உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் பேராவூரணிக்கு வடக்கில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மூலவர்

[தொகு]

இக்கோயிலிலுள்ள மூலவராக காளியம்மன் உள்ளார். அன்னையை ஆத்தா என்று கூறும் நிலையில் அவர் உள்ள ஊர் ஆத்தாளூர் என்றழைக்கப்படுகிறது. [1]

அமைப்பு

[தொகு]

கோயில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தீய சக்திகளை அழித்து, மக்களைக் காப்பதற்காக எட்டு கரங்களோடு, எருமைத் தலையினைக் கொண்டு அசுரனை காலால் மிதித்த கோலத்தில் உள்ளார். இங்குள்ள அம்மன் குளம் புனித தீர்த்தமாகக் கருதப்படுகிறது.வேப்ப மரமும், வன்னி மரமும் தல மரங்களாகும்.இங்கு ேவப்பமரம்,வன்னி மரம் மற்றும் வில்வ மரம் ஆகியன ஒரே இடத்தில் இருப்பது மிகவும் விசேசமாகும். [1]


மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்

[தொகு]