ஆயிரம் ஜன்னல் வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆயிரம் ஜன்னல் வீடு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய செட்டிநாடு வீடுளில் ஒன்றாகும். இது காரைக்குடியின் பிரதான அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.[1]

சிமெண்டு கலவையை பயன்படுத்தாமல், காரைக்குடி பகுதிக்கே உரித்தான சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி வீடுகளின் கட்டமைப்பு, கலையம்சம் மற்றும் பன்முக பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் காரைக்குடி, பாரம்பரியம் மிக்க நகரமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

வீட்டின் அமைப்பு[தொகு]

இவ்வீடானது 20,000 சதுர அடியில் மிகவும் விசாலமான முறையில் அமைந்துள்ளது, இவ்வீட்டில் 25 பெரிய அறைகளும் மற்றும் ஐந்து கூடங்களும் உள்ளன. கிட்டத்தட்ட 20 கதவுகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஜன்னல்கள் அமைப்புடன் 1000 ஜன்னல் கதவுகளுடன் கண்களை கவரும் விதத்தில் இவ்வீடு கட்டப்பட்டுள்ளது. வீட்டின் பிரதான வாசலுக்கான சாவியே கிட்டத்தட்ட ஒரு அடி நீளம் கொண்டுள்ளது.[3]

இவ்வீட்டின் மரவேலைப்பாடுகள் பர்மா தேக்கு மரங்களைக் கொண்டும், ஆத்தங்குடி மற்றும் இத்தாலிய சலவை கற்களைக் கொண்டு தரை வேலைப்பாடுகளும் அமைந்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வண்ண பூச்சுக்களும், ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. [4] பெல்ஜியம் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விளக்குகள் இவ்வீட்டிற்கு அழகு சேர்க்கின்றன.[5]

திட்ட மதிப்பீடு[தொகு]

1941 ஆம் வருடத்தில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் இந்திய ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரம்_ஜன்னல்_வீடு&oldid=3118182" இருந்து மீள்விக்கப்பட்டது