பேச்சு:ஆயிரம் ஜன்னல் வீடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Muhamed~tawiki: இக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் மேற்கோளாகத் தரப்பட்டுள்ள பக்கத்திலுள்ள வாக்கியங்களை மாற்றமின்றி கொண்டுள்ளது. இது விக்கியின் பதிப்புரிமைக் கொள்கைக்கு எதிரானதால் கட்டுரை நீக்கப்படும் நிலைக்குள்ளாகலாம். ஆகவே தயவுசெய்து அவ்வாக்கியங்களை உங்களது சொந்த வாக்கியங்களில் விக்கிநடைக்கேற்றவாறு மாற்றியமைக்க வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:38, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Kanags: "ஆயிரம் ஜன்னல் வீடு" என்பதற்கான ஒத்த ஆங்கிலப் பெயரை நீக்கியதன் காரணம் எனக்கு விளங்கவில்லை. இனிவரும் நாட்களில் எந்தந்தக் கட்டுரைகளுக்கு ஆங்கில இணைப் பெயரை இடக்கூடாதென்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் எனது சந்தேகத்தைத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 08:19, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Booradleyp1: பிறமொழிச் சொற்களுக்கு கட்டாயம் அதன் ஆங்கிலச் சொல்லும், மூல மொழிச் சொல்லும் தரப்பட வேண்டும். ஆயிரம் ஜன்னல் வீடு இது முழுக்கத் தமிழ்ச் சொற்றொடர். இதற்கு எதற்கு ஆங்கிலப் பெயர்ப்பு வேண்டும் எனத் தெரியவில்லை. நீங்கள் ஏன் வேண்டும் என நினைக்கிறீர்கள்? ஏதாவது காரணம் உண்டா?--Kanags (பேச்சு) 08:25, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Kanags: ஆங்கிலப் பெயர் கட்டுரையில் இருந்தால், ஆங்கிலத்தில் தேடுபவர்களுக்கும் சிக்க வாய்ப்புண்டு என்பதாலும் ஆங்கிலப் பெயர் அடைப்புக் குறிக்குள் இடப்படுவதாக நினைத்திருந்தேன். அதானால்தான் இந்த சந்தேகம் எழுந்தது. நன்றி--Booradleyp1 (பேச்சு) 14:56, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறுவதும் சரியானதே. சில தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் வேறாக உள்ளன. அவ்வாறான இடங்களில் ஆங்கிலத்தையும் தரலாம். ஆனால், AAYIRAM JANNAL VEEDU, Thousand Windows House போன்ற புதிய சொற்களைக் கொடுத்து அவ்வாறு தேட வைத்து ஊக்குவிப்பது ஆரோக்கியமானதல்ல.--Kanags (பேச்சு) 06:29, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]