷா (612-678) முகம்மது நபியின் துணைவியருள் ஒருவர்.இஸ்லாத்தின் அடிப்படையில் ‘உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்)என்றும் அழைக்கப்படுபவர்.[1][2] [3] சித்தீக்கா என்ற சிறப்புப் பெயர் இவருக்கு உண்டு.

பிறப்பு[தொகு]

அபூபக்கர்(ரலி) உம்மு ரூமான்(ரலி) தம்பதியருக்கு மகளாக மக்காவில் பிறந்தார்கள்[4].

இவர்களுக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உண்டு. இவர்களில் அப்துர் ரஹ்மான்(ரலி) சொந்த சகோதரர் ஆவார். முஹம்மத் என்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் மூன்றாவது மனைவியான அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) என்பவருக்குப் பிறந்தவர். அவ்ஃப் இப்னு ஹாரித் (ரலி) என்பவர் பால் குடி சகோதரர் ஆவார். இரண்டு சகோதரிகளும் அபூபக்ர் (ரலி) அவர்களின் மற்ற மனைவியருக்குப் பிறந்தவர்கள். அஸ்மா(ரலி) அவர்கள் கதீலா பின் அப்துல் உஜ்ஜா (குதைலா என்போரும் உண்டு) என்ற முதல் மனைவிக்கும், உம்மு குல்சூம்(ரலி) என்பவர் நான்காவது மனைவி உம்மு ஹபீபா(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அல்-குர்ஆன் 33:6 [1] பரணிடப்பட்டது 2014-06-06 at the வந்தவழி இயந்திரம்
  2. Carl, Brockelmann (1947). Geschichte der Islamischen Volker und Staaten [History of the Islamic Peoples, with a Review of Events, 1939-1947.. German: G. P. Putnam's Sons. 
  3. Nabia, Abbott (1942). Aishah The Beloved of Muhammad[2]. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-405-05318-4.. 
  4. John L., Esposito (November 12, 2012). "A'ishah In the Islamic World: Past and Present"[3]. Oxford Islamic Studies Online. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிஷா&oldid=3812203" இலிருந்து மீள்விக்கப்பட்டது