ஆபிரஹாம் மாஸ்லோவின் ஆளுமைக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆபிரஹாம் மாஸ்லோவின் ஆளுமைக் கோட்பாடு தேவைகளில் உருவாகு ஆளுமை எனப்படுவதாகும்.

அறிமுகம்[தொகு]

மாந்தரின் அடிப்படைத் தேவைகள் எந்த அளவில் நிறைவு பெறுகிறதோ அந்த அடிப்படையில் ஆளுமை அமைகிறது, தம் முழுத் திறன் வளர்ச்சியில் ஒவ்வொரு மாந்தருக்கும் நாட்டம் உண்டு, மாந்தர் வாழ்வில் மகிழ்ச்சி, உற்சாகம், அன்பு போன்றவை தொடர்பானவற்றை மாஸ்லோ விளக்கியுள்ளார்.

மாந்தர் தேவைகள் பிரமிடு[தொகு]

மாஸ்லோவின் மாந்தர் தேவைகள் பிரமிடு கீழ்க்கண்டவாறு பல வகையான திறமைகளைக் கொண்டமைகிறது.

  • உடல் சார்ந்த தேவைகள்
  • பாதுகாப்புத் தேவைகள்
  • பாசத் தேவைகள்
  • மதிப்புத் தேவைகள்
  • தன்னிறைவுத் தேவைகள்

உயர் வளர்ச்சி நிலை[தொகு]

தம்மிடம் உள்ள திறமைகளை வளர்த்துக் கொண்டு முழுமை பெற்ற மாந்தராக வளர்ச்சியடைவதே ஆளுமையின் உயர் வளர்ச்சி நிலை என்று மாஸ்லோ கருதுகிறார். மாந்தரின் ஆளுமை வளர்ச்சி அவரது எந்தெந்த தேவைகள் நிறைவேறுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் கூறுகிறார்.

சான்றாதாரம்[தொகு]

ஆளுமை மேம்பாடு, முனைவர் இரா.சாந்தகுமாரி, ச.வைரவராஜ் (ஆசிரியர்கள்), சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 600 014, டிசம்பர் 2010, பக்.64-65.