மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு (Maslow's hierarchy of needs) என்பது ஆப்ரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) என்பவரால் 1943ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒர் உளவியல் சார் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு முகாமைத்துவக் கற்கைகளில் மனித ஊக்கப்படுத்தல் (Motivation) சார் கோட்பாடுகளில் ஒன்றாக உள்ளது. மாஸ்லோவின் இக் கோட்பாட்டில் மனிதன் என்பவன் முடிவில்லாத பலவித தேவைகளைக் கொண்டிருக்கும் வர்க்கமாவான். ஒரு தேவை பூர்த்தியானதுடன் அவன் இன்னொரு தேவையின் திருப்தியினை நாடி நிற்பான் எனவும், இத்தகைய தேவைகள் ஒரு வரிசை அமைப்பாக காணப்படும் என்றும் கூறினார். இத்தகைய தேவைகளை 5 வகையாக பிரித்து தேவைகளையும் மக்களின் எண்ணிக்கையையும் தொடர்புபடுத்தி அவர் ஒரு பிரமிட் வடிவ விளக்கப்படத்தினை இக் கோட்பாட்டில் முன்வைத்தார்.
இவ் வரைபடத்தில் கீழ் பாகத்தில் காணப்படும் மூன்று வகையான தேவை மட்டங்கள் தாழ் தேவைகள் அல்லது பௌதீகத் தேவைகள் எனவும், உயர் மட்டத்தில் காணப்படும் இரண்டு வகையான தேவைகள் உயர் தேவைகள் அல்லது உளவியல் தேவைகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் மட்டத் தேவைகள் பூர்த்தியானதும் அம் மனிதன் அதனை அடுத்துள்ள உயர்மட்ட தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் உந்தப்படுவான் என மாஸ்லோ இக் கோட்பாட்டில் வரையறுத்துள்ளார்.
தேவைகள்
[தொகு]உடலியற் தேவைகள்
[தொகு]உடலியற் தேவைகள் (Physiological needs) என்பது மனித வாழ்விற்கு அவசியமான மிக முக்கிய முதன்மைத தேவைகளாகும்.உணவு,உடை,உறையுள் போன்றன இப் படிவரிசையில் அடங்கும்.இத்தேவை எல்லா மக்களுக்கும் பொது என்பதால் பிரமிட் வடிவ வரைபடத்தில் அடிப்பகுதியில் காட்டப்பட்டுள்ளது.இத் தேவையின் பூர்த்திக்கு பணம் ஒர் மிகமுக்கிய ஊடகமாகும்.
இத்தேவை அடிப்படை தேவை என்பதால் இதனை ஊக்கப்படுத்தல் தேவையாகக் கருத இயலாது என சில விமர்சமும் உண்டு
பாதுகாப்புத் தேவை
[தொகு]பாதுகாப்புத் தேவை (Safety needs) இது உடலியற் தேவை பூர்த்தியானது தோன்றும் தேவையாகும்.இதில் தொழிலிற்கு பாதுகாப்பு,உயிருக்கு பாதுகாப்பு,உடமைக்கு பாதுகாப்பு,வன்முறை அற்றஇடம் போன்றன உள்ளடங்கும்.
சமூகத் தேவை
[தொகு]படிக்கட்டமைப்பில் 2 வது கட்டம் பூர்தியாக்கப்பட்டதும் தோன்றுவது சமூகத் தேவை ( Love/Belonging needs) ஆகும்.இத் தேவைகள் உணர்வுபூர்வமான உறவுமுறைகளான நண்பர்கள்,துணை,குடும்ப ஆதரவு என்பவற்றின் தேவையினை வேண்டிநிற்கும்
கௌரவத்தேவை
[தொகு]சமூகத்தேவைகள் நிறைவுற்றதும் தோன்றும் அடுத்த தேவையாகும்.கௌரவத் தேவை (Esteem needs) உளவியல் சார்பனது.பிறரால் மதிக்கப்படுதல்,உயர்பதவியினை விரும்புதல்,சொத்துக்கள்,வாகனங்கள் வைத்திருக்க ஆசைப்படுதல் போன்றனவாகும்.
தன்னலத் தேவை
[தொகு]மனிதனுக்கு கடைசியாகத் தோன்றக்கூடிய தேவை தன்னலத் தேவை (Self-actualization) ஆகும்.இதன் பின் அவனுக்கு தேவைகள் இருக்காது என மாஸ்லோ கோட்பாட்டில் கூறுகின்றார்.
விமர்சனம்
[தொகு]முகாமைத்துவ கற்கைகளில் முக்கிய கோட்பாடாக கற்றப்படுகின்றபோதும் மாஸ்லோவின் இக் கோட்பாட்டின் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன அவையாவன:
- தேவைகள் வரிசைபடியே மனிதனுக்கு தோன்றும் என்பதற்கு எவ்வித கட்டுபாடுகள் இல்லை.
- இக் கோட்பாட்டில் வயது கருத்தில் கொள்ளப்படவில்லை.வயது மாற்றதுடன் மானிட தேவைகளும் மாற்றமுறும் என்பது வெளிப்படையாகும்.
- ஒவ்வொருவருக்கும் தேவைகள் வித்தியாசப்படும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- A Theory of Human Motivation
- A Theory of Human Motivation: Annotated பரணிடப்பட்டது 2006-11-10 at the வந்தவழி இயந்திரம்
- Theory and biography including detailed description and examples of self-actualizers
- www.maslow.org
- Maslow's Hierarchy of Needs
- Maslow's Hierarchy of Needs
- Maslow's Hierarchy of Needs பரணிடப்பட்டது 2008-12-18 at the வந்தவழி இயந்திரம்
- As A Man Thinketh பரணிடப்பட்டது 2007-04-04 at the வந்தவழி இயந்திரம் James Allen goes beyond theory for practical application.
உசாத்துணை
[தொகு]- க.தேவராஜா (2002) முகாமைத்துவம் உயர்கல்விச் சேவைப்பதிப்பகம், யாழ்ப்பாணம்..