ஆதிச்சிக்காவு துர்காதேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதிச்சிக்காவு துர்காதேவி கோயில் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் செங்கனூர் தாலுக்காவில் பாண்டநாட்டில் அமைந்துள்ளது பழமையான கோயிலாகும். இக்கோயில் ஆதிச்சிக்காவு (அடிச்சிக்காவு) தேவி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில்செங்கனூருக்கு 6 கி.மீ. மேற்கிலும், மன்னாருக்கு 4 கி.மீ. கிழக்கிலும் உள்ளது. இதன் மூலவர் துர்க்கை ஆவார்.[1]

திருவிழாக்கள்[தொகு]

இக்கோயிலில் பத்தாமுதயம், சப்தாஹ யக்ஞம், பொங்கல், பறையெடுப்பு, நவாஹ யக்ஞம் உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

துணைத்தெய்வங்கள்[தொகு]

பிற இந்துக் கோயில்களில் உள்ளதுபோல இக்கோயிலில் துணைத்தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் யக்சியம்மா, நாகராஜா, நாகயட்சி, பிரம்மராட்சஸ் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Adichikkavu Durga Devi Temple