ஆயக்காரன்புலம்

ஆள்கூறுகள்: 10°23′47″N 79°45′07″E / 10.396376°N 79.752041°E / 10.396376; 79.752041
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயக்காரன்புலம்
—  கிராமம்  —
ஆயக்காரன்புலம்
இருப்பிடம்: ஆயக்காரன்புலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°23′47″N 79°45′07″E / 10.396376°N 79.752041°E / 10.396376; 79.752041
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 2,266 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஆயக்காரன்புலம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்திற்குட்பட்ட ஒரு பெரிய வருவாய் கிராமம் ஆகும்.இந்தக் கிராமம் [4]ஆயக்காரன்புலம்-1,2,3,4 சேத்தி என நான்கு ஊராட்சிகளாக செயல்படுகிறது.[5] நான்கு பிரிவிற்கும் நான்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் செயல்படுகின்றனர். ஆயக்காரன்புலம் என்ற பெயர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கம்பரால் பெயர் பெற்றது என்ற வரலாறும் இங்கு பேசப்படுகிறது.[மேற்கோள் தேவை]

பள்ளிகள்[தொகு]

  • ஆயக்காரன்புலம்-2 ம் சேத்தியில் ஆண்கள் மட்டுமே பயிலக்கூடிய இரா.நடேசனார் அரசு மேனிலைப் பள்ளி உள்ளது.
  • ஆயக்காரன்புலம்-3ம் சேத்தியில் பெண்களுக்கான பள்ளி உள்ளது.

மழை மாரியம்மன் கோயில்[தொகு]

ஆயக்காரன்புலம் 1, 2ம் சேத்திக்கு பொதுவாக திங்கள் சந்தையடியில் மழைமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் கடைசி வாரம் ஆடித்திருவிழா நடைபெறும். இவ்விழாவிற்கு ஆயக்காரன்புலம் வருவாய் கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து கொண்டாடுகின்றனர்.

கோவிலின் சிறப்புகள்[தொகு]

ஆயக்காரன்புலம் 3ஆம் சேத்தியில் சுயம்பு ஸ்ரீகலிதீா்த்த அய்யனாா் கோவில் உள்ளது.இக்கோவிலில் பக்தா்கள் பிராத்தனை செய்தால் அனைத்தும் நடக்கும் என்பது மக்ளின் நம்பிக்கை அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனா்.இங்கு பக்தா்கள் இரவில் தங்கி அய்யனை வழிபட்டும் தங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாடகக்கலை தமிழகத்தில் அழிந்து வரும் கலையான மேடை நாடகம் இன்றும் இந்த கோவிலில் நடைபெற்ற வண்ணம் உள்ளது

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Vedaranyam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2015.
  5. "Vedaranyam Panchayat Villages". National Informatics Centre. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயக்காரன்புலம்&oldid=3646054" இலிருந்து மீள்விக்கப்பட்டது