உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதி. பாலசுந்தரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதி. பாலசுந்தரன் (பிறப்பு: டிசம்பர் 24, 1934) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தையார் பெயர் சு. ஆதிநாராயண பிள்ளை, தாயார் பெயர் காந்திமதி. திருச்சிராப்பள்ளியில் வசித்து வரும் இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் தனித் தமிழ் வித்துவான், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர். கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றவர். இவர் எழுதிய "சங்க இலக்கியங்கள் புலப்படுத்தும் வழிபாட்டு வரலாறு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி._பாலசுந்தரன்&oldid=3132576" இலிருந்து மீள்விக்கப்பட்டது