உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக்
Anders Behring Breivik
ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக் (2011)
பிறப்பு13 பெப்ரவரி 1979 (1979-02-13) (அகவை 45)[1]
ஓசுலோ, நோர்வே[2]
மற்ற பெயர்கள்ஆண்ட்ரூ பெர்விக்,[3] சிகுர்ட் (யோர்சால்பர்)
இனம்நோர்வே நாட்டினர்
குடியுரிமைநோர்வே நாட்டினர்
அறியப்படுவது2011 நோர்வே தாக்குதல்கள்
சமயம்கிறித்தவம்[4]

ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக் (Anders Behring Breivik, பிறப்பு 13 பெப்ரவரி 1979)[1] நோர்வே நாட்டு வலதுசாரி தீவிரவாதியும்[5] சூலை 22, 2011 அன்று அந்நாட்டுத் தலைநகர் ஓசுலோவில் நடந்த இரட்டைத் தாக்குதல்களில் குற்றமிழைத்தவராக ஒப்புக்கொண்டவரும் ஆவார்[6][7]. இந்த இரட்டைத் தாக்குதல்களில் அரசு அலுவலக கட்டிடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால் எட்டு பேரும் உதயா தீவில் நோர்வே தொழிலாளர் கட்சியின் இளந்தொழிலாளர் அணியின் முகாமில் நடத்தியத் துப்பாக்கிச்சூட்டில் 69 பேரும் கொல்லப்பட்டனர்.[8][9][10]

பிரீவிக்கின் வலதுசார்பு போராட்டக்கொள்கள் அவராலும் பிறராலும் எழுதி தொகுக்கப்பட்டு தாக்குதல் நிகழ்ந்த நாளன்று மின்னூடகமாக பிரீவிக்கால் தனது ஆங்கிலப் புனைப்பெயரில்[11][12] வெளியிடப்பட்ட[13] 2083 – ஓர் ஐரோப்பிய விடுதலைப் பிரகடனம் (A European Declaration of Independence) என்ற உரைத்தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த உரைத்தொகுப்பில் அவரது மாற்று இனத்தினரிடமுள்ள அச்சம், வெளிப்படுகிறது; பண்பாட்டு பழமைவாதம், வலதுசார்பு பரப்புரை, தீவிர தேசியவாதம் மற்றும் இசுலாமியக் காழ்ப்புணர்வை ஆதரிக்கிறது.[14] மேலும் பன்முக பண்பாட்டையும் இசுலாம் மற்றும் அராபிய ஐரோப்பாவை அழித்து கிறித்தவ ஐரோப்பாவை நிலைநாட்டுவதை நோக்கமாக விவாதிக்கிறது.[15][16][17]

தாம் "கொடூரமான ஆனால் தேவையான" நடவடிக்கை எடுத்ததாக ஒப்புக்கொள்ளும் பிரீவிக் இவற்றை குற்றங்களாக ஏறக மறுத்துள்ளார்.[18][19] தனக்கு நோர்வேயிலும் பன்னாட்டளவிலும் உள்ள வலதுசார் அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதென்றும்[20][21] தான் சார்ந்துள்ள பன்னாட்டு இசுலாமிய எதிர்ப்பு பிணையத்தில் இருக் குழுக்கள் நோர்வேயிலும் மேலும் பல பிற நாடுகளிலும் இயங்குவதாகவும் கூறியுள்ளார்.இவற்றை காவல்துறை நம்பாதபோதும் மறுப்பெதுவும் வெளியிடவும் இல்லை.[19]

சூலை 25, 2011 அன்று பிரீவிக் குற்றவியல் சட்டத்தின் தீவிரவாதச் செயல்களான "சமூகத்தின் அடிப்படை செயல்களை குலைப்பதாக அல்லது அழிப்பதாகவும்" "மக்களிடையே பெரும் பயத்தை உண்டாக்கியதாகவும்" குற்றம் சாத்தப்பட்டு[19] நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பாக எட்டு வாரங்களுக்கு சிறையிலடைக்கப்பட்டார்.[9][22]

2012 ஆகத்து 24 இல் ஒசுலோ நீதிமன்றம் ஆண்டர்சு பிரீவிக் 77 பேரைக் கொன்ற குற்றவாளி எனவும், அவர் சிறந்த மனநிலையுடனேயே இக்குற்றங்களைப் புரிந்துள்ளார் எனவும் தீர்ப்பளித்து அவருக்கு 21 ஆண்டுகள் தடுப்புக் காவல் சிறைத்தண்டனை விதித்தது. அத்துடன் அவர் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சிறையில் இருக்க வேண்டும் எனவும், அதற்கு மேலும் அவர் சமூகத்திற்கு ஒவ்வாதவராக இருக்கும் பட்சத்தில் சிறைத்தண்டனை மேலும் நீடிக்கலாம் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதுவே நோர்வேயில் அளிக்கக்கூடிய அதிகபட்சத் தண்டனை ஆகும்[23]. நோர்வே நீதிமன்றம் சட்டபூர்வமானது அல்ல எனத் தான் கருதுவதால், மேன்முறையீடு செய்யப்போவதில்லை என பிரீவிக் தெரிவித்தார்[24].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Rayment, Sean (25 July 2011). "Modest boy who became a mass murderer". Sydney Morning Herald. http://www.smh.com.au/national/modest-boy-who-became-a-mass-murderer-20110724-1hvh0.html. பார்த்த நாள்: 25 July 2011. 
  2. "Dagens navn". Aftenposten, morgen: p. 10. 15 February 1979. "Aker hospital, Oslo, 13. February 1979. A boy. Name of parents. In Norwegian: (Aker sykehus, 13. ds.: En gutt. Wenche og Jens Breivik)" 
  3. Erlanger, Steven; Shane, Scott (23 July 2011). "Christian Extremist Charged in Norway". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2011/07/24/world/europe/24oslo.html?_r=1&hp. பார்த்த நாள்: 23 July 2011. 
  4. Is Anders Breivik A 'Christian Terrorist'?. Huffington Post. "At the age of 15 I chose to be baptised and confirmed in the Norwegian State Church ... I consider myself to be 100% Christian."
  5. "Man held after Norway attacks right-wing extremist: report". Reuters. 22 July 2011 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924154311/http://www.reuters.com/article/2011/07/22/us-norway-gunman-idUSTRE76L6LZ20110722. பார்த்த நாள்: 22 July 2011. 
  6. "Norway suspect admits responsibility". Sky News. Archived from the original on 26 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Slik var dramaet på Utøya". Verdens Gang. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  8. Gavin Hewitt. "Norway gunman 'has accomplices'". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-07-27.
  9. 9.0 9.1 Steven Erlanger and Alan Cowell (25 July 2011). "Norway suspect hints that he did not act alone". The New York Times. http://www.nytimes.com/2011/07/26/world/europe/26oslo.html?hp. 
  10. "Death Toll in Norway Attacks Rises to 77". ABC News. 29 July 2011. பார்க்கப்பட்ட நாள் 29 July 2011.
  11. AVKRISTINA OVERN  . "Var aktiv i norsk antiislamsk organisasjon - Nyheter - Innenriks". Aftenposten.no. பார்க்கப்பட்ட நாள் 2011-07-27.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  12. Bjoern Amland and Sarah Dilorenzo (24 July 2011). "Lawyer: Norway suspect wanted a revolution". Forbes. Associated Press. http://www.forbes.com/feeds/ap/2011/07/24/general-eu-norway-explosion_8581470.html. பார்த்த நாள்: 24 July 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  13. Kumano-Ensby, Anne Linn (23 July 2011). "Sendte ut ideologisk bokmanus en time før bomben" (in Norwegian). NRK News. http://www.nrk.no/nyheter/norge/1.7724781. பார்த்த நாள்: 23 July 2011. 
  14. eurasiareview.com. 26 July 2011. http://www.eurasiareview.com/norway%E2%80%99s-bomber-should-leave-the-balkans-alone-oped-26072011/ title=Norway’s Bomber Should Leave The Balkans Alone. [தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Norwegian Massacre Gunman was a Right-Wing Extremist who hated Muslims". டெய்லி மெயில். 24 July 2011. http://www.dailymail.co.uk/news/article-2017851/Norway-attacks-gunman-Anders-Behring-Breivik-right-wing-extremist-hated-Muslims.html. 
  16. Norwegian Crime and Punishment by Debra J. Saunders, San Francisco Chronicle, 26 July 2011 ~ "... the anti-multiculturalism, anti-Muslim and anti-Marxist message of his 1,500-page manifesto."
  17. Goodman, J. David (23 July 2011). "At Least 80 Are Dead in Norway Shooting". The New York Times. http://www.nytimes.com/2011/07/23/world/europe/23oslo.html. பார்த்த நாள்: 23 July 2011. 
  18. "Suspect mass murderer Anders Behring Breivik denies criminal responsibility". Herald Sun. 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2011-07-27.
  19. 19.0 19.1 19.2 Reuters (26 July 2011). "Norway massacre suspect appears to be insane, his lawyer says". Haaretz இம் மூலத்தில் இருந்து 27 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110727132425/http://www.haaretz.com/news/international/norway-massacre-suspect-appears-to-be-insane-his-lawyer-says-1.375379. 
  20. Craig Murray. "Norwegian Killer Linked to Tea Party and EDL". Craig Murray.
  21. "CH4, 25th July 2011". Channel4.com. 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2011-07-27.
  22. "Court ruling in Norwegian from the arraignment hearing in ''Oslo tingrett'' (Oslo District Court), 25 July 2011" (PDF). Archived from the original (PDF) on 2012-04-27. பார்க்கப்பட்ட நாள் 2011-07-27.
  23. Norway killer Anders Breivik ruled sane, given 21-year prison term, சிஎனென், ஆகத்து 24, 2012
  24. Lippestad: – Breivik bekrefter at han ikke anker, TV2, 24 ஆகத்து 2012

வெளியிணைப்புகள்

[தொகு]