உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்திரப் பிரதேச விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்திர பிரதேச எக்ஸ்பிரஸ்

ஆந்திர பிரதேச விரைவுவண்டி, இந்திய ரயில்வேயினால் இயக்கப்படும் அதிவிரைவு தொடர்வண்டி ஆகும். இது தெற்கு ரயில்வே, மத்திய மத்திய ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட சில தொடர்வண்டி நிலையங்களை இணைக்கிறது. இது இந்தியாவின் தலைநகரான புது டெல்லியை, தெலுங்கானாவுடனும் ஆந்திரப் பிரதேசத்துடனும் இணைக்கிறது. இது நாள்தோறும் இயங்கும். தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து சென்று தலைநகரான புது டெல்லியினை அடைகிறது. இதன் மொத்த பயண நேரம் 27 மணி நேரம் ஆகும்.

12723 என்ற வண்டி எண்ணினை ஹைதாராபாத் – புதுடெல்லி வண்டிக்கும், 12724 என்ற வண்டி எண்ணினை புதுடெல்லி - ஹைதாராபாத் வண்டிக்கும் இந்திய ரயில்வே ஒதுக்கியுள்ளது. 1976 ஆம் ஆண்டில் இந்த ரயில் சேவைக்கு முதலில் மது தன்டாவதே நியமிக்கப்பட்டார்.

செயல்பாடு

[தொகு]

1978 ஆம் ஆண்டில் ஆந்திர பிரதேச விரைவுவண்டி 23 மணி நேரத்தில் அதன் மொத்த தூரத்தினைக் கடக்குமாறு பயணித்தது. அதன் பின்னர் இந்த வண்டியின் சேவைகளுக்கான (செர்வீஸ்) நேரம் அதிகமாக்கப்பட்டது. இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்ட காலகட்டத்தில் பல பகுதிகளில் வழிப்பாதைகள் ஒற்றை வழிகளாகவே இருந்தன. இதற்கு 1978-களில், செய்திகளை குறிப்புகளால் அனுப்புவதாக இருந்ததே காரணம்.

இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், 14 கோச்சுகளைக் கொண்ட இந்த வண்டியை 2600 குதிரைத் திறன் கொண்ட ALCO - WDM2 டீசல் இஞ்சின் இழுத்துச் சென்றது. 1981 ஆம் ஆண்டு இந்த ரயில்சேவை 21 கோச்சுகளாக உயர்த்தப்பட்டது. அப்போது இணைந்து செயல்படக்கூடிய 5200 குதிரைத் திறன் கொண்ட 2 ALCO (WDM2) இஞ்சினால் இழுக்குமாறு செய்யப்பட்டது.

தற்போது இந்த வண்டியில் 7 குளிரூட்டப்பட்ட கோச்சுகளையும் சேர்த்து மொத்தமாக 24 கோச்சுகள் உள்ளன. இவற்றை மின்சார இஞ்சின் (WAP-7 / WAP4) இழுத்துச் செல்கிறது.

1978 ஆம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 1990 ஆம் ஆண்டுகள் வரை மொத்தமாகவே ஐந்து நிறுத்தங்கள் மட்டுமே இருந்தன. அவை ஜான்சி, போபால், நாக்பூர், பால்ஹர்ஷா, காசிபேட் ஆகியன. அதன் பின்பு, பல இடைநிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு தற்போது மொத்தமாக 27 மணி நேர பயணத்தினைக் கொண்டுள்ளது. இதில் பேன்ட்ரி காரும் உணவு வசதிகளும் கொண்டுள்ளது.[1]

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ரயில்வே நிதியறிக்கையில், புதிய குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆந்திர பிரதேச விரைவுவண்டி வரப்போவதாக அறிவிக்கப்பட்டது. இது ஆந்திர பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் இருந்து தொடங்கும் எனவும் அறிவித்தனர். இதற்கான ரேக் கிடைத்தவுடன் இதன் முதல் ஓட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும் எனக் கூறுகின்றனர். தற்போது இந்திய மதிப்பின் படி 328 ரூபாய் முதல் 4375 ரூபாய் வரை இருக்கைகளின் கட்டண விலையுள்ளது.

வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரங்களும்

[தொகு]

[2][3]

எண் நிலையத்தின் பெயர்
(குறியீடு)
வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள் பாதை
1 ஹைதராபாத் டெக்கான் (HYB) தொடக்கம் 06:25 0 0 1 1
2 செகந்திராபாத் சந்திப்பு (SC) 06:45 06:50 5 10 1 1
3 காசிபேட் சந்திப்பு (KZJ) 08:40 08:42 2 142 1 1
4 ராம்குண்டம் (RDM) 09:48 09:50 2 234 1 1
5 மஞ்சேரியால் (MCI) 10:01 10:02 1 248 1 1
6 பெல்லம்பல்லி (BPA) 10:27 10:28 1 268 1 1
7 சிர்பூர் காகஸ்நகர் (SKZR) 10:54 10:55 1 306 1 1
8 பால்ஹர்ஷா (BPQ) 12:25 12:35 10 376 1 1
9 சத்ரபூர் (CD) 12:54 12:55 1 390 1 1
10 நாக்பூர் (NGP) 15:45 15:55 10 587 1 1
11 போபால் சந்திப்பு (BPL) 21:50 22:00 10 976 1 1
12 ஜான்சி சந்திப்பு (JHS) 02:08 02:16 8 1267 2 1
13 குவாலியர் (GWL) 03:29 03:32 3 1364 2 1
14 ஆக்ரா கண்டோன்மென்ட் (AGC) 05:20 05:23 3 1482 2 1
15 மதுரா சந்திப்பு (MTJ) 06:06 06:08 2 1536 2 1
16 பல்லப்கார் (BVH) 07:50 07:52 2 1641 2 1
17 நிசாமுதீன் (NZM) 08:38 08:40 2 1670 2 1
18 நியூடெல்லி (NDLS) 09:05 முடிவு 0 1677 2 1

குறிப்புகள்

[தொகு]
  1. "Hyderabad To New Delhi Junction". indiarailinfo.com.
  2. "Andhra pradesh Express -12723". cleartrip.com. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-27.
  3. "Seats Reservation Availability In Andhrapradesh Express". indiarailinfo.com.