ஆண்ட்ரி ராசொய்லினா
ஆண்ட்ரி ரசொய்லினா Andry Rajoelina | |
|---|---|
2024 இல் ரசொய்லினா | |
| 8-ஆவது மடகாசுகர் அரசுத்தலைவர் | |
| பதவியில் 16 திசம்பர் 2023 – 14 அக்டோபர் 2025 | |
| பிரதமர் |
|
| முன்னையவர் | ரிச்சார்ட் ரவலோமனானா (பதில்) |
| பின்னவர் |
|
| பதவியில் 19 சனவரி 2019 – 9 செப்டம்பர் 2023 | |
| பதவியில் 17 மார்ச் 2009 – 25 சனவரி 2014 மடகாஸ்கரின் உயர் இடைக்கால ஆணையத்தின் தலைவர் | |
| அந்தனானரிவோ நகர முதல்வர் | |
| பதவியில் 12 திசம்பர் 2007 – 3 பெப்ரவரி 2009 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஆண்ட்ரி ராசொய்லினா 30 மே 1974 அந்த்சிராபே, மடகாசுகர் |
| தேசியம் |
|
| அரசியல் கட்சி | இளம் மலகாசிகள் உறுதியானவை |
| துணைவர் | மியாலி ரசக்கந்திசா (தி. 2000) |
| பிள்ளைகள் | 3 |
ஆண்ட்ரி நிரினா ராசொய்லினா (Andry Nirina Rajoelina, ஆண்ட்ரி நிரினா ராஜொய்லினா, பிறப்பு: 30 மே 1974) மடகாசுகர் அரசியல்வாதி. மார்ச் 2009 இல் நாட்டில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மக்கள் எழுச்சி, மற்றும் இராணுவப் புரட்சியை அடுத்து இவர் நாட்டின் குடியரசுத் தலைவராக 2009 மார்ச் 17 இல் இராணுவத் தலைமையினால் அறிவிக்கப்பட்டார். இவர் திசம்பர் 2007 முதல் பெப்ரவரி 2009 வரை தலைநகர் அண்டனானரீவோவின் என்ற பகுதியின் நகர முதல்வராக இருந்தவர்.
செப்டம்பர் 2025 இல், அடிக்கடி ஏற்படும் தண்ணீர், மின்வெட்டுகளுக்கு எதிராக பரவலான போராட்டங்கள் வெடித்தன, இதனால் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ராசொய்லினா 2025 செப்டம்பர் 29 அன்று பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சேயை பதவி நீக்கம் செய்தார்.[1][2] சில அரசியல்வாதிகள் போராட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள சதி செய்வதாகவும், அவர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த பரிசீலித்ததாகவும் அவர் ஆதாரங்களை வழங்காமல் கூறினார்.[3] 2025 அக்டோபர் 12 அன்று, ராசொய்லினாவின் அலுவலகம் அவரது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி நடந்து வருவதாகக் கூறியது;[4] இருப்பினும், அக்டோபர் 13 அன்று, ஒரு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராசொய்லினா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவித்தார்.[5] அன்றைய நாள் பிற்பகுதியில் ராசொய்லினா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அவர் "உயிருக்குப் பயந்து" தப்பி ஓடிவிட்டதாகக் கூறினார், ஆனால் அவர் "மடகாஸ்கரை அழிக்க அனுமதிக்க மாட்டேன்" என்று கூறி, பதவி விலக மறுத்துவிட்டார்.[5][6] அவர் தேசிய சட்டமன்றத்தைக் கலைக்க முயன்ற பிறகு, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[7] இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தது.[8]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ராசொய்லினா 1994 முதல் 2000 வரை நகரில் களியாட்ட விழாக்களை நடாத்தும் தொழிலை மேற்கொண்டிருந்தார். தொலைக்காட்சி, மற்றும் வானொலி நிலையங்களையும் இவர் நடத்தி வருகிறார். டிசம்பர் 2007 இல் இவர் தலைநகர் அண்டனானரீவோவின் மேயராக 63.3 விழுக்காடு வாக்குகளினால் தெரிவானார்.
2009 புரட்சி
[தொகு]டிசம்பர் 2008 இல் இவரது வைவா என்ற தொலைக்காட்சியில் முன்னாள் அதிபர் ஒருவரின் நேர்காணலை ஒளிபரப்பியதற்காக இத்தொலைக்காட்சி நிறுவனத்தை மூட சனாதிபதி உத்தரவிட்டார். இந்நடவடிக்கையை எல்லைகளற்ற செய்தியாளர்கள் கண்டித்து அறிக்கை விட்டிருந்தார்கள்[9].
சனவரி 31, 2009 இல் ராசொய்லினா முழு மலகாசிக் குடியரசுக்கும் தானே தலைவர் என ஒருதலைப்பட்சமாக அறிவித்தார். அத்துடன் சனாதிபதி தனது பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் அறிவித்தார்[10]. பெப்ரவரி 3 இல் ராசொய்லினா மேயர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதனை ராசொய்லினா ஏற்க மறுத்து விட்டார்[11].
இதைத் தொடர்ந்து நாட்டில் வன்முறைகள் தலைதூக்கின. பெப்ரவரி மாதத்திலிருந்து அங்கு நடைபெற்றுவரும் வன்முறைகளில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, கொள்ளைச் சம்பவங்களும் பெருமளவில் இடம்பெற்றன. இந்நிலையில், தலைநகரின் மத்தியிலுள்ள ஜனாதிபதி மாளிகையும் மத்திய வங்கியையும் கிளர்ச்சிப் படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குடியரசுத் தலைவராதல்
[தொகு]நாட்டில் இடம்பெற்ற பெரும் கிளர்ச்சியை அடுத்து சனாதிபதி மார்க் ரவலோமனானா தாம் பதவி விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து ராசொய்லினாவை ஆட்சி அமைக்குமாறு இராணுவம் கேட்டுக் கொண்டதை அடுத்து ராசொய்லினா மார்ச் 18 ஆம் நாளன்று குடியரசுத் தலைவரானார். இவர் 2011 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப் படும் வரையில் நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவியில் இருப்பார் என இராணுவம் அறிவித்தது. ஜூன் 2023 இல், பிரெஞ்சு குடியுரிமையின் வெளிப்பாடு பாராளுமன்ற விசாரணையைத் தொடங்க வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து பிரான்சில் உள்ள மலகாசி புலம்பெயர்ந்த குடிமக்கள் குழு உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தை கேள்விக்குள்ளாக்கியது. மே 2025 இல், மலகாசி நீர்நிலைகளின் எல்லையில் உள்ள பிரெஞ்சு தீவுகளான சிதறடிக்கப்பட்ட தீவுகளுக்குச் செல்லும் தனது விருப்பத்தை ஆண்ட்ரி ராஜோலினா மீண்டும் உறுதிப்படுத்தினார், அதே நேரத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய சகாப்தத்திற்கு முந்தைய ஆப்பிரிக்காவில் பல தசாப்தங்களாக நீடிக்கும் இந்த சர்ச்சையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madagascar president sacks government over deadly protests" (in en). Le Monde. 29 September 2025. https://www.lemonde.fr/en/le-monde-africa/article/2025/09/29/madagascar-s-anti-government-protests-flare-up-as-police-respond-with-tear-gas_6745896_124.html.
- ↑ Kyekyeku, Kofi Oppong (30 September 2025). "Deadly youth-led protests force Madagascar's president to fire the prime minister and his government" (in en). Face2Face Africa. https://face2faceafrica.com/article/deadly-youth-led-protests-force-madagascars-president-to-fire-the-prime-minister-and-his-government.
- ↑ "Madagascar president refuses to step down as antigov't protests continue" (in en). Al Jazeera. 5 August 2025. https://www.aljazeera.com/news/2025/10/3/madagascar-president-refuses-to-step-down-amid-deadly-nationwide-protests.
- ↑ Awami, Sammy; Chothia, Farouk (October 12, 2025). "Madagascar presidency says attempt to seize power under way". BBC News. https://www.bbc.com/news/articles/cd070pn4g07o.
- ↑ 5.0 5.1 Tétaud, Sarah; Imray, Gerald (13 October 2025). "Madagascar's president says he fled the country in fear for his life after military rebellion". AP NEWS. https://apnews.com/article/madagascar-coup-rajoelina-soldiers-military-africa-b17e7f78a6b0d4abf82a4a19a7a77a05.
- ↑ Rabary, Lovasoa; Cocks, Tim; Paravicini, Giulia (13 October 2025). "Madagascar's president has left the country after Gen Z protests, officials say". Reuters. https://www.reuters.com/world/africa/madagascar-president-rajoelina-address-nation-monday-evening-2025-10-13/.
- ↑ "Madagascar's National Assembly votes to impeach president". Channel News Asia. 14 October 2025. https://www.channelnewsasia.com/world/madagascar-president-andry-rajoelina-impeached-protests-5401501.
- ↑ Rabary, Lovasoa; Cocks, Tim (14 October 2025). "Madagascar's military takes power, says colonel". Reuters. https://www.reuters.com/world/asia-pacific/madagascars-president-dissolves-national-assembly-escalating-crisis-2025-10-14/.
- ↑ DJ-turned mayor a thorn for government
- ↑ "Mayor 'takes control' in Madagascar", அல் ஜசீரா
- ↑ "Madagascar sacks capital city mayor", AFP, 3 February 2009.