உள்ளடக்கத்துக்குச் செல்

2011 நோர்வே தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2011 நோர்வே தாக்குதல்கள் என சூலை 22,2011 அன்று நோர்வேயில் அரசு அலுவலகங்கள் மீதும் அரசியல் கட்சியொன்றின் வேனிற்கால முகாம் மீதும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரட்டைத் தீவிரவாத வன்முறைகள் குறிப்பிடப்படுகின்றன. முதலாவதாக மத்திய ஐரோப்பிய வேனில் நேரப்படி 15:25:19 மணிக்கு மகிழுந்து ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்திற்கு வெளியே அரசுச் செயலகக் கட்டிட வளாகத்தில் வெடித்தது.[1][2] இந்த குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.

இரண்டாவது தாக்குதல் முதல் நிகழ்விற்கு இரண்டுமணிக்கூறுகளுக்கு பின்னர் உதோயா தீவில் நோர்வேயின் தொழிலாளர் கட்சி தனது இளைஞரணிக்காக ஏற்பாடு செய்திருந்த வேனிற்கால முகாமில் நடந்தது. காவல்துறையினரைப் போன்று உடையணிந்திருந்த நபர் ஒருவர் தனது துப்பாக்கியால் கூடியிருந்தவர்களைச் சரமாறியாக சுட 69 பேர் கொல்லப்பட்டனர்.[3][4] இவர்களில் நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கின் அண்மித்த நண்பர்களும் நாட்டரசி மெட் மாரிட்டின் ஒன்றுவிட்ட சகோதரரும் அடக்கமாகும்.[5] இந்த பெருந்திரள் கொலைக்குக் காரணமாக 32 அகவை நிரம்பிய வலதுசாரி தீவிரவாதி ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக்கை நோர்வே காவல்துறை கைது செய்தது[6][7]; பின்னர் அலுவலக வளாக குண்டு வெடிப்பிற்கும் இவரே காரணம் என குற்றம் சாட்டியது.[8] ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன் நோர்வேக்கு முழுமையான ஆதரவை வெளியிட்டன.

உதோயாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, பதியப்பட்ட வரலாற்றில் ஒரு தனிமனிதனால் கூடுதலான மக்கள் கொல்லப்பட்ட ஓர் நிகழ்வாகும்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eksplosjonen i Oslo sentrum 22. juli 2011" (in Norwegian). 23 July 2011. Archived from the original on 17 April 2012. பார்க்கப்பட்ட நாள் 1 August 2011. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. Beaumont, Peter (22 July 2011). "Norway attacks suggest political motive". தி கார்டியன் (UK) இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110722172158/http://www.guardian.co.uk/world/2011/jul/22/oslo-bomb-suspicion-islamist-militants. பார்த்த நாள்: 22 July 2011. 
  3. "Terrorofrene på Utøya og i Oslo". Verdens Gang (in Norwegian). Schibsted ASA. Archived from the original on 9 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  4. "Navn på alle terrorofre offentliggjort". Verdens Gang (in Norwegian). Schibsted ASA. 29 July 2011. Archived from the original on 23 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Norway killings: Princess's brother Trond Berntsen among dead". Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/norway/8659298/Norway-killings-Princesss-brother-Trond-Berntsen-among-dead.html. 
  6. "Man held after Norway attacks right-wing extremist: report". Reuters. 22 July 2011 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924154311/http://www.reuters.com/article/2011/07/22/us-norway-gunman-idUSTRE76L6LZ20110722. பார்த்த நாள்: 22 July 2011. 
  7. Skevik, Erlend; Jørstad, Atle; Stormoen, Stein-Erik (22 July 2011). "Storberget: - Den pågrepne er norsk" (in Norwegian). VG Nett (NO). http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10080602. பார்த்த நாள்: 22 July 2011. 
  8. "Scores killed in Norway attack". BBC (UK). 23 July 2011. http://www.bbc.co.uk/news/world-europe-14259356. பார்த்த நாள்: 23 July 2011. "We have no more information than... what has been found on [his] own websites, which is that it goes towards the right and that it is, so to speak, Christian fundamentalist." 
  9. "Norwegian Gunman Confesses -- Deadliest Attack By A Single Gunman In History". Radar Online. July 24, 2011. பார்க்கப்பட்ட நாள் July 29, 2011.

வெளியிணைப்புகள்

[தொகு]

ஒளிப்படங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2011_நோர்வே_தாக்குதல்கள்&oldid=3540589" இலிருந்து மீள்விக்கப்பட்டது