ஆதித்திய வர்மன் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதித்தியவர்மன் அருங்காட்சியகம்
MuseumNagariPadang.jpg
நிறுவப்பட்டதுமார்ச் 16, 1977
அமைவிடம்Jalan Diponegoro 10, படாங், இந்தோனேசியா
வகைஇனப்பரப்பு விளக்க அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவுமின்குங்க்பூ மற்றும் மெண்டவாய் கலாச்சாரம் தொடர்பான பொருட்கள்
உரிமையாளர்மேற்கு சுமத்ர அரசு
வலைத்தளம்www.museumadityawarman.org


ஆதித்திய வர்மன் அருங்காட்சியகம் (Adityawarman Museum) இந்தோனேசியாவின் படாங்கில் அமைந்துள்ள ஒரு மாநில அருங்காட்சியகமாகும். ஆதித்தியவர்மன் அருங்காட்சியகம், மேற்கு சுமத்ராவின் மாநில அருங்காட்சியகம் (அருங்காட்சியகம் நேகரி சுமேடாரா பாரத்) என அலுவல்பூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் மேற்கு சுமத்திரா மாகாணத்தின், குறிப்பாக மின்குங்க்பூ மற்றும் மெண்டவாய் கலாச்சாரம் தொடர்பான இன வரைவியல் பொருட்களின் சேகரிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வரலாறு[தொகு]

அருங்காட்சியத்திற்கான ஆலோசனை முதலில் மேற்கு சுமத்ரா மாகாணத்தின் கலாச்சார கல்வித் துறையின் தலைவர் அமீர் அலியால் முன்மொழியப்பட்டது. அதன் அசல் முன்மொழிவு ஒரு 'மின்காக்பாவு கலாச்சாரம் கூடம்' உருவாக்கமாக இருந்தது. அந்த ஆலோசனையை மேற்கு சுமத்ரா ஆளுநருக்கு முன்மொழிந்தவர் ஹருன் அல் ராசித் ஜைன் என்பவராவர். அதே நேரத்தில் இந்த ஆலோசனைக்கு தேசிய அதிகாரிகள் சாதகமாக பதிலளித்தனர். எனவே மேற்கு சுமத்ரா மாகாணத்திற்கான அரச அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

அருங்காட்சியத்துக்கான கட்டுமானம் 1974 ஆம் ஆண்டு 2.6 ஹெக்டர் (6.4 ஏக்கர்) நிலப்பரப்பில் துவங்கியது. கட்டுமானம் முடிய சுமார் 3 ஆண்டுகள் ஆனது. அருங்காட்சியகம் இந்தோனேசியாவின் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சின் சியர்பிப் தயேப் அவர்களால் 1977 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது . 1979 ம் ஆண்டு மே மாதம் 28 ஆம் நாள், இங்கு 'மேற்கு சுமத்திராவின் மாநில அருங்காட்சியகம்' (இந்தோனேசிய அருங்காட்சியகம் நேகரி சுமேடாரா பாரத்) என்ற பெயரில் மாநில அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்பட்டு ஆதித்திய வர்மன் பெயர் சூட்டப்பட்டது. இப்பெயர் 14 ஆம் நூற்றாண்டு மினங்கபுௗ ஹைலேண்ட்சிலுள்ள (Minangkabau Highlands) மலயபுராவின் நிறுவனராகவும் மற்றும் ஆட்சியாளராகவும் இருந்த ஆதித்தர்மர்மன் என்பவரின் பெயராகும்.

படாங் நில நடுக்கத்தின் காரணமாக இந்த அருங்காட்சியகம் பாதிப்படைந்தது. இங்கிருந்த 80 விழுக்காடு பொருட்கள் சேதமடைந்தன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Suryanto (October 12, 2009). "Museum Adityawarman Sumbar Rusak Akibat Gempa". Antara News.