ஆம்கோய் புதைபடிவ பூங்கா

ஆள்கூறுகள்: 23°37′23″N 87°35′21″E / 23.62306°N 87.58917°E / 23.62306; 87.58917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்கோய் மர புதைபடிவ பூங்காவின் நுழைவாயில்
ஆம்கோய் மர புதைபடிவ பூங்காவின் உள்ளே
ஆம்கோய் மர புதைபடிவ பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படிமம்

ஆம்கோய் புதைபடிவ பூங்கா (Amkhoi Fossil Park) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் இல்லம்பஜார் அருகே அமைந்துள்ள ஒரு புதைபடிவ பூங்கா ஆகும்.

விளக்கம்[தொகு]

ஆம்கோய் புதைபடிவ பூங்கா 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவ மரங்களைக் கொண்டுள்ளது. இப்பூங்கா மேற்கு வங்க மாநில வனத் துறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] 2016ஆம் ஆண்டு இல்லம்பஜார் அருகே உள்ள ஆம்கோய் கிராமத்தில் உள்ள கிராம மக்கள் குளம் தோண்டும்போது, பெரிய எலும்பு போன்ற அமைப்புகளைக் கண்டனர். எலும்பு போன்ற கட்டமைப்புகள் உண்மையில் மர புதைபடிவங்கள் என்று பின்னர் நிறுவப்பட்டது. 2017-18ஆம் ஆண்டில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. ஆம்கோய் மர புதைபடிவ பூங்கா என்று அழைக்கப்பட்டது. இந்த பூங்காவின் நோக்கம் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே புதைபடிவங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உதவுவதும் ஆகும்.[2] இது மேற்கு வங்க மாநிலத்தின் ஒரே புதைபடிவ பூங்கா ஆகும். இப்பூங்கா 10 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஹெட்ஜ் சுவர்களால் பிரிக்கப்பட்ட பாதைகளால் சூழப்பட்ட அழகுபடுத்தப்பட்ட புல்வெளியில் புதைபடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருமொழிப் பலகைகள் புதைபடிவங்களின் விவரங்கள் மட்டுமல்ல, புதைபடிவ செயல்முறை பற்றிய விவரங்களையும் பார்வையாளர்கள் காணலாம்.[2]

புதைபடிவங்கள்[தொகு]

இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதைபடிவங்கள் ஆஞ்சியோசுபெர்மின் (பூக்கும் தாவரங்கள்) தண்டு பகுதிகளாகும். மரங்கள் முதலில் ராஜ்மஹால் மற்றும் சோட்டாநாக்பூர் மலைகளில் செழித்து வளர்ந்த காடுகளின் பகுதியாக இருந்தன. மரங்கள் வெள்ளத்தால் கொண்டு வரப்பட்டு, மெல்லிய மணல் மற்றும் களிமண்ணின் கீழ் படிந்து, படிப்படியாக புதைபடிவங்களாக மாறியதாகக் கருதப்படுகிறது. இங்குக் காணப்படும் புதைபடிவங்கள் டிப்டெரோகார்பேசி, அனாகார்டியேசி, காம்ப்ரேடேசியா மற்றும் லெகுமினோசே ஆகிய தாவரக் குடும்பங்களைச் சேர்ந்தவை.[2][3]

வருகை[தொகு]

இளம்பஜார் அருகே அமைந்துள்ள இந்த பூங்கா சாந்திநிகேதன், போல்பூரின் சுற்றுலாத் தலத்திலிருந்து எளிதாக அணுகலாம். பூங்காவின் வார விடுமுறை நாளாகப் புதன்கிழமை உள்ளது. மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையாளர்களுக்காகப் பூங்கா திறந்திருக்கும். மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ₹ 10 மற்றும் ₹ 5 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. State Forest Department, Birbhum. "AMMKHOI FOSSIL PARK ECO-TOURISM PROJECT BIRBHUM DIVISION" (PDF). www.birbhum.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  2. 2.0 2.1 2.2 2.3 Datta, Rangan (12 July 2022). "Amkhoi Wood Fossil Park offers a hoard of natural treasures". My Kolkata. The Telegraph. https://www.telegraphindia.com/my-kolkata/places/visit-amkhoi-wood-fossil-park-near-bolpur-santiniketan-which-features-fossilised-wood-specimens-and-a-botanical-garden/cid/1874313. Datta, Rangan (12 July 2022). "Amkhoi Wood Fossil Park offers a hoard of natural treasures". The Telegraph. My Kolkata. Retrieved 13 July 2022.
  3. 3.0 3.1 Gangopadhyay, Uttara (18 January 2021). "This geological treasure is less than 20km by road from Bolpur in West Bengal". Outlook Traveller. https://www.outlookindia.com/outlooktraveller/explore/story/71099/do-not-miss-this-fossil-park-near-shantiniketan-in-west-bengal. Gangopadhyay, Uttara (18 January 2021). "This geological treasure is less than 20km by road from Bolpur in West Bengal". Outlook Traveller. Retrieved 13 July 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amkhoi Wood Fossil Park
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்கோய்_புதைபடிவ_பூங்கா&oldid=3771134" இலிருந்து மீள்விக்கப்பட்டது